வானத்தில் இருந்து வந்த ரூ.500 நோட்டுகள்… பண மழையால் பெரிய அதிர்ச்சி – பீகாரில் நடந்தது என்ன?
National News In Tamil: பீகாரில் திடீரென பண மழை பொழிந்த காரணத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
National News In Tamil: பீகாரில் திடீரென பண மழை பொழிந்த காரணத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
திருவனந்தபுரம்: கேரளாவின் பல மாவட்டங்களில் கனமழை தொடர்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் இடுக்கி, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று சிவப்பு எச்சரிக்கையும், மீதமுள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இதனால் பல மாவட்டங்களின் ஆட்சியர்கள் தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்களின்படி, “கேரளா … Read more
புதுடெல்லி: “ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு பிரிவு 370, அப்பிரதேசம் இந்தியாவின் பிற பகுதியில் இருந்து தனியானது என்ற கருத்தை நீண்ட காலமாக உருவாக்கி வந்தது. அப்பிரிவினை அரசு ரத்து செய்ததன் மூலம் அந்தக் கருத்து இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது” என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்குவதற்கான அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ள சல்மான் குர்ஷித், இந்தோனேசியாவில் உள்ள சிந்தனையாளர்கள் … Read more
புதுடெல்லி: ‘‘தேஜஸ் போர் விமானம் உட்பட ராணுவ தளவாட கொள்முதலில், ஒரு ஒப்பந்தமும் குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்றப்படுவதில்லை’’ என சிஐஐ ஆண்டு கூட்டத்தில் பேசிய விமானப்படை தளபதி ஏ.பி.சிங் வேதனை தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய விமானப்படை முக்கிய பங்காற்றியது. தீவிரவாத முகாம்களையும், பாக். விமானப்படை தளங்கள் மீதும் இந்திய போர் விமானங்கள் குண்டு வீசின. இந்தியா மீதான தாக்குதலையும், வான் பாதுகாப்பு படைப் பிரிவுகள் வெற்றிகரமாக முறியடித்தன. இந்நிலையில் இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) … Read more
ஹைதராபாத்: பிஆர்எஸ் கட்சியை பாஜக உடன் இணைக்க தொடர் முயற்சி முன்னெடுக்கப்பட்டதாக தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், பிஆர்எஸ் கட்சியின் மேலவை உறுப்பினருமான கவிதா குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உளள்து. “நான் என் அப்பாவுக்கு நூற்றுக்கணக்கான கடிதங்களை எழுதுகிறேன். அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? நான் எழுதிய கடிதம் எப்படி பொது வெளியில் கசிந்தது. அந்த செயலை செய்தது யார்? அதை ஏன் இதுவரை கண்டறியவில்லை? ஆனால், … Read more
புதுடெல்லி: பனாமா நாட்டில் மோடி அரசின் முடிவுகளை காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பாராட்டியிருப்பதற்கு அவரது கட்சியில் மீண்டும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சசி தரூர் சமீப காலமாக பிரதமர் மோடியையும் மத்திய அரசையும் பாராட்டி பேசி வருகிறார். இதற்கு காங்கிரஸ் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. என்றாலும் சசி தரூர் அதனை கண்டுகொள்வதில்லை. ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளிநாடுகளிடம் விவரிக்கும் எம்.பி.க்கள் குழுவில் காங்கிரஸ் எதிர்ப்பையும் மீறி சசி தரூர் இடம்பெற்றுள்ளார். … Read more
Free Scooty Scheme: 12ஆம் வகுப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்து 65% மதிப்பெண் எடுத்து உயர்க்கல்வி பயின்றால் மாணவிகளுக்கு இலவசமாக ஸ்கூட்டி வழங்கப்படுகிறது.
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஊழல் அதிகரித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி நேற்று குற்றம்சாட்டினார். மேற்குவங்கத்தின் அலிப்பூர்துவாரில் நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அலிப்பூர்துவார் மற்றும் கூச்பெஹார் மாவட்டங்களில் ரூ.1,010 கோடி மதிப்பிலான எரிவாயு விநியோக திட்டத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார். விழாவில் அவர் பேசியதாவது: அண்மையில் மேற்குவங்கத்தின் முர்ஷிதாபாத், மால்டாவில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. அப்பகுதி பொதுமக்கள் மீது கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. அவர்களின் … Read more
புதுடெல்லி: “வணிகத்தைப் பயன்படுத்தி இந்தியா – பாகிஸ்தான் போரை தான் தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த 11 நாட்களில் 8 முறை கூறிவிட்டார். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி முற்றிலும் மவுனமாக இருக்கிறார்” என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், “கடந்த 11 நாட்களில் அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் கத்தார் ஆகிய 3 நாடுகளில் போர் நிறுத்தம் … Read more
மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த ஐந்து நாட்களாக கனமழை தொடர்பான சம்பவங்களால் 16 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் நிலச்சரிவு, இடி, மின்னல் தாக்குதல், மரம் அல்லது கட்டிடம் இடிந்து விழுதல் போன்ற சம்பவங்களால் உயிரிழந்தனர். இந்த ஆண்டு வழக்கத்தை விட 8 நாட்களுக்கு முன்பாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அதன்படி பருவமழை தொடங்கிய மே 24-ல் இருந்தே மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மழை தொடங்கிய … Read more