ஹர ஹர மஹாதேவா கோஷத்துடன் தொடங்கிய அமர்நாத் யாத்திரை… முழு விபரம் இதோ..!!

அமர்நாத் யாத்திரை முதல் குழு காஷ்மீரில் இருந்து புறப்பட்டது. ஆண்டுதோறும் பனிலிங்கத்தை தரிசிக்க இந்தியாவில் உள்ள பல இடங்களில் இருந்தும், பக்தர்கள் அமர்நாத் செல்வது வழக்கம். 51 சக்தி பீடங்களில் ஒன்றான மகாமாயா சக்தி பீட உறைவிடமான அமர்நாத் குகையில் உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

ஜாமீனில் விடுதலையான ஹேமந்த் சோரனுக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு

ராஞ்சி: நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். ராஞ்சியில் உள்ள பட்காய் என்ற பகுதியில் உள்ள ரூ.266 கோடி மதிப்பிலான 8.86 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத்துறை ஹேமந்த் சோரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. கடந்த ஜனவரி 31ம் தேதி நடத்தப்பட்ட … Read more

எதுவும் மாறாதது போல் செயல்படும் பிரதமர் மோடிக்கு… – சோனியா காந்தி அடுக்கும் குறிப்புகள்

புதுடெல்லி: தேர்தலில் மக்கள் அளித்த செய்தியை பிரதமர் நரேந்திர மோடி புரிந்துகொள்ளவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ‘தி இந்து’ ஆங்கில இதழுக்கு அவர் அளித்துள்ள கட்டுரையின் சுருக்கம்: ஜூன் 4, 2024 அன்று, நம் நாட்டின் வாக்காளர்கள் தெளிவான, உறுதியான தீர்ப்பை வழங்கினார்கள். பிரச்சாரத்தின் போது தன்னை தெய்வீக அம்சம் கொண்டவராக காட்டிக்கொண்ட ஒரு பிரதமருக்கு இது தனிப்பட்ட, அரசியல் மற்றும் தார்மிக தோல்வி. தீர்ப்பின் … Read more

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்‍பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, ஹாசன் ஆகிய மாவட்டங்களில் இடங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்துவருகிறது. குடகு மாவட்டத்தில் தலக்காவிரி, பாகமண்டலா, மடிக்கேரி, வீராஜ்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. இன்று … Read more

கர்நாடகா | சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு – சோகத்தில் மூழ்கிய கிராமம்

ஹாவேரி: கர்நாடக மாநிலம் ஹாவேரியில் நின்றுகொண்டிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பலியானவர்கள் அனைவரும் கர்நாடக மாநிலம் ஷிவ்மோகா மாவட்டத்தில் உள்ள பத்ராவதி தாலுகாவில் உள்ள எம்மேஹட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள். இந்த கிராமத்தை சேர்ந்த ஓட்டுநர் ஆதர்ஷ் (23) என்பவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு டெம்போ டிராவலர் ஒன்றை வாங்கியுள்ளார். இதனையடுத்து கர்நாடகாவின் பெலகாவியில் உள்ள சவதாட்டி … Read more

டெல்லி விமான நிலைய மேற்கூரை விபத்து | எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு – அமைச்சர் விளக்கம்

புதுடெல்லி: டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக பாஜகவை எதிர்க்கட்சிகள் சாடிவருகின்றன. தலைநகர் டெல்லியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டெல்லி விமான நிலைய மேற்கூரை விழுந்து 6 பேர் காயமடைந்துள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். விமான நிலைய மேற்கூரை சரிந்தது மட்டுமின்றி அதனை தாங்கியிருந்த பீமும் விழுந்ததில் பிக்-அப் மற்றும் டிராப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்தன. இந்த … Read more

கர்நாடகாவில் லாரி மீது மினி பஸ் மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழப்பு

ஹாவேரி: கர்நாடக மாநிலம், ஹாவேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மினி பஸ் மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தில், இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் 4 மணியளவில் புனே – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மினி பஸ் மோதிய பயங்கர விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பலத்த காயம் … Read more

டெல்லியில் கனமழை பாதிப்பு: விமான நிலைய மேற்கூரை விழுந்து 3 பேர் உயிரிழப்பு, பலர் காயம்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கனமழை பொழிந்து வருகிறது. இதன் காரணமாக டெல்லி விமான நிலைய மேற்கூரை விழுந்து 6 பேர் காயமடைந்துள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. விமான நிலைய மேற்கூரை சரிந்தது மட்டுமின்றி அதனை தாங்கியிருந்த பீமும் விழுந்ததில் பிக்-அப் மற்றும் டிராப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்தன. இந்த சம்பவம் டெல்லி விமான நிலைய டெர்மினல் 1 பகுதியில் நடந்துள்ளது. மழை … Read more

இந்திய ராணுவத்தில் விரைவில் ரோபோ நாய்கள்: சீன எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு

புதுடெல்லி: இந்திய ராணுவத்தில் விரைவில் ரோபோ நாய்கள் சேர்க்கப்பட உள்ளன. இந்தியாவின் முப்படைகளிலும் அதிநவீன தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் இந்தியராணுவத்தில் ரோபோ நாய்கள் சேர்க்கப்பட உள்ளன. முதல்கட்டமாக 100 ரோபோ நாய்களை தயாரிக்க கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதில் 25 ரோபோ நாய்கள் தயார் செய்யப்பட்டு, பல்வேறு கட்ட பரிசோதனைகளும் நடத்தப்பட்டு உள்ளன. இவை விரைவில் ராணுவத்தில் இணைய உள்ளன. சீன எல்லைப் பகுதிகளில் இந்த ரோபோ நாய்களை பாதுகாப்புப் … Read more

ஓஎம்ஆர் தாள் தொடர்பான குறைகளை தெரிவிக்க கால வரம்பு உள்ளதா? – தேசிய தேர்வு முகமையிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: ஓஎம்ஆர் தாள் தொடர்பான குறைகளை தெரிவிக்க தேர்வர்களுக்கு கால வரம்பு உள்ளதா என்று உச்ச நீதிமன்றம் தேசிய தேர்வு முகமையிடம் நேற்று கேள்வி எழுப்பியது. நீட் தேர்வின் பதில் தாளான ஓஎம்ஆர் தாளின் நகலை தங்களுக்கு வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பிலும், ஒரு தனியார் நீட் பயிற்சி மையம் தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, எஸ்.வி.என்.பாட்டிஅமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பயிற்சி மையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீட் … Read more