“அராஜகம், உறுதியின்மை, ஊழலுக்கானது காங்கிரஸுக்கான வாக்குகள்!” – எடியூரப்பா
பெங்களூரு: காங்கிரஸுக்கு அளிக்கப்படும் வாக்குகள் என்பது அராஜகம், பொருளாதார திவால், ஊழல், உறுதியற்ற தன்மை ஆகியவற்றுக்கானவையாக இருக்கும் என்றும், அது நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பை ஆபத்தில் தள்ளும் என்றும் பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா விமர்சித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தலைமை முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. பிரச்சாரத்தின்போது ராகுல் காந்தியின் பெயரைக் கூற அவரது கட்சியைச் சேர்ந்த யாரும் தயாராக இல்லை. இந்தத் தேர்தல் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கானது. கர்நாடகாவில் … Read more