கருப்பாக பிறந்த பெண் குழந்தை-விஷம் வைத்துக்கொன்ற கொடூர தந்தை! மனதை உலுக்கிய சம்பவம்..

Vijayawada Man Kills Daugher : 18 மாத பெண் குழந்தையை அதன் தந்தையே விஷம் வைத்து கொன்றுள்ள விவகாரம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த குழந்தை இறந்தது எதனால்? இதோ முழு தகவல்.  

“ராமர் கோயில் கட்டியதால் இண்டியா கூட்டணிக்கு ஆத்திரம்” – பிரதமர் மோடி சாடல்

பஸ்தார்: “காங்கிரஸ், இண்டியா கூட்டணிக்கு ராமர் கோயில் கட்டியதால் ஆத்திரம்” என பிரதமர் மோடி சாடியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி நாடு முழுவது சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரில் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. அதன்மூலம் 500 ஆண்டு … Read more

சிக்கலில் சஞ்சய் சிங்.. குஜராத் பல்கலைக்கழக அவதூறு வழக்கில் அதிர்ச்சி அளித்த உச்ச நீதிமன்றம்!

Aam Aadmi Party MP Sanjay Singh: குஜராத் உயர் நீதிமன்றத்தில் நிவாரணம் கிடைக்காததால், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். ஆனால் அவரின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.

‘தென்மாநிலங்களில் பாஜகவுக்கு அதிகரிக்கும் செல்வாக்கு’ – பிரசாந்த் கிஷோர் தகவல்

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றியை தடுப்பதற்கான வாய்ப்பை எதிர்க்கட்சிகள் தவறவிட்டுவிட்டதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு, ஒடிசா, தெலங்கானாவில் பாஜகவுக்கு கணிசமான இடம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இது தொடர்பாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக … Read more

விஸ்தாரா நெருக்கடி… 10% விமானங்கள் ரத்து… சிக்கலில் விமான பயணிகள்!

Vistara Airlines Crisis: டாடா குழுமத்தின் விமான போக்குவரத்து நிறுவனமான விஸ்டாரா கடந்த வாரம் முதல் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில், விமானிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், இந்த மாதம் முழுவதும் 10 சதவீத விமானங்களை ரத்து செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

“நான் மாட்டிறைச்சி உண்பதில்லை; வதந்திகளைப் பரப்பாதீர்” – கங்கனா ரனாவத்

மாண்டி: “நான் மாட்டிறைச்சி உள்பட எவ்வித இறைச்சியும் உண்டதில்லை. என்னைப் பற்றி அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்புவது வெட்கக்கேடானது.” என நடிகையும், பாஜக மண்டி தொகுதி வேட்பாளருமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, எக்ஸ் தளத்தில் “நான் பல ஆண்டுகளாக யோகா, ஆயுர்வேத வாழ்க்கை முறையை பின்பற்றுவதோடு அதை பிறருக்கும் பரிந்துரைத்து வருகிறேன். இப்போது வதந்திகளைப் பரப்பும் முயற்சியால் எனது பிம்பம் சிதையாது. எனது தொகுதி மக்களுக்கு என்னைத் தெரியும். நான் ஒரு பெருமித இந்து … Read more

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு: கவிதாவின் இடைக்கால ஜாமீன் மனு தள்ளுபடி

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் பி.ஆர்.எஸ் கட்சியின் எம்எல்சி. கவிதாவுக்கு ஜாமீன் வழங்க சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழலுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த மார்ச் 15-ம் தேதி அமலாக்கத் துறை … Read more

இந்தியாவில் பெண் வேட்பாளர்கள் 16 மடங்கு உயர்வு: 1957 – 2019 தரவுகள் சொல்வது என்ன?

“2019 ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்கள் 9 சதவீதமாக இருந்தது. பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 1000-ஐ கடந்ததே இல்லை. கட்சிகள் பெண்களுக்கு சொற்ப வாய்ப்புகளையே கொடுத்தன” என சமூக ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஆனால் அதை அமல்படுத்துவதற்கான கால நிர்ணயம் ஏதும் செய்யப்படவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பின்னர் இது அமலாகலாம் என்று கூறப்படுகிறது. வரவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலிலும் … Read more

மீரஜ் நகரின் சிதார், தம்புராவுக்கு புவிசார் குறியீடு

மும்பை: மகாராஷ்டிராவின் மீரஜ் நகரின் சிதார், தம்புராவுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. மகாராஷ்டிர தலைநகர் மும்பைக்கு மேற்கே 400 கி.மீ. தொலைவில் மீரஜ் நகரம் அமைந்துள்ளது. அந்த சிறிய நகரம் இசைக் கருவிகளின் உற்பத்தி மையமாக திகழ்கிறது. அங்கு தயாரிக்கப்படும் சிதார், தம்புரா, வீணை உள்ளிட்ட இசைக் கருவிகள் உலக அளவில் பிரசித்தி பெற்றவையாக திகழ்கின்றன. கொல்லர் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 50 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாரம்பரியமாக இசைக் கருவி தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மன்னராட்சி காலத்தில் … Read more

குற்றமற்றவர் என கூறிய பிறகும் அதானியை தொடர்ந்து விமர்சித்தது காங்கிரஸ்: கவுரவ் வல்லப் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஹிண்டன்பர்க் அறிக்கையை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அதானி குற்றமற்றவர் என செபி கூறிய பிறகும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவரை விமர்சித்து வருவதாக பாஜக தலைவர் கவுரவ் வல்லப் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்த வல்லப் திடீரென அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகி அண்மையில் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறிய குற்றச்சாட்டைத் தொடர்ந்து அதானி … Read more