மக்களவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்: 3 கோடி பெண்களை லட்சாதிபதி ஆக்க திட்டம்

புதுடெல்லி: மக்களவையில் இடைக்கால பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ‘லட்சாதிபதி பெண்கள்’ திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் சுயஉதவி குழுக்களை சேர்ந்த 3 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக உருவாக்கப்படுவார்கள் என்று பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் அவர் கூறியதாவது: வரும் 2047-ம் ஆண்டுக்குள் … Read more

“இடைக்கால பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது” – காங். எம்.பி சசி தரூர் விமர்சனம்

புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட் ஏமாற்றமளிப்பதாகவும், இதில் செயல்கள் குறைவாகவும், லட்சியங்கள் மிகப் பெரிதாகவும் உள்ளது எனவும் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் விமர்சித்துள்ளார். இடைக்கால பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “இடைக்கால பட்ஜெட்டில் பதிவு செய்யப்பட்ட மிகக் குறுகிய உரைகளில் இதுவும் ஒன்று. பட்ஜெட் உரையில் பெரிதாக எதுவும் இல்லை. வழக்கம் போல் வார்த்தை ஜாலங்கள் மிகுந்து காணப்பட்டன. செயல்பாடுகளில் மிகக் குறைவான உறுதிப்பாடே இருந்தது. அந்நிய … Read more

ஆட்சியமைக்க சம்பய் சோரனுக்கு ஆளுநர் அழைப்பு: இன்று ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்கிறார்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில முதல்வராக சம்பய் சோரன் இன்று பதவியேற்க உள்ளார். ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முதல்வராக செயல்பட்டு வந்த ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. அவர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அக்கட்சியின் அமைச்சர் சம்பய் சோரன், முதல்வராக பொறுப்பேற்க அம்மாநில ஆளுநரை சந்தித்து புதன்கிழமை அன்று உரிமை கோரினார். இருந்தும் ஆளுநர் தரப்பில் … Read more

Budget 2024: அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே எங்கள் நோக்கம்- நிதி அமைச்சர்

Budget 2024: வெவ்வேறு பிரிவினரை தனித்தனியாக இலக்காக கொண்டு அவர்களை மகிழ்விக்கும் சில அறிவிப்புகளை நிதி அமைச்சர் இன்று தனது உரையில் வெளியிட்டார்.

“தேர்தல் வெற்றிக்காகவே எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைப்பு” – பாஜக மீது மம்தா தாக்கு

சாந்திபூர்: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஹேமந்த் சோரன் புதன்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், “வரவிருக்கும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறவே பாஜக எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைக்கிறது” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் 7 மணி நேரம் தீவிர விசாரணை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், அவரை புதன்கிழமை கைது செய்தனர். இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி … Read more

Budget 2024: ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஜாக்பாட்

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இடைக்கால பட்ஜெட்டில் ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கும் இடைக்கால பட்ஜெட் நல்ல செய்தியை கொண்டு வந்துள்ளது.

ஆளும் ஜேஎம்எம் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களின் விமானப் பயணம் வானிலை காரணமாக ரத்து: அடுத்து என்ன? – ஜார்க்கண்ட் அரசியல்

ராஞ்சி: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முதல்வராக செயல்பட்டு வந்த ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. அவர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் அக்கட்சியின் அமைச்சர் சம்பய் சோரன், முதல்வராக பொறுப்பேற்க அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து புதன்கிழமை இரவு உரிமை கோரினார். ஆளுநர் தரப்பில் இருந்து ஆட்சி அமைக்க அழைப்பு வராத சூழலில் எம்.எல்.ஏ.க்கள், மாற்றுக் கட்சியினரின் குதிரை பேர வலையில் சிக்காமல் இருக்க அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் … Read more

Budget 2024: வருமான வரி அடுக்குகளில் மாற்றம் இல்லை, தற்போதைய அடுக்குகள் என்ன? விவரம் இதோ

Budget 2024: இது இடைக்கால பட்ஜெட்டாக இருப்பதால், இன்று வரி முறைகள் மற்றும் வரம்புகளில் எந்த மாற்றமும் இருக்காது என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

ஹேமந்த் சோரன் ராஞ்சி மத்திய சிறையில் அடைப்பு: அடுத்து என்ன?

ராஞ்சி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை அளித்துள்ள மனு நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்றம், நில மோசடி தொடர்பான வழக்கில் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை பலமுறை சம்மன் அளித்திருந்த நிலையில், கடந்த வாரம் முதல் முறையாக வீட்டிலேயே வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஜனவரி 28, 29-ம் தேதிகளில் … Read more

தென் மாநிலங்களுக்கு தொடரும் அநீதி.. தனி நாடு கோரிக்கைக்கு எங்களை தள்ளாதீர்கள் -கர்நாடகா எம்.பி

Separate Nation South India: தென் இந்தியா மாநிலங்களுக்கு நிதி வழகுவதில் மத்திய அரசு அநீதி செய்கிறது. தென் மாநிலங்களின் வசூலாகும் வரி வட இந்தியா மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. இது தொடர்ந்தால், தனி நாடு கோரும் நிலைக்கு தள்ளப்படுவோம் -எம்.பி. டி.கே.சுரேஷ்.