ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: வெற்றியுடன் தொடங்கியது இத்தாலி 3-0 கோல் கணக்கில் துருக்கியை துவம்சம் செய்தது

ரோம், 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி இத்தாலி தலைநகர் ரோமில் நேற்று முன்தினம் இரவு கண்கவர் கலைநிகழ்ச்சி மற்றும் வண்ணமயமான வாணவேடிக்கைகளுடன் கோலாகலமாக தொடங்கியது. அடுத்த மாதம் (ஜூலை) 11-ந்தேதி வரை 11 நாடுகளில் அரங்கேறும் இந்த போட்டியில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் … Read more ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: வெற்றியுடன் தொடங்கியது இத்தாலி 3-0 கோல் கணக்கில் துருக்கியை துவம்சம் செய்தது

இந்திய அணியின் பயிற்சி ஆட்டம்: 2-ம் நாள் ஆட்ட விடியோ வெளியீடு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கான இந்திய அணியின் பயிற்சி ஆட்டத்தின் 2-ம் நாள் ஆட்டநேர விடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்காக இந்திய அணி சௌதாம்ப்டனில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக இந்திய அணியே விராட் கோலி தலைமையிலும் கேஎல் ராகுல் தலைமையிலும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதன் 2-ம் நாள் ஆட்டத்தில் ஷுப்மன் கில் சிறப்பான தொடக்கம் தந்து 135 பந்துகளில் 85 ரன் … Read more இந்திய அணியின் பயிற்சி ஆட்டம்: 2-ம் நாள் ஆட்ட விடியோ வெளியீடு

பிரேசில், அர்ஜென்டினா உள்பட 10 அணிகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று தொடக்கம்

பிரேசில்லா,  தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கான 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு பிரேசிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதி வரை நடக்கிறது. முதலில் இந்த போட்டியை கொலம்பியா, அர்ஜென்டினா ஆகிய நாடுகள் இணைந்து நடத்த இருந்தன. அதிபருக்கு எதிராக உள்நாட்டில் போராட்டம் நடந்ததை அடுத்து கொலம்பியா இந்த போட்டியை நடத்தும் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டது. கொரோனா பரவல் அதிகரிப்பு எதிெராலியாக … Read more பிரேசில், அர்ஜென்டினா உள்பட 10 அணிகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று தொடக்கம்

இலங்கை தொடருக்காக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் இந்திய வீரர்கள்

மும்பை, இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஜூலை 13-ந்தேதி கொழும்பில் நடக்கிறது. விராட் கோலி தலைமையில் இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்றிருப்பதால் இலங்கை தொடருக்கு ஷிகர் தவான் தலைமையில் 2-ம் தர இந்திய அணி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதில் ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், பிரித்வி ஷா, மனிஷ் பாண்டே உள்பட 20 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இலங்கைக்கு எதிரான தொடரையொட்டி இந்திய வீரர்கள் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். … Read more இலங்கை தொடருக்காக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் இந்திய வீரர்கள்

தென் ஆப்பிரிக்க வேகங்கள் மிரட்டல்: மே.இ. தீவுகள் படுதோல்வி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேற்கிந்தியத் தீவுகள், தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 97 ரன்களுக்கு சுருண்டது. தென் ஆப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக லுங்கி என்கிடி 5 விக்கெட்டுகளையும், அன்ரிச் நோர்க்கியா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய … Read more தென் ஆப்பிரிக்க வேகங்கள் மிரட்டல்: மே.இ. தீவுகள் படுதோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு தகுதி

புதுடெல்லி,  உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கென்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 49 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெண்கலப்பதக்கம் வென்றார்.  இதையடுத்து சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் வெளியிட்ட முழுமையான ரேங்கிங் அடிப்படையில் மணிப்பூரை சேர்ந்த 26 வயதான மீராபாய் சானு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறார். இதனை பளுதூக்குதல் சம்மேளனம் நேற்று உறுதி செய்தது.  49 கிலோ பிரிவின் தரவரிசையில் 4-வது இடத்தில் … Read more டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு தகுதி

சக வீரர் மீது மோதி காயம்; பிளெஸ்சிஸ் சிகிச்சைக்காக அனுமதி: மாற்று வீரராக அயூப்

அபுதாபி, பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் எனப்படும் பி.எஸ்.எல். போட்டிகள் அபுதாபியில் நடந்து வருகின்றன.  இதில் 19வது லீக் போட்டி ஒன்றில், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் பெஷாவர் ஜால்மி அணிகள் விளையாடியுள்ளன. இந்த போட்டியின் 7 ஓவரில் டேவிட் மில்லர் அடித்து ஆடினார்.  இதனால் பந்து பவுண்டரியை நோக்கி சென்றது.  குவெட்டா அணியில் இடம் பெற்ற தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் ஃபேப் டு பிளெஸ்சிஸ் அதனை தடுக்க ஓடினார். இதில் சக வீரரான முகமது ஹஸ்னைன் என்பவரது காலில் … Read more சக வீரர் மீது மோதி காயம்; பிளெஸ்சிஸ் சிகிச்சைக்காக அனுமதி: மாற்று வீரராக அயூப்

ஃபீல்டிங் செய்யும் போது சக வீரருடன் மோதியதில் டு பிளசிஸ் காயம்: மருத்துவமனையில் பரிசோதனை

அபுதாபி, பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.  பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் குவெட்டா கிளேடியட்டர்ஸ் அணிக்காக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான டு பிளசிஸ் விளையாடி வருகிறார்.  அபுதாபியில் சனிக்கிழமை நடைபெற்ற 19-வது லீக் ஆட்டத்தில்  குவெட்டா கிளேடியட்டர்ஸ் மற்றும் பெஷாவர் சல்மி ஆகிய அணிகள் மோதின.   குவெட்டா கிளேடியட்டர்ஸ் அணி ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த போது பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த டுபிளஸிஸ்,  டேவிட் மில்லர் … Read more ஃபீல்டிங் செய்யும் போது சக வீரருடன் மோதியதில் டு பிளசிஸ் காயம்: மருத்துவமனையில் பரிசோதனை

ஐரோப்பிய கால்பந்து தொடர்: பின்லாந்து-டென்மார்க் போட்டி ரத்து

பின்லாந்து – டென்மார்க் அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. போட்டியின்போது டென்மார்க் அணியைச் சேர்ந்த கிறிஸ்டியன் எரிக்சன் என்ற வீரர் நிலைகுலைந்து மயங்கி விழுந்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. பின்லாந்து நாட்டின் கோபன்ஹேகன் பகுதியிலுள்ள பார்கென் திடலில் ஐரோப்பிய லீக் தொடரில் பின்லாந்து – டென்மார்க் அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி இன்று (ஜூன் 12) இரவு தொடங்கியது. இதில் முதல் பாதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோது டென்மார்க் அணியின் நட்சத்திர வீரர் … Read more ஐரோப்பிய கால்பந்து தொடர்: பின்லாந்து-டென்மார்க் போட்டி ரத்து