“கச்சத்தீவை இலங்கைக்கு அநாவசியமாக தாரைவார்த்தது காங்கிரஸ்” – பிரதமர் மோடி தாக்கு

புதுடெல்லி: “கடந்த 1970 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு அநாவசியமாக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது” என்று பிரதமர் மோடி அக்கட்சி மீது ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டியுள்ளார். கச்சத்தீவு இலங்கை வசம் சென்றது தொடர்பாக வெளியாகியிருக்கும் தரவு ஒன்றின் அடிப்படையிலான ஊடகக் கட்டுரையை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, காங்கிரஸை நம்பகத்தன்மை அற்ற கட்சி என்று கடுமையாக விமர்சித்துள்ளார். பிரதமர் தனது எக்ஸ் பதிவில், “கச்சத்தீவு இலங்கை வசம் சென்றது தொடர்பான அந்தத் தரவுகள் … Read more

சோனியா, ராகுல் உள்ளிட்ட 27 நட்சத்திர பேச்சாளர்கள் ரெடி!

ஜம்மு காஷ்மீரில் வரும் ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20 ஆகிய தேதிகளில் 5 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதே நேரம் காஷ்மீர் சட்டப்பேரவைக்கான தேர்தல் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நடைபெறும் என ஆணையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், காஷ்மீரில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை அக்கட்சி நேற்று நேற்று வெளியிட்டது. இந்தப் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் … Read more

“மேட்ச் ஃபிக்ஸிங் இல்லாமல் தேர்தலில் 400 சீட் சாத்தியமில்லை” – ராகுல் காந்தி தாக்கு

புதுடெல்லி: “400 சீட்களில் வெற்றி என்ற முழக்கமெல்லாம் சூதாட்டம் (மேட்ச் ஃபிக்ஸிங்) இல்லாமல் சாத்தியப்படாது” என்று ஆளும் பாஜகவின் தேர்தல் முழக்கத்தை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி. டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று (ஞாயிறுக்கிழமை) இண்டியா கூட்டணிக் கட்சியினர் சார்பில் மெகா பேரணி நடைபெற்றது. இதில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, “பாஜக … Read more

ஜனநாயகமா, சர்வாதிகாரமா? – எது தேவை என்பதை முடிவு செய்யும் தருணம் இது: கார்கே பேச்சு

புதுடெல்லி: “ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாரதிய ஜனதா கட்சியும் விஷம் போன்றவை. விஷத்தை சுவைத்தால் மரணம் ஏற்படும். அதனால், ஜனநாயகம் வேண்டுமா அல்லது சர்வாதிகாரம் வேண்டுமா என்பதை நாம் முடிவு செய்யும் தருணம் இது” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். டெல்லியில் கேஜ்ரிவால் கைதைக் கண்டித்து நடந்த கண்டனப் பேரணி பொதுக் கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாரதிய ஜனதா கட்சியும் விஷம் போன்றவை. விஷத்தை சுவைத்தால் மரணம் ஏற்படும். அதனால், ஜனநாயகம் … Read more

“நாடு இதுவரை வளர்ச்சியின் ட்ரெய்லரை மட்டுமே பார்த்துள்ளது” – மீரட்டில் பிரதமர் மோடி பேச்சு

மீரட்: “நாடு இதுவரை வளர்ச்சியின் ட்ரெய்லரை மட்டும் தான் பார்த்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தல் வெறும் அரசாங்கத்தை உருவாக்குவதற்கானது இல்லை. மாறாக வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதற்கானது” என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீரட்டில் இருந்து தொடங்கி வைத்தார். மக்களவையில் அதிக இடங்களைக் கொண்ட மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் இருந்து பிரதமர் மோடி மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். இந்நிலையில் மீரட்டில் நடந்த தேர்தல் … Read more

“காங்கிரஸை கைதட்டிப் பாராட்டுவோம்” – அமித் ஷா பகடி @ கச்சத்தீவு விவகாரம்

புதுடெல்லி: கச்சத்தீவை விருப்பத்துடன் தாரைவார்த்த காங்கிரஸை கை தட்டித் தான் பாராட்ட வேண்டும் என்று பகடி செய்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. இது தொடர்பாக அமித் ஷா தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “காங்கிரஸ் கட்சியினர் கச்சத்தீவை விரும்பி தாரைவார்த்தனர். அதற்காக அவர்களுக்குக் கை தட்டித் தான் பாராட்ட வேண்டும். அந்தச் செயலுக்காக அவர்கள் கொஞ்சமும் வருந்தவில்லை. காங்கிரஸ் எம்.பி.க்கள் சில நேரங்களில் ‘தேசத்தை பிரிக்கிறார்கள்’ என்று பேசுகிறார்கள். சில நேரங்களில் அவர்களே … Read more

“திட்டமிட்ட பிரச்சாரம்…” – பிரதமரின் கச்சத்தீவு குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதிலடி

புதுடெல்லி: காங்கிரஸ் அரசு அநாவசியமாக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது என்ற பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு, “இது தேர்தல் வேளையில் குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரச்சாரம் என்று காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. மேலும் கடந்த பத்து ஆண்டுகளில பாஜக தலைமையிலான அரசின் பணிகள் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சந்தீப் திக்ஷித் கூறுகையில், “நமது பிரதமரின் பிரச்சினையே அவர் எந்தவிதமான ஆதாரங்களும் இன்றி அறிக்கைகள் வெளியிடுகிறார். அவர் குறிப்பிடுவது போல் … Read more

சிறையில் இருந்தே தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த அரவிந்த் கெஜ்ரிவால் – என்னென்ன தெரியுமா?

Arvind Kejriwal News: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களவை தேர்தலை முன்னிட்டு ஆறு வாக்குறுதிகளை வழங்கி உள்ளார். அதனை இங்கு காணலாம். 

“ஜனநாயகத்தைக் காப்பாற்ற அல்ல, ஊழலை மறைக்கவே பேரணி” – பாஜக குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடந்து வரும் இண்டியா கூட்டணிக் கட்சிகளின் மெகா பேரணியை கடுமையாக சாடியுள்ள பாஜக, “இது ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான பேரணி இல்லை. குடும்பத்தை காப்பாற்றவும், ஊழலை மறைக்கவும் நடக்கும் பேரணி” என்று குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து, பாஜகவின் செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி, காங்கிரஸ், திமுக, மற்றும் ஆர்ஜேடி உள்ளிட்டக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களின் ஊழல் வழக்குகளை சுட்டிக்காட்டியுள்ளார். அவர் கூறுகையில், “டெல்லி ராம் லீலா மைதானத்தில் முன்பு அன்னா ஹசரே தலைமையில் … Read more

“சிங்கத்தை நீண்ட காலம் சிறையில் அடைக்க முடியாது” – கேஜ்ரிவால் மனைவி @ டெல்லி பேரணி

புதுடெல்லி: கேஜ்ரிவால் ஒரு சிங்கம். சிங்கத்தை நீண்ட காலம் சிறையில் வைத்திருக்க முடியாது என டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால் பேசியுள்ளார். டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று (ஞாயிறுக்கிழமை) இண்டியா கூட்டணிக் கட்சியினர் சார்பில் மெகா பேரணி நடைபெறுகிறது. இந்தப் பேரணியில் பேசிய கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால், “பிரதமர் மோடி எனது கணவரை சிறையில் … Read more