ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி லஞ்சம்: சமீர் வான்கடே வழக்கை விசாரிக்க புதிய அதிகாரி நியமனம்

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த 2021-ல்,சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் சிலரும் கைதாகினர். மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையின் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டார். இந்நிலையில், ஆர்யன் கானை விடுவிக்க சமீர் வான்கடே ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அவர் மீது 2023 மேமாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. … Read more

"டெக் சிட்டியில் இருந்து டேங்கர் சிட்டி" – பெங்களூரு வளர்ச்சி குறித்து பிரதமர், சித்தராமையா வார்த்தை மோதல்

பெங்களூரு: “பெங்களூருவை டெக் சிட்டியில் இருந்து டேங்கர் சிட்டியாக காங்கிரஸ் கட்சி மாற்றியுள்ளது” என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டிய நிலையில், “பெங்களூருவில் வெள்ளம் ஏற்பட்ட போதும் வறட்சி ஏற்பட்ட போதும் பிரதமர் மோடி எங்கே போனார்?” என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசிய பிரதமர் … Read more

‘‘இன்சுலின் வழங்காமல் கேஜ்ரிவாலை கொல்ல சதி’’ – ராஞ்சி கூட்டத்தில் சுனிதா கேஜ்ரிவால் குற்றச்சாட்டு

ராஞ்சி: “கேஜ்ரிவால் ஒரு சர்க்கரை நோயாளி. அவர் கடந்த 12 ஆண்டுகளாக தினமும் 50 யூனிட் இன்சுலின் எடுத்து வருகிறார். ஆனால் அவருக்கு திகார் சிறையில் இன்சுலின் வழங்கப்படவில்லை. ஏனெனில் அவரை கொல்ல விரும்புகிறார்கள்” என்று ராஞ்சி பொதுக்கூட்டத்தில் பேசிய சுனிதா கேஜ்ரிவால் குற்றம்சாட்டினார். அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் ஹேமந்த் சோரன் ஆகியோர் கைதை கண்டித்து இண்டியா கூட்டணி கட்சியின் கூட்டம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்த ராகுல் காந்தி திடீர் உடல்நலக்குறைவால் … Read more

ஏழைகளின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை மோடி கொண்டு வந்துள்ளார்: அமித் ஷா

புதுடெல்லி: சாதி வெறியை அழித்து, ஒவ்வொரு குடிமகனின் மேம்பாட்டிற்காக பிரதமர் மோடி பாடுபட்டுள்ளார் என்றும், ஏழைகளின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை அவர் கொண்டு வந்துள்ளார் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார். பிஹாரில் (ஏப்., 21) இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஷா, “பிரதமர் மோடி சாதி வெறியை அழித்து, ஒவ்வொரு குடிமகனின் மேம்பாட்டிற்காக பாடுபட்டுள்ளார். ஏழை மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். இன்று லாலு பிரசாத் யாதவும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து பாஜக மற்றும் … Read more

Donkey Milk: கழுதைப் பால் மூலம் கல்லா கட்டும் இளைஞர்… ஒரு மாத வருமானம் இவ்வளவா?

Gujarat Donkey Milk Business: கழுதைப் பாலை விற்பனை செய்து மாதம் 2-3 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டுவதாக குஜராத் இளைஞர் ஒருவர் தனது தொழில் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதுகுறித்து இங்கு காணலாம்.

”மோடியின் ஆட்சியில் ரயிலில் பயணிப்பதே தண்டனையாகிவிட்டது” – வீடியோ பகிர்ந்து ராகுல் சாடல்

புதுடெல்லி: “பிரதமர் மோடியின் ஆட்சியில் ரயிலில் பயணம் செய்வதே தண்டனையாகிவிட்டது” என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஒரு வீடியோவைப் பகிர்ந்து விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “மோடியின் ஆட்சியில் ரயிலில் பயணம் செய்வது தண்டனையாகிவிட்டது. ரயிலில் பொதுப்பெட்டிகளை குறைத்து, எலைட் ரயில்களை மட்டுமே ஊக்குவிக்கும் மோடி ஆட்சியில் அனைத்து தரப்பு பயணிகளும் துன்புறுத்தப்படுகிறார்கள். பணம் கொடுத்து டிக்கெட் பெற்றாலும் அவர்களால் இருக்கைகளில் அமர்ந்து செல்ல முடிவதில்லை. சாமானிய மக்கள் தரையிலும், கழிவறையிலும் … Read more

‘‘இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் சிஏஏ ரத்து செய்யப்படும்’’ – ப. சிதம்பரம்

புதுடெல்லி: “பாஜக நீண்ட காலத்துக்கு அரசியல் கட்சியாக இருக்காது. அது பிரதமர் நரேந்திர மோடியை வழிபடும் தளமாக மாறியுள்ளது” என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் (ஏப்., 21) இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, “இந்தியாவின் மிகப்பெரிய சவால் வேலையின்மை. இதை சிலர் குறைத்து மதிப்பிடுகின்றனர் ஆனால் இது மிகப்பெரிய பிரச்சினை. எனது அனுபவத்தில் இவ்வளவு அதிகமான வேலையின்மை விகிதம் இருந்ததே கிடையாது. பட்டதாரிகள் … Read more

மகாவீர் ஜெயந்தி – குடியரசுத் தலைவர் உள்ளிட்டோர் வாழ்த்து

சென்னை: மகாவீர் ஜெயந்தி நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படும் நிலையில், சமண சமயப் பெருமக்களுக்கு குடியரசுத்தலைவர் திரவுதி முர்மு, தமழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் கட்சித் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக சமண சமூகத்தினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மகாவீர் ஜெயந்தி அகிம்சை மற்றும் இரக்கத்தின் வடிவமான பகவான் மகாவீரரின் பிறந்த நாளைக் குறிக்கிறது. இந்த பண்டிகை நமக்கு … Read more

102 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தலில் 65.5% வாக்குப் பதிவு

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் முதல் கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 102 தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இந்த தொகுதிகளில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப் பதிவின்போது 66 சதவீத வாக்குகள் பதிவாகின. அதைவிட தற்போது அரை சதவீத வாக்குகள் குறைந்துள்ளன. லட்சத்தீவில் 83.88%, திரிபுராவில் 81.5%, சிக்கிமில் 80% வாக்குகள் பதிவாகின. மகாராஷ்டிராவில் 61.2% உத்தர பிரதேசத்தில் 60.3%, ராஜஸ்தானில் … Read more

முதல்வர் பினராயி விஜயன் பாஜகவுடன் சமரசம்: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: கேரளாவின் 20 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வரும் 26-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் கேரளத்தின் பத்தனம்திட்டா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று பேசியதாவது: லைப் மிஷன் வழக்கு, தங்கக் கடத்தல் வழக்கு உள்ளிட்ட பலஊழல் வழக்குகளில் முதல்வர் பினராயி விஜயனின் பெயர் அடிபடுகிறது. ஆனால் அவருக்கு எதிரான எந்தவொரு வழக்கையும் மத்திய பாஜக அரசு எடுக்கவில்லை. சோதனை உள்ளிட்ட எந்த ஒருநடவடிக்கையும் எடுக்கவில்லை. … Read more