மோடி 3.0 | மத்திய அமைச்சர்கள் பட்டியல் – நிர்மலா சீதாராமன் முதல் புதுமுகம் ராம்மோகன் வரை

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதன்மூலம் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக 3வது முறையாக பதவியேற்றுள்ளார். மோடியுடன் 72 பேர்: மோடியைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, சிவ்ராஜ் சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கர், … Read more

மோடி 3.0 | மத்திய அமைச்சரவை பதவி இழந்தவர்கள் யார் யார்?

புதுடெல்லி: பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றுக் கொண்டுள்ளார். அவருடன் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்களும் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த சூழலில் கடந்த 2019 முதல் 2024 வரையிலான பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம் பிடித்து, இந்த முறை பதவியை இழந்தவர்கள் யார் யார்? என்பதை பார்ப்போம். புதிதாக அமைந்துள்ள மத்திய அமைச்சரவையில் 24 மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. … Read more

கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு ஆதரவாக விவசாய அமைப்புகள் பேரணி @ பஞ்சாப்

மொஹாலி: நடிகை கங்கனா ரனாவத்தை விமான நிலையத்தில் அறைந்த சிஐஎஸ்எஃப் பெண் காவலருக்கு ஆதரவாக மொஹாலியில் பல்வேறு விவசாய அமைப்புகள் பேரணி நடத்தினர் சண்டிகர் விமான நிலையத்தில் நடிகையும், பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத்தின் கன்னத்தில் சிஐஎஸ்எஃப் பெண் காவலர் அறைந்ததாக வெளியான வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. விமான நிலையத்தில் பணியிலிருந்த சிஐஎஸ்எஃப் பெண் காவலர் குல்விந்தர் கவுர் என்பவர் கங்கனா ரணாவத்தின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதற்கு விவசாயிகளுக்கு எதிராக கங்கனா தெரிவித்த கருத்துகளே … Read more

ஜம்மு காஷ்மீரில் பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 9 பேர் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 9 பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாஸி மாவட்டத்தில் உள்ள ரான்ஸூ என்ற பகுதியில் இன்று (ஜூன் 09) மாலை 6 மணியளவில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றின் மீது தீவிரவாதிகள் சிலர் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் நிலை தடுமாறிய ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தார். இதனைத் தொடர்ந்து பேருந்து … Read more

பிரதமர் மோடி பதவியேற்பு விழா: கவனம் ஈர்த்த தருணங்கள்

புதுடெல்லி: டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (ஜூன் 9) நடைபெற்ற விழாவில் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இந்த பதவியேற்பு நிகழ்வில், வெளிநாட்டுத் தலைவர்கள், தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்கள், பாஜக தலைவர்கள், பல்துறை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் கவனம் ஈர்த்தவை: டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஜூன் 9) இரவு சரியாக 7.23 நடந்த பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மோடிக்கு பதவிப் … Read more

மோடி பதவியேற்புக்கு கடைசி நிமிடத்தில் வந்த கார்கே…! காங்கிரஸில் 24 மணி நேரத்தில் ஏற்பட்ட மாற்றம்

Mallikarjun Kharge, Congress : பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பை புறக்கணிக்கலாம் என நினைத்திருந்த காங்கிரஸ் கடைசி நிமிடத்தில் பங்கேற்றது. அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மட்டும் பங்கேற்றார். 

மோடி 3.0 | மீண்டும் மத்திய அமைச்சர்களான அமித் ஷா, நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார் நரேந்தி மோடி. அவரது தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் ஏற்கெனவே பிரதமர் மோடியின் அமைச்சரவையில் அங்கம் வகித்த ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கர், பியூஷ் கோயல், அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் மீண்டும் மத்திய அமைச்சர்களாக பங்கேற்றுள்ளனர். நிர்மலா சீதாராமன்: பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் கடந்த 2019-ல் நிதி அமைச்சராக … Read more

மோடி பதவியேற்பில் இதை கவனிச்சீங்களா? அமித் ஷாவுக்கு முன் பதவியேற்ற ராஜ்நாத் சிங் – சூட்சமம் இருக்கு!

நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நிலையில் கேபினெட் அமைச்சர்களாக ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, அமித் ஷா உள்ளிட்டோரும் பதவியேற்றுக் கொண்டனர். 

மோடி புதிய அமைச்சரவை: அஜித் பவார் அதிருப்தி

புதுடெல்லி: பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ளார். இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது பாஜக. இந்த சூழலில் புதிய அமைச்சரவையில் தங்களுக்கு கேபினட் அமைச்சர் பொறுப்பு வேண்டும் என அஜித் பவார் தெரிவித்துள்ளார். “பிரஃபுல் படேல், மத்திய அமைச்சராக பணியாற்றியவர். அவர் தற்போது அமையும் புதிய அமைச்சரவையில் மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுக் கொள்வது சரியாக இருக்காது என நாங்கள் கருதுகிறோம். அதனால் அடுத்த சில நாட்களுக்கு நாங்கள் … Read more

PM Narendra Modi: பதவியேற்றார் பிரதமர் மோடி… கேபினட்டில் மொத்தம் 72 அமைச்சர்கள்!

PM Narendra Modi: டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடந்த பதவியேற்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முன்னிலையில், பிரதமராக நரேந்திர மோடி பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.