ஐ.எஸ்.எல்.கால்பந்து: பெங்களூரு- மும்பை அணிகள் இன்று மோதல்

பெங்களூரு, 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இதில் பங்கேற்ற 13 அணிகள் தங்களுக்குள் உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதின. லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ், எப்.சி. கோவா அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறியது. 3 முதல் 6-வது இடங்களை பெற்ற பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட், ஜாம்ஷெட்பூர் எப்.சி., மும்பை சிட்டி எப்.சி. ஆகிய … Read more

சேப்பாக்கம் எங்களுக்கு ஹோம் கிரவுண்டே இல்லை – சிஎஸ்கே பயிற்சியாளர் பிளம்மிங்

Chennai Super Kings, Stephen Fleming : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங், சேப்பாக்கம் மைதானம் கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்களுக்கு ஹோம் கிரவுண்டாக இல்லை என தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்தார். அவரின் இந்த கருத்து சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் பெரிய ஷாக்கை கொடுத்திருக்கிறது. சிஎஸ்கே அணி தோல்வி ஐபிஎல் 2025 தொடரின் … Read more

பெங்களூரு அணிக்கு எதிரான தோல்விக்கு காரணம் என்ன ? வெளிப்படையாக பேசிய சென்னை கேப்டன்

சென்னை, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று சேப்பாக்கத்தில் நடந்த 8வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்சை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் … Read more

சென்னை அணியில் உடனடியாக செய்ய வேண்டிய மூன்று மாற்றங்கள்!

Chennai Super Kings vs Royal Challengers Bengaluru: கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது பழைய வீரர்களை முடிந்தவரை ரீடைன் செய்தது. ஏலம் முடிந்த போது சென்னை அணியில் பவர் ஹிட்டர்கள் இல்லை என்ற பேச்சு நிலவியது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டி அமைந்துள்ளது. 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் சென்னை அணி 146 ரன்கள் மட்டுமே … Read more

ஐபிஎல் அட்டவணையில் திடீர் மாற்றம்

கொல்கத்தா, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் கடந்த 22ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது . இந்த நிலையில் போட்டி அட்டவணையை மாற்றி அமைக்க ஐபிஎல் நிர்வாகத்திற்கு கொல்கத்தா போலீசார் வேண்டுகோள் விடுத்தனர்.. ஏப்ரல் 6ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெற இருந்தது .அன்றைய தினம் ராம நவமியாகும். ராம நவமி … Read more

இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று ஆலோசனை

மும்பை, இந்திய கிரிக்கெட் வாரிய கூட்டம் கவுகாத்தியில் இன்று நடைபெறுகிறது. இதில் கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் தேவஜித் சைகியா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் வீரர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் மற்றும் ஜூன்- ஜூலையில் நடக்கும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தேர்வு குழு தலைவர் அகர்கர் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. … Read more

சொதப்பிய சிஎஸ்கே… 17 வருடங்களுக்கு பிறகு சென்னையில் வெற்றி பெற்ற ஆர்சிபி!

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வெற்றி பெற்று இருந்தது. மறுபுறம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெற்றிருந்தது. இரண்டு அணிகளும் தங்களது முதல் போட்டியில் சிறப்பான வெற்றியை பதிவு செய்திருந்ததால் இந்த போட்டியின் … Read more

மியாமி ஓபன் டென்னிஸ்:சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

மியாமி, மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரசின் அரினா சபலென்கா,இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய சபலென்கா 6-2, 6-2 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். தினத்தந்தி Related Tags : டென்னிஸ்  சபலென்கா  … Read more

RCB vs CSK : சிஎஸ்கே அணியிடம் அடி வாங்குவதே ஆர்சிபி-க்கு வேலையா போச்சு..! ஹிஸ்டரிய பாருங்க ஆர்சிபி ஃபேன்ஸ்

RCB vs CSK Head to Head : ஐபிஎல் 2025 தொடரின் இன்றைய போட்டியில் சிஎஸ்கே – ஆர்சிபி அணிகள் நேருக்கு நேர் சந்திக்க உள்ளன. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனென்றால் இரு அணிகளும் நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களின் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. 2வது வெற்றியை தீர்மானிக்கும் போக போட்டியாக சேப்பாக்கத்தில் நடக்கும் இன்றைய மோதல் இருக்கப்போகிறது. அதேநேரத்தில் ஆர்சிபி அணிக்கு … Read more

சர்வதேச டேபிள் டென்னிஸ்: முதல் சுற்று ஆட்டத்தில் சத்யன் அதிர்ச்சி தோல்வி

சென்னை, மொத்தம் ரூ.2.35 கோடி பரிசுத் தொகைக்கான உலக டேபிள் டென்னிஸ் ஸ்டார் கன்டென்டர் போட்டி தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் ஆண்கள், பெண்கள் ஒற்றையர், ஆண்கள், பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய 5 பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த சத்யன், சக நாட்டு வீரர் பயாஸ் ஜெயினிடம் மோதினார் . மோதினார் இந்த … Read more