2024-ல் உத்தரவாதத்தை கொண்டு வருகிறேன்: பிரதமர் மோடி பேச்சு @ அசாம்
குவாஹாட்டி: மக்களவைத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி நேற்று காலை அசாம் மாநிலம் நல்பாரியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது: இன்று வரலாற்று சிறப்புமிக்க ராம நவமி விழா கொண்டாடப்படுகிறது. 500 ஆண்டுகால காத்திருப்புக்கு பின்னர் பாலராமர் இறுதியாக தனது பிரம்மாண்ட கோயிலில் அமர்ந்துள்ளார். உலகின் புனிதநகரமான அயோத்தியில் உள்ள பால ராமர் கோயிலில் ராமருக்கு சூரிய திலகம் இட்டு கொண்டாடப்பட்டது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்கு தகுதியான வசதிகளை வழங்க தேசிய … Read more