அரசியலமைப்பை பாதுகாக்க ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதலை மறுக்க முடியும்: மத்திய அரசு வாதம்

புதுடெல்லி: சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கான ஒப்புதலை ஆளுநர் மறுக்க முடியும் என்றும், அரசியலைப்பை பாதுகாக்கும் நோக்கில் அவர் இவ்வாறு செயல்பட முடியும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் தனது வாதத்தில் தெரிவித்துள்ளார். மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர்கள் மற்றம் குடியரசு தலைவர் ஆகியோருக்கு கால நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி, பதில் கோரி … Read more

வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார் பிரதமர் மோடி: இமாச்சல், பஞ்சாபுக்கு ரூ.3,100 கோடி ஒதுக்கீடு

புதுடெல்லி: இ​மாச்​சலப் பிரதேசம் மற்​றும் பஞ்​சா​பில் வெள்ள பாதிப்பு பகு​தி​களை பிரதமர் மோடி நேற்று பார்​வை​யிட்​டு, மீட்பு பணி மற்​றும் நிவாரண நடவடிக்​கைகள் குறித்து உயர் அதி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்​தி​னார். இமாச்​சலப் பிரதேசம், உத்​த​ராகண்ட் ஆகிய மாநிலங்​களில் கன மழை காரண​மாக வெள்​ளப் பெருக்கு மற்​றும் நிலச்​சரிவு ஏற்​பட்​டது. பஞ்​சாப் மாநிலத்​தில் பெய்த கன மழை காரண​மாக மாநிலத்​தின் பல பகு​தி​களில் வெள்​ளம் சூழ்ந்​தது. டெல்​லி​யில் நேற்று காலை குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் ஓட்​டுப்​போட்ட பிரதமர் … Read more

“வர்த்தக தடைகளை தகர்க்க உங்களுடன் பேச விரும்புகிறேன்” – ட்ரம்ப் அழைப்பு; மோடி சொன்னது என்ன?

புதுடெல்லி: இந்தியாவுடன் மீண்டும் வர்த்தகப் பேச்சுவார்த்தை தொடர்வதாகவும், பிரதமர் மோடியுடன் பேசுவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதற்கு பிரதமர் நரேந்திர மோடியும் இசைவு தெரிவித்துள்ளார். உலகளவில் அமெரிக்காவின் வர்த்தக கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில், பல்வேறு நாடுகள் மீது அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த சில மாதங்களாக கடுமையான வரிகளை விதித்து வருகிறார். இந்த நிலையில், இந்தியப் பொருட்களுக்கு ஏற்கெனவே 25 சதவீத வரி விதித்த ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் … Read more

‘நியாயமாக, பாரபட்சமின்றி செயல்படுங்கள்’ – சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை மேற்கோள் காட்டி சிபிஆருக்கு காங். வாழ்த்து

புதுடெல்லி: முன்னாள் குடியரசு தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனைப் போல நியாயமாக, பாரபட்சமின்றி சி.பி. ராதாகிருஷ்ணன் செயல்பட வேண்டும் என காங்கிரஸ் வாழ்த்து தெரிவித்துள்ளது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதை அடுத்து, அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு … Read more

சிபிஆருக்கு ‘மனசாட்சியுடன்’ வாக்களித்த இண்டியா கூட்டணி எம்பிக்களுக்கு சிறப்பு நன்றி: கிரண் ரிஜிஜு

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் என்டிஏ கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ‘மனசாட்சியுடன்’ வாக்களித்த இண்டியா கூட்டணி எம்பிக்களுக்கு சிறப்பு நன்றி என்று பாஜக மூத்த தலைவரும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சருமான கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் 767 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில், 452 வாக்குகள் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கும், 300 வாக்குகள் சுதர்சன் ரெட்டிக்கும் கிடைத்தன. மீதமுள்ள 15 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. நேற்று … Read more

ஓட்டல் சமையல் தொழிலாளிக்கு ரூ.46 கோடி வருமான வரி நோட்டீஸ்

போபால்: மத்​திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்ட நெடுஞ்​சாலை​யில் உள்ள ஒரு உணவகத்​தில் சமையல​ராக பணிபுரிந்து வருபவர் ரவிந்​தர் சிங் சவு​கான் (30). இவருக்கு கடந்த ஏப்​ரல் 9-ம் தேதி வரு​மான வரித் துறையி​லிருந்து ஒரு நோட்​டீஸ் வந்​துள்​ளது. அவருக்கோ அவரது மனை​விக்கோ ஆங்​கிலம் தெரி​யாது என்​ப​தால், அந்த நோட்​டீஸை புறக்​கணித்​து​விட்​டனர். பின்​னர் கடந்த ஜூலை 25-ம் தேதி 2-வது முறை​யாக நோட்​டீஸ் வந்​துள்​ளது. இதையடுத்​து, ஆங்​கிலம் தெரிந்​தவர்​களின் உதவியை நாடி உள்​ளார். அப்​போது, வரு​மான வரித் … Read more

“நேபாளத்தில் அமைதி திரும்ப வேண்டும்” – பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி: நேபாளத்தின் ஸ்திரத்தன்மை, அமைதி மற்றும் செழிப்பு எங்களுக்கு மிகவும் முக்கியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் “இன்றைய சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பிய பிறகு, பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் நேபாளத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை மனதை வேதனைப்படுத்துகிறது. பல இளைஞர்கள் உயிரிழந்திருப்பது என் இதயத்தை மிகவும் வருத்தப்படுத்துகிறது. நேபாளத்தின் ஸ்திரத்தன்மை, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவை மிக முக்கியமானவை. நேபாளத்தில் உள்ள … Read more

காத்மாண்டு விமான நிலையம் மூடல்: ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் விமான சேவைகள் நிறுத்தம்

புதுடெல்லி: நேபாளத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டுக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. பேஸ்​புக், யூ டியூப், எக்ஸ் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களுக்கு நேபாள அரசு திடீர் தடை விதித்​ததை எதிர்த்து நேற்று நடைபெற்ற வன்முறையில் 19 பேர் உயி​ரிழந்​தனர். 200-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இரண்டாவது நாளாக இன்று போராட்டம் தீவிரமடைந்தது. சமூக ஊடக தடைக்கு எதிரான போராட்டம், ஊழலுக்கு எதிரான போராட்டமாகவும் வலுப்பெற்றதோடு, அரசாங்கத்துக்குள்ளும் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து பிரதமர் கே.பி.சர்மா ஒலி இன்று பிற்பகல் … Read more

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அவர் 452 வாக்குகள் பெற்ற நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளை வசப்படுத்தினார். குடியரசு துணைத் தலைவர் தேர்தல், நாடாளுமன்ற வளாகத்தில் அறை எண் F-101, வசுதா, முதல் மாடி என்ற முகவரியில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி முதல் வாக்கை பதிவு செய்தார். 10 மணிக்கு … Read more

“சிறையில் வாழ முடியவில்லை… எனக்கு விஷம் கொடுங்கள்!” – நீதிபதியிடம் நடிகர் தர்ஷன் முறையீடு

பெங்களூரு: ‘பல நாட்களாக சூரிய ஒளியைப் பார்க்கவில்லை. எனது கைகளில் பூஞ்சை உருவாகியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் என்னால் உயிர் வாழ முடியாது. தயவுசெய்து எனக்கு விஷமாவது கொடுங்கள்” என்று சிறையில் உள்ள நடிகர் தர்ஷன் இன்று நீதிபதியிடம் முறையிட்டார். பிரபல கன்னட நடிகரான தர்ஷன் தனது தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகா சுவாமி என்பவரை கடத்தி கொலை செய்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். … Read more