சாதிவாரி கணக்கெடுப்பு முதல் அக்னிபாத் ரத்து வரை – சமாஜ்வாதி தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்

லக்னோ: உத்தரப் பிரதேச பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாதி கட்சி இன்று (ஏப்.10) தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும், பயிர்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகளின்படி குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும் முதலான முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், உத்தரப் பிரதேச பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாதி கட்சி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. லக்னோவில் … Read more

‘தீமை, வஞ்சகத்துக்கு எதிரான போருக்கு தயாராகுங்கள்’ – மக்களிடம் முறையிட்ட ஜெகன்

குண்டூர்: ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல் ஒருசேர நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தேர்தலை முன்னிட்டு பேருந்து யாத்திரையை மேற்கொண்டு வருகிறார் அந்த மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. புதன்கிழமை அன்று மாநிலத்தின் பாலநாடு மாவட்டத்தில் அவர் யாத்திரை மேற்கொண்டார். அதன்போது ஜன சேனா மற்றும் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். முதல்வர் ஜெகன் முன்னிலையில் இந்த இணைப்பு நடைபெற்றது. தொடர்ந்து … Read more

“இந்தியா – சீனா இடையிலான உறவு முக்கியமானது” – பிரதமர் மோடி

புதுடெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நிலையான உறவு என்பது இரு நாடுகளுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகத்துக்கும் முக்கியமானது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள பிரதமர் மோடி, இந்தியா – சீனா இடையிலான விரிசல்கள் குறித்து பேசியுள்ளார். அதில் பிரதமர் கூறியதாவது: “இந்தியாவைப் பொறுத்தவரை, சீனாவுடனான உறவு முக்கியமானது மற்றும் தனித்துவமானது. இருதரப்பு உறவில் உள்ள விரிசல்களை சரிசெய்வதற்கு, எல்லையில் நீடித்து வரும் சூழ்நிலையை அவசரமாகத் தீர்க்க வேண்டும் என்பது எனது … Read more

'கச்சத்தீவில் யார் வசிக்கிறார்கள்?' – திக்விஜய் சிங் கேள்வியும், கங்கனா எதிர்வினையும்

புதுடெல்லி: “கச்சத்தீவில் யார் வசிக்கிறார்கள்? பிரதமர் ஏன் இப்படி அடி, முடி தெரியாமல் பேசுகிறார்?” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் எழுப்பிய கேள்விக்கு கங்கனா ரணாவத் பதிலடி கொடுத்துள்ளார். சமீப காலமாக கச்சத்தீவு விவகாரம் தேசிய அரசியலில் விவாதப் பொருளாகியுள்ளது. பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், கச்சத்தீவு விவகாரம் குறித்து தனது விமர்சனத்தை இன்றும் (ஏப்.10) முன்வைத்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் … Read more

இந்திய ரயில்வேயின் சூப்பர் திட்டங்கள்… Super App… வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்… இன்னும் பல..!!

இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய ரயில்வே நெட்வொர்க் ஆகும். இந்நிலையில், ரயில் பயணிகளுக்கு அனைத்துக்கும் ஒரே இடத்தில் தீர்வை வழங்கும் வகையில் ஒரு விரிவான ‘சூப்பர் செயலி’யை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளது.

“காங்கிரஸால் ராமர் கோயில் கட்டியிருக்க முடியுமா?” – உ.பி. முதல்வர் யோகி

கதுவா: “உத்தரப் பிரதேசத்தில் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த முந்தைய அரசுகள் அராஜகவாதிகளுக்கு ஆதரவு அளித்து வந்த நிலையில், எனது 7 ஆண்டுகால ஆட்சியில் மாநிலத்தில் கலவரமோ, ஊரடங்கு உத்தரவோ நிகழவில்லை” என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் உதாம்பூர் – கதுவா மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ஜித்தேந்திர சிங்கை ஆதரித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: “மாநிலத்தில் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த … Read more

தவறான விளம்பர வழக்கு: அலட்சியமான உங்கள் மன்னிப்பை ஏற்க முடியாது -உச்சநீதிமன்றம் காட்டம்

Patanjali Misleading Ads: பதஞ்சலி தவறான விளம்பரங்கள்: மருத்துவம் குறித்து தவறான விளம்பர வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் பதஞ்சலி நிறுவனத்துக்கு நிவாரணம் கிடைக்கவில்லை, மன்னிப்பு கோரியதை நீதிமன்றம் ஏற்கவில்லை.

டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் திடீர் ராஜினாமா – ஆம் ஆத்மியில் இருந்தும் விலகல்

புதுடெல்லி: டெல்லி அரசில் சமூக நலத் துறை அமைச்சராக இருந்த ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதோடு ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், இது கேஜ்ரிவாலுக்கு மேலும் நெருக்கடியை தருவதாக அமைந்துள்ளது. மதுபான கொள்கை ஊழல் வழக்கில், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் திஹார் சிறையில் உள்ள நிலையில், தற்போது டெல்லி அரசியலில் ஒரு புதுவித திருப்பம் நிகழ்ந்துள்ளது. டெல்லி … Read more

கவுண்டவுன் ஸ்டார்ட்! ஆம் ஆத்மிக்கு சிக்கல் மேல் சிக்கல்… கட்சியில் இருந்து விலகிய ராஜ் குமார் ஆனந்த்

Raaj Kumar Anand Resigns: அரவிந்த் கெஜ்ரிவால் அரசு மற்றும் ஆம் ஆத்மி கட்சி “ஊழல்” ஆகிவிட்டதாகவும், தலித் மக்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜ்குமார் ஆனந்த். 

திருவனந்தபுரம் காங். வேட்பாளர் சசி தரூருக்கு மத்திய அமைச்சர் அவதூறு நோட்டீஸ்

திருவனந்தபுரம்: சமீபத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தன்னைப் பற்றி அவதூறு கருத்துகள் பரப்பியதாகக் கூறி, காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அவதூறு வழக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கேரளாவில் ஏப்ரல் 26-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் சசி தரூரை எதிர்த்து பாஜக சார்பில் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். … Read more