Maharashtra Thane Blast: ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் பலி, 30-க்கும் மேற்பட்டோர் காயம்

Thane Dombivli Blast: தானே டோம்பிவிலி பகுதியில் உள்ள ரசாயன ஆலை ஒன்றின் கொதிகலனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். 

உருவாகிறது ‘ரீமல்’ புயல்: மே 26-ல் வங்கதேசம் அருகே கரையை கடக்க வாய்ப்பு

புதுடெல்லி: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக மாறும் என்றும் எச்சரித்துள்ள இந்திய வானிலை மையம், அந்தத் தீவிர புயலுக்கு ‘ரீமல்’ (Remal) எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட தகவலில், ‘வங்கக் கடலின் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதியில், வளிமண்டல கீழடுக்கில் சுழற்சி நிலவுகிறது. தொடர்ந்து, அந்தப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது வடகிழக்கு திசையில் … Read more

வாக்கு இயந்திரம் உடைப்பு: ஜெகன் கட்சி வேட்பாளர் கைதாகிறார்

ஆந்திர மாநிலத்தில் கடந்த 13-ம் தேதி சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நாளிலும் தேர்தலுக்குப் பிறகும் ஆந்திராவில் வன்முறைகள் நிகழ்ந்தன. இதுதொடர்பாக மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநரை டெல்லிக்கு நேரில் அழைத்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டது. வன்முறையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. தேர்தல் நாளில் 7 வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) சேதம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் … Read more

West Bengal: நந்திகிராமில் வன்முறை.. பாஜக-டிஎம்சி இடையே மோதல்.. பாஜக தொண்டர் பலி

Nandigram Violence: நந்திகிராமில் ஏற்பட்ட மோதலில், ரதிபாலா ஆதி என்ற பாஜக பெண் தொண்டர் உயிரிழந்தார். ஏழு பாஜகவினர் படுகாயம் அடைந்தனர். கடைகளை எரித்தும், சாலைகளை மறித்து மரங்களை எரித்தும், தீ வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.

கேரளாவின் பத்தனம்திட்டா, இடுக்கி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

திருவனந்தபுரம்: கேரளாவின் பல பகுதிகளில் கனமழை நீடிப்பதால் பத்தனம்திட்டா, இடுக்கி மாவட்டங்களுக்கு இன்று (மே. 23) கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில நாட்களாக கேரளாவின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியது. கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த விவரங்களை … Read more

பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்க: பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம்

பெங்களூரு: பாலியல் சர்ச்சையில் சிக்கி வெளிநாடு தப்பியோடியுள்ள ஹாசன் தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா கொண்டுவரும் வகையில் அவரது தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடிக்கு இரண்டாவது முறையாக வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் கடந்த 26-ம் தேதி வெளியாயின. இதையடுத்து அவர் ஜெர்மனிக்கு … Read more

குண்டூரில் தபால் வாக்கு பெட்டிகளுக்கு ‘சீல்’ வைக்காத அதிகாரிகள்

ஆந்திர மாநிலம், குண்டூரில் தபால் வாக்குகள் அடங்கிய பெட்டிகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைக்கவில்லை. இது குறித்து தெலுங்கு தேசம் கட்சியினர் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில், மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தபால் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் எனப்படும் பாதுகாப்பு அறைகளுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு மாநில போலீஸாரும் துணை ராணுவப் படையினரும் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

ஜெகன் அரசின் ரூ.1,500 கோடி பாக்கியால் ஆந்திராவில் இலவச மருத்துவ காப்பீடு முடக்கம்: பொதுமக்கள் கடும் அவதி

அமராவதி: ஆந்திராவில் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வந்த இலவச மருத்துவ காப்பீடு திட்ட சேவைகள் நேற்று முதல் முடங்கின. ஜெகன் அரசு ரூ.1,500 கோடி வரை பாக்கி வைத்துள்ளதால் அரசுடன் நடந்த பேச்சு வார்த்தையும் தோல்வி அடைந்தது. இதனால், பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். ஆந்திர மாநிலத்தில் முதன் முறையாக ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்தபோது, ’ராஜீவ் ஆரோக்கிய ஸ்ரீ’ எனும் இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்தினார். இதன்மூலம் ஆயிரக்கணக்கான ஏழை,நடுத்தர வர்க்க … Read more

பிரச்சாரத்தின்போது சாதி, மத பேச்சுகளை தவிர்க்க வேண்டும்: பாஜக, காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: தேர்தல் பிரச்சாரங்களின்போது சாதி, மதம் குறித்த வெறுப்பு பேச்சுகளை தவிர்க்க வேண்டும் என்று பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் தேர்தல் பாரம்பரியத்தை பாதிக்கக்கூடிய வகையில் பிரச்சாரம் மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தலை 7 கட்டங்களாக நடத்தி முடிக்க திட்டமிட்ட தேர்தல் ஆணையம் இதுதொடர்பான அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. திட்டமிட்டபடி, மக்களவை தேர்தலில் இதுவரை 5 … Read more

மேற்கு வங்கத்தில் ஓபிசி பட்டியலில் இருந்து பல பிரிவினர் நீக்கம்: கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கொல்கத்தா: சேவைகள் மற்றும் பதவிகளில் காலியிடங்கள் இட ஒதுக்கீடு சட்டம் 2012-ன் கீழ் மேற்கு வங்க பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் தவிர) சான்றிதழ் பெற்றவர்களின் ஓபிசி அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது. நீதிபதிகள் தபப்ரதா சக்ரவர்த்தி மற்றும் ராஜசேகர் மந்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது. தீர்ப்பில் கூறி யிருப்பதாவது: கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதியிலிருந்து 2012-ம் ஆண்டு மே 11-ம் … Read more