எனது தந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கு திட்டமிட்ட சதி: எடியூரப்பா மகன் விஜயேந்திரா
பெங்களூரு: எனது தந்தை எடியூரப்பாவுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கு திட்டமிட்ட அரசியல் சதி என்று அவரது மகனும் கர்நாடக பாஜக தலைவருமான பி.ஒய்.விஜயேந்திரா குற்றம் சாட்டியுள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு 100% நம்பிக்கை இருக்கிறது. இந்த விவகாரத்தில் அரசியல் சதி இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “கர்நாடக மக்களின் ஆசீர்வாதங்கள், கோடிக்கணக்கான இதயங்களின் பிரார்த்தனைகள் ஆகியவை நீதியின் கோயிலில் வெளிப்பட்டன. எடியூரப்பாவுக்கு எதிரான சதி … Read more