ராஜஸ்தானின் பாஜக களப் போராளி… யார் இந்த இந்து தேவி ஜாதவ்? | 2024 தேர்தல் கள புதுமுகம்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனிக்கத்தக்க புதுமுக வேட்பாளர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், ராஜஸ்தானின் கரௌலி தோல்பூர் (Karauli Dholpur) தொகுதியில் பாஜக சார்பில் களம் காண்கிறார் இந்து தேவி ஜாதவ். அவர் தேர்தல் அரசியலுக்கு புதியவர் என்றாலும், அந்தத் தொகுதியில் நம்பிக்கைக்குரிய சக்தியாக வலம் வருகிறார். இந்து தேவி கரௌலி தோல்பூரில் வெற்றி வேட்பாளாராக கால்பதிப்பாரா? ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு பாஜக இதுவரை 24 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. … Read more

மீண்டும் மீண்டுமா… அமலாக்கத்துறை விசாரணையில் சிக்கும் டெல்லி அமைச்சர்… முழு விவரம்!

Kailash Gahlot ED News: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதான நிலையில், மற்றொரு ஆம் ஆத்மி தலைவர் அமலாக்கத்துறை விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளார். 

“இண்டியா கூட்டணி மீதான பாஜக அச்சத்தின் வெளிப்பாடுதான் ஐ.டி நோட்டீஸ்” – டி.கே.சிவகுமார்

பெங்களூரு: விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை பாஜக குறிவைப்பதாக கர்நாடக துணை முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவகுமார் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சி வருமான வரியை முறையாக செலுத்தவில்லை என்று கூறி, வட்டி மற்றும் அபராதத்துடன் ரூ.1,823 கோடி வரி நிலுவை செலுத்துமாறு அக்கட்சிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த நாட்டில் ஜனநாயகம் இருக்கிறது; சட்டம் இருக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்வதற்கு பாஜக அரசின் … Read more

ராஜ்நாத் சிங் தலைமையில் தேர்தல் அறிக்கை குழு அமைத்தது பாஜக

புதுடெல்லி: கட்சியின் மூத்த தலைவரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவைத் தேர்தல் 2024-க்கான தேர்தல் அறிக்கைக் குழுவை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா அறிவித்துள்ளார். அதன்படி, தேர்தல் அறிக்கையின் குழுவின் தலைவராக ராஜ்நாத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைப்பாளராக நிர்மலா சீதாராமனும், இணை ஒருங்கிணைப்பாளராக பியூஷ் கோயலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவில் … Read more

ரூ.46 கோடி பணப் பரிவர்த்தனை ம.பி.யில் கல்லூரி மாணவருக்கு வருமன வரித் துறை நோட்டீஸ்

குவாலியர்: மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒரு தனது வங்கிக் கணக்கில் நடந்திருக்கும் பணப் பரிவர்த்தனையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த மாணவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.46 கோடி பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பிரமோத் குமார் தண்டோடியா (25) என்ற அந்த மாணவர் குவாலியரில் வசித்து வருகிறார். மும்பை மற்றும் டெல்லியில் இருந்து இயங்கி வந்த நிறுவனம் ஒன்று தனது பான் கார்டு எண்ணைப் பயன்படுத்தி … Read more

மதுபான கொள்கை வழக்கு: டெல்லி போக்குவரத்து அமைச்சரிடம் அமலாக்கத் துறை விசாரணை 

புதுடெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனைத் தொடர்ந்து டெல்லியின் போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலோட் இன்று (சனிக்கிழமை) விசாரணைக்கு நேரில் ஆஜராகினார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மார்ச் 21-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கைலாஷுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. டெல்லியின் நஜஃபகர் தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கும் கைலாஷ், கடந்த 2021 – 22ல் உருவாக்கப்பட்டு, தற்போது கைவிடப்பட்டிருக்கும் மதுபான … Read more

கமல்நாத் மகன் நகுல்நாத் சொத்து மதிப்பு ரூ.697 கோடி

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் மகன் நகுல் நாத். மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரே காங்கிரஸ் எம்.பி. இவர்தான். கடந்த மக்களவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 29 இடங்களில், 28 இடங்களில் பாஜக வென்றது. சிந்த்வாரா தொகுதியில் மட்டும் நகுல் நாத் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் இவர் இதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் வேட்பு மனுவில், தனது சொத்து மதிப்பு ரூ.697 கோடி என தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் இவரது சொத்து … Read more

தெலுங்கு தேசம் கட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ஆந்திராவில் தெலுங்கு தேசம்-பாஜக-ஜனசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலை சந்திக்கின்றன. ஏற்கெனவே தெலுங்கு தேசம் கட்சி சார்பில் 3 கட்டமாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. நேற்று இறுதி வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டது. அதன்படி, இதுவரை அறிவிக்காத 4 மக்களவை மற்றும் 9 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தெலுங்கு தேசம் அறிவித்துள்ளது. விஜயநகரம் மக்களவை தொகுதிக்கு கே. அப்பலநாயுடு, ஓங்கோல் தொகுதிக்கு ஸ்ரீநிவாசுலு ரெட்டி, அனந்தபுரம் தொகுதிக்கு அம்பிகா லட்சுமி நாராயணாவும், கடப்பாவுக்கு … Read more

கேஜ்ரிவால் போனில் இருந்து ஆம் ஆத்மி தேர்தல் உத்தியை அமலாக்க துறை அறிய முயற்சி: டெல்லி அமைச்சர் ஆதிஷி குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அர்விந்த்கேஜ்ரிவால் 6 நாள் அமலாக்கத் துறை காவலுக்கு பிறகு வியாழக்கிழமை டெல்லி ரோஸ் அவென்யூநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஏப்ரல் 1-ம் தேதி வரை மேலும் 4 நாட்களுக்கு அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் டெல்லி கல்விஅமைச்சர் ஆதிஷி நேற்று கூறியதாவது: டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடந்த விசாரணையில் கேஜ்ரிவால்தனது மொபைல் பாஸ்வேர்டை தர மறுப்பதால் அவரை மேலும் சில … Read more

அமெரிக்க, இங்கிலாந்து போர்க்கப்பல்களின் பராமரிப்பு மையமாக மாறுகிறது சென்னை

புதுடெல்லி: சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி நிறுவனத்தின் கப்பல் கட்டும் துறைமுகத்தில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போர்க்கப்பல்கள் பழுது பார்க்கப்படவுள்ளன. சீனா தனது கடற்படை கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இதன் மூலம் தென் சீன கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால் சீனா மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா தனது கடற்படையையும் தொடர்ந்து வலுவாக வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தோ – பசிபிக் கடல் பகுதிகளில் பயணிக்கும் போர்க்கப்பல்களை … Read more