தொலைத் தொடர்பு சேவைகளுக்கான அலைக்கற்றை ஏலம்: மத்திய அரசு தொடங்கியது

புதுடெல்லி: தொலைத் தொடர்பு சேவைகளுக்கான அலைக்கற்றை ஏலத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இது தொடர்பாக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தற்போதுள்ள தொலைத்தொடர்பு சேவைகளை மேம்படுத்தவும், சேவைகளின் தொடர்ச்சியைப் பராமரிக்கவும் அலைக்கற்றை ஏலத்தை அரசு இன்று (ஜூன் 25) நடத்துகிறது. இது அனைத்து குடிமக்களுக்கும் குறைந்த கட்டணத்திலான, அதிநவீன உயர்தர தொலைத் தொடர்பு சேவைகளை எளிதாக்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப உள்ளது. தொலைத் தொடர்புத் துறை அலைக்கற்றை ஏலத்துக்கான விண்ணப்பங்களை அழைக்கும் … Read more

புனே சொகுசு கார் விபத்து: சிறுவனை விடுவிக்க மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மது போதையில் சொகுசு காரை இயக்கி இருவர் உயிரிழப்புக்கு காரணமான 17 வயது சிறுவனை விடுவிக்க மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புனேவில் கடந்த மே மாதம் போர்சே ‘Porsche’ சொகுசு கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவர் உயிரிழந்தனர். அந்தக் காரை 17 வயது சிறுவன் ஓட்டினார். அவரை விபத்து நிகழ்ந்த இடத்தில் பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். பின்னர் காவலர்கள் வசம் ஒப்படைத்தனர். இருந்தும் விபத்து ஏற்படுத்திய … Read more

“கட்சியை பலவீனப்படுத்த நினைத்தவர்களை மீண்டும் சேர்க்க மாட்டேன்’’ – சரத் பவார்

மும்பை: கட்சியை பலவீனப்படுத்த நினைத்தவர்களை மீண்டும் கட்சிக்குள் சேர்க்கப்பட மாட்டார்கள் என தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக சரத் பவார் இருந்த நிலையில், அவரது அண்ணன் மகனான அஜித் பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜக கூட்டணியில் இணைந்து மகாராஷ்டிர துணை முதல்வராக பொறுப்பேற்றார். அஜித் பவார் தலைமையில் உள்ள கட்சிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றதை அடுத்து, சரத் … Read more

ரேபரேலி எம்.பி.யாக பதவியேற்ற ராகுல் காந்தி: தமிழக எம்.பி.க்கள் தமிழில் உறுதிமொழி ஏற்பு

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, திமுக மூத்த தலைவர் கனிமொழி உள்ளிட்டோர் மக்களவை உறுப்பினர்களாக இன்று பதவியேற்றுக் கொண்டனர். தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் பலரும் தமிழில் உறுதிமொழி கூறி மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டனர். 18-வது மக்களவைக்கான தேர்தல் நடந்து முடிந்து மோடி அரசு மீண்டும் பதவியேற்றதை அடுத்து, புதிய மக்களவையின் முதல் கூட்டம் நேற்று (ஜூன் 24) கூடியது. நேற்றைய தினம் பிரதமர் மோடி உள்பட 280 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். … Read more

'ஸ்டாலின், உதயநிதி வாழ்க…' பதவியேற்பில் திமுக எம்பிகள் கோஷம் – முழக்கமிடாத இந்த 3 பேர்!

Tamil Nadu MPs Oath Taking Ceremony: மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் இன்று பதவியேற்ற நிலையில், அதில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை இங்கு காணலாம்.

கேஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு தடை – டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை தடை செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த விசாரணை நீதிமன்றம் கடந்த 20ம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, திகார் சிறையில் இருந்து கேஜ்ரிவால் வெளியே வருவார் … Read more

கனமழையால் ஒழுகும் அயோத்தி ராமர் கோயிலின் கருவறை: அர்ச்சகர்கள் புகார்

அயோத்தி: கனமழை காரணமாக உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள அயோத்தி ராமர் கோயிலின் கருவறையின் மேற்கூரையின் மழைநீர் ஒழுகுவதாக கோயிலின் அர்ச்சகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கோயிலின் வடிகால் வசதியும் முறையாக இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதன் காரணமாக பகவான் ராமருக்கு அபிஷேகம் செய்வது மிகுந்த சிரமமான காரியமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சாரிய சத்யேந்திர தாஸும் இதனை உறுதி செய்துள்ளார். மழை பெய்த இரவுக்குப் பிறகு அர்ச்சகர்கள் கோயிலைத் திறந்த போது மழைநீர் … Read more

மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா, கே.சுரேஷ் போட்டி

புதுடெல்லி: மக்களவை சபாநாயகர் பதவிக்கு முதல்முறையாக போட்டி ஏற்பட்டுள்ளது. ஆளும் கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்க்கட்சிகள் சார்பில் கே.சுரேஷூம் போட்டியிடுகின்றனர். 18-வது மக்களவைக்கான தேர்தல் நடந்து முடிந்து மோடி அரசு மீண்டும் பதவியேற்றதை அடுத்து, புதிய மக்களவையின் முதல் கூட்டம் நேற்று (ஜூன் 24) கூடியது. நேற்றைய தினம் பிரதமர் மோடி உள்பட 280 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தற்காலிக மக்களவை தலைவர் பர்த்ருஹரி மஹதாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். … Read more

“எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவி வழங்கினால் மட்டுமே அரசுக்கு ஆதரவு” – ராகுல் காந்தி

புதுடெல்லி: “எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்கினால், மக்களவை சபாநாயகர் தேர்வில் அரசுக்கு ஆதரவளிப்போம்.” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், சபாநாயகர் பதவிக்கு யார் நிறுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த முறை தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைத்தால் தனிப்பட்ட முறையில் பாஜக சபாநாயகரை தேர்வு செய்தது. ஆனால் இம்முறை பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் கூட்டணி ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளதால் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சபாநாயகர் பதவி கொடுக்கப்படலாம் … Read more

ஓம் பிர்லா vs கொடிக்குன்னில் சுரேஷ் – சபாநாயகர் தேர்தலில் காங்கிரஸ் போடும் பிளான் என்ன?

Lok Sabha Speaker Election: மக்களவை சபாநாயகர் தேர்தலில் பாஜகவின் ஓம் பிர்லா போட்டியிட உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் கொடிக்குன்னில் சுரேஷ் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.