Arvind Kejriwal: என்னை பயங்கரவாதி போல் பாஜக நடத்துகிறார்கள் – அரவிந்த் கெஜ்ரிவால்

Arvind Kejriwal Attack Modi Govt: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக அரசு என் மீது போடும் வழக்குகளை பார்த்ததால், நாட்டின் மிகப் பெரிய பயங்கரவாதி போல் என்னை நடத்துகிறார்கள் என மத்திய அரசு மீது கடுமையான குற்றசாட்டுகளை கெஜ்ரிவால் வைத்துள்ளார்

காங்கிரஸ் Vs பாஜக ஆட்சியில் பொருளாதாரம்: மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியில் பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை என மத்திய அரசின் வெள்ளை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான முந்தைய 10 ஆண்டு கால ஆட்சியில் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். அதன்படி, நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கையை அவர் வியாழக்கிழமை தாக்கல் செய்தார். 47 பக்கங்கள் கொண்ட அந்த … Read more

சீனியர் சிட்டிசன் விவசாயிகளுக்கு மாதம் 3000 ரூபாய் பென்சன்! எந்த மாநில அரசின் அறிவிப்பு இது?

UP Govt Pension Scheme To Farmers: 60 வயதுக்கு அதிகமான விவசாயிகள் மாதந்தோறும் மூவாயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள்! பட்ஜெட்டில் அறிவிப்பு…

“2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்” – பிரதமர் மோடி நம்பிக்கை

புதுடெல்லி: வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இஸ்கான் அமைப்பின் நிறுவனரான ஸ்ரீலஸ்ரீ பிரபுபாதாவின் 150-ம் ஆண்டு பிறந்த தின விழா டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. இஸ்கான் அமைப்பைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்ட இந்த விழாவில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “நாட்டுப் பற்றின் சக்தியுடன் இன்று கோடிக்கணக்கான நாட்டு மக்கள் அமிர்த காலத்தில் நுழைந்துள்ளனர். இந்த … Read more

சுதந்திரமாக எல்லையை கடக்க மியான்மருக்கு வழங்கப்பட்ட அனுமதியை நிறுத்தியது இந்தியா

புதுடெல்லி: இந்திய எல்லையை ஒட்டி வாழும் மியான்மர் மக்கள், சுதந்திரமாக இந்தியாவுக்குள் வருவதற்கான அனுமதி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்தியா – மியான்மர் இடையே இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த சுதந்திரமாக இயங்குவதற்கான அனுமதி (Free Movement Regime) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் மத ரீதியிலான மக்கள் தொகை மாற்றம் ஆகியவற்றை கருத்தில் … Read more

கோகுல்புரி மெட்ரோ ரயில் நிலையத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி! 4 பேர் காயம்

Delhi Metro News: கோகுல்புரி மெட்ரோ ரயில் நிலையத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர், இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு. இரண்டு அதிகாரிகள் இடைநீக்கம்.

“காங்கிரஸின் கருப்பு அறிக்கை எங்கள் ஆட்சிக்கான திருஷ்டி பொட்டு; கார்கேவுக்கு நன்றி” – பிரதமர் மோடி

புதுடெல்லி: மத்திய அரசின் 10 ஆண்டுகால தோல்விகள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கருப்பு அறிக்கை வெளியிட்ட சிறிது நேரத்தில், எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை தனது அரசாங்கத்துக்கான தீய சக்திகளை விரட்டும் திருஷ்டி பொட்டாக (kaala tika) உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார். பாஜக தலைமையிலான மத்திய அரசின் வெள்ளை அறிக்கைக்கு எதிராக பிரதமர் மோடி அரசின் 10 ஆண்டு கால ஆட்சி குறித்து காங்கிரஸ் கட்சி இன்று காலை கருப்பு அறிக்கை வெளியிட்டது. மோடி … Read more

மோடி அரசின் 10 ஆண்டு கால "தோல்விகள்" -கருப்பு அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்

Congress Released Black Paper: மோடியின் 10 ஆண்டுகால ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி “கருப்பு அறிக்கையை” வெளியிட்டது. 

“இனி எங்கும் செல்லமாட்டேன்” – பிரதமருடனான சந்திப்புக்கு பிறகு நிதிஷ் குமார் உறுதி

புதுடெல்லி: டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், “இனி தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு எங்கும் செல்லமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார். இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் தேர்வு செய்யப்படுவார் என பரவலாக பேசப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு முன்பு அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி, பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். இதனையடுத்து, ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணியின் முதல்வராக அவர் மீண்டும் பொறுப்பேற்றார். 9வது முறையாக … Read more

பாஜகவுக்கு ‘டா… டா…’ சொன்ன பாபுமோகன்!

பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் பாபு மோகன் (71). 1998-ல் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து பின்னர் தொழிலாளர் துறை அமைச்சராக உயர்ந்தார். பின்னர் டிஆர்எஸ் கட்சியில் சேர்ந்து 2014-ல் மீண்டும் எம்எல்ஏவானார். அதன்பிறகு அங்கிருந்து விலகி, 2018-ல் பாஜகவில் இணைந்தார். தற்போது நடிகர் பாபுமோகன், பாஜகவிலிருந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக நேற்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இவர் விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. Source link