மீண்டும் பூமிக்கு திரும்பும் ஏவுகலன்: 3-வது முறையும் இஸ்ரோ பரிசோதனை வெற்றி
சித்ரதுர்கா: விண்ணுக்கு செயற்கைக்கோள்களை சுமந்து சென்று மீண்டும் பூமிக்கு திரும்பும் புஷ்பக் ஏவுகலன் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம் மீண்டும் பயன்படுத்தக்கூடிய புஷ்பக் ஏவுகலனின் (Reusable Launch Vehicle) தரையிறங்கும் பரிசோதனையை மூன்றாவது முறையாக வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது இஸ்ரோ. RLV LEX-03 என அழைக்கப்படும் தரையிறங்கும் பரிசோதனையானது கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள ஏரோநாட்டிகல் டெஸ்ட் ரேஞ்சில் (ATR) இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.10 மணிக்கு நடத்தப்பட்டது. புஷ்பக் என்று பெயரிடப்பட்ட இறக்கைகள் கொண்ட … Read more