அக்னிவீர் சர்ச்சை: ராகுல் குற்றச்சாட்டும், இந்திய ராணுவத்தின் விளக்கமும்!

புதுடெல்லி: அக்னிவீர் திட்டத்தில் உயிர்த் தியாகம் செய்பவர்களின் குடும்பத்துக்கு எந்தவித உதவியும் செய்யப்படுவதில்லை என்று ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு இந்திய ராணுவம் விளக்கமளித்துள்ளது. கடந்த ஜூலை 1-ம் தேதியன்று குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசின் அக்னிவீர் திட்டம் குறித்த விமர்சனங்களை முன்வைத்தார். இந்த திட்டத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு மத்திய அரசு எந்தவித ஓய்வூதியமோ அல்லது தியாகி அந்தஸ்தோ வழங்குவதில்லை … Read more

‘புதிய மொந்தையில் பழைய கள்’ – புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் கருத்து

புதுடெல்லி: புதிய குற்றவியல் சட்டங்கள் என்பது புதிய மொந்தையில் பழைய கள் என்பதைப் போன்றது என ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் கருத்து தெரிவித்துள்ளார். புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த சட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர், “மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை, “புதிய மொந்தையில் பழைய கள்” என்று குறிப்பிடலாம். பெயரில் மாற்றம் உள்ளது. ஆனால். அடிப்படையில் … Read more

ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் ராஜினாமா; ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பதவியிலிருந்து சம்பாய் சோரன் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து ஹேமந்த் சோரன் ஆட்சியமைக்க அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் உரிமை கோரினார் ராஞ்சியில் உள்ள பட்காய் என்ற பகுதியில் உள்ள ரூ.266 கோடி மதிப்பிலான 8.86 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத் துறை ஹேமந்த் சோரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. கடந்த ஜனவரி 31ம் தேதி நடத்தப்பட்ட 7 மணி நேர தொடர் விசாரணைக்குப் … Read more

“இது சாணக்கிய நீதி காலம் அல்ல; சமூக நீதியின் காலம்” – அண்ணாமலைக்கு சு.வெங்கடேசன் பதில்

சென்னை: “இது சாணக்கிய நீதி காலம் அல்ல. சமூக நீதியின் காலம், சமத்துவத்தின் காலம்” என்று அண்ணாமலைக்கு சு.வெங்கடேசன் பதில் அளித்துள்ளார். செங்கோல் தொடர்பாக மதுரை எம்பி சு. வெங்கடேசன் தெரிவித்த கருத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அண்ணாமலையின் கருத்துக்கு சு.வெங்கடேசன் பதிலளித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில், “குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான எனது உரை குறித்து நீங்கள் கருத்துத் தெரிவித்துள்ளீர்கள். “செங்கோல் … Read more

மேகாலயாவில் தொடங்கியது இந்தியா – மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சி

புதுடெல்லி: இந்தியா – மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சி இன்று மேகாலயாவில் தொடங்கியது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியா – மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சியான நோமாடிக் எலிபெண்ட்டின் 16-வது பதிப்பு மேகாலயா மாநிலம் உம்ரோயில் உள்ள வெளிநாட்டு பயிற்சி முனையத்தில் இன்று (03.07.2024) தொடங்கியது. இந்த பயிற்சி ஜூலை 16-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 45 வீரர்களைக் கொண்ட இந்தியக் குழுவில், சிக்கிம் சாரணர் இயக்கத்தின் ஒரு பிரிவு மற்றும் … Read more

ஹாத்ரஸ் நெரிசல் சம்பவம் குறித்து நீதி விசாரணை: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

லக்னோ: ஹாத்ரஸ் மாவட்டத்தில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்கத்துள்ளோம் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும், இச்சம்பவத்தை பல கோணங்களில் விசாரிக்க வேண்டியுள்ளதால் நீதி விசாரணை நடத்தவும் மாநில அரசு முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய யோகி ஆதித்யநாத், "மீட்பு நடவடிக்கையில் கவனம் செலுத்துவதே எங்கள் முன்னுரிமை. மொத்தம் 121 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள், உத்தரப் பிரதேசம், ஹரியாணா, மத்தியப் … Read more

“நாட்டு மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்; எங்கள் மீது மட்டுமே..” – பிரதமர் மோடி

புதுடெல்லி: “நாட்டு மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்; எங்கள் மீது மட்டுமே..” என்று மாநிலங்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) உரையாற்றினார். அப்போது அவர், “குடியரசுத் தலைவரின் உரை, நாட்டு மக்களுக்கு உத்வேகமும் ஊக்கமும் அளிக்கக்கூடியதாக இருந்தது. இந்த விவாதத்தில் கடந்த இரண்டரை நாட்களில் சுமார் 70 எம்.பி.க்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். எம்.பி.க்களாகிய நீங்கள் அனைவரும் … Read more

மக்களவை கூட்டத்தொடர் 103% செயல்திறனை பதிவு செய்துள்ளது: ஓம் பிர்லா

புதுடெல்லி: 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் 103% செயல்திறனை பதிவு செய்துள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் நேற்று (ஜூலை 2) ஒத்திவைக்கப்பட்ட நிலையில், புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரின் செயல்திறன் 103 சதவீதமாக பதிவாகி இருப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். மேலும், இந்த கூட்டத்தொடரில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்தும் அவர் விளக்கி உள்ளார். “18வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 24ம் தேதி தொடங்கியது. … Read more

அமர்நாத் யாத்திரை: செயலிழந்த பேருந்தின் பிரேக் – 10 பேர் காயம்

ஜம்மு: காஷ்மீரின் அமர்நாத் குகை கோயிலுக்கு பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டு பனிலிங்கத்தை தரிசித்து வருகின்றனர். இந்தச் சூழலில் அமர்நாத்தில் இருந்து பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூருக்கு சென்று கொண்டிருந்த பேருந்தின் பிரேக் செயலிழந்துள்ளது. அந்த பேருந்தில் பயணித்த 10 பேர் காயமடைந்துள்ளனர். சிலர் ஓடும் பேருந்தில் இருந்து வெளியேறிய காட்சிகளும் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தேசிய நெடுஞ்சாலை 44-ல் நடைபெற்றுள்ளது. 40 பயணிகளுடன் பேருந்து அமர்நாத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்தப் பேருந்தின் பிரேக் செயலிழந்த … Read more

உ.பி. நெரிசல் சம்பவ பலி 134 ஆக அதிகரிப்பு: போலே பாபா தலைமறைவு

புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் ஹாத்ரஸ் சம்பவத்தில் பலி எண்ணிக்கை 134 ஆக அதிகரிதுள்ளது. இதற்கு காரணமான போலே பாபா தலைமறைவாகி உள்ளார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர். நாட்டையே உலுக்கிய துயரச் சம்பவம், உ.பி.யின் மேற்குப்பகுதியிலுள்ள ஹாத்ரஸ் மாவட்டத்தில் நேற்று (ஜூலை 2) நிகழ்ந்தது. ஹாத்ரஸ் மாவட்டத்தின் சிக்கந்தராராவ் தாலுகாவின் முகல்கடி கிராமத்தில் ஆன்மிகக் கூட்டம் நடைபெற்றது. இதை சாக்கார் நாராயண் சாகர் விஷ்வ ஹரி என்பவர் நடத்தி இருந்தார். ஆன்மிகக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு பலியானோர் ர்ண்ணிக்கை … Read more