மாண்ட்ரியல் ஓபன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா அதிர்ச்சி தோல்வி

டொராண்டோ, மாண்ட்ரியல் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி கனடாவின் டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், தரவரிசையில் 4-வது இடம் வகிப்பவருமான அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா, தரநிலையில் 386-வது இடத்தில் உள்ள லாத்வியாவின் 35 வயது அனஸ்டாசியா செவஸ்தோவாவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் ஜெசிகா பெகுலா 6-3, 4-6, 1-6 என்ற செட் கணக்கில் செவஸ்தோவாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார். தோல்விக்கு பிறகு … Read more

சென்னை அணியின் புதிய கேப்டன் இவர் தான் – எம் எஸ் தோனி அறிவிப்பு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த இரண்டு சீசன்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை. குறிப்பாக ஐபிஎல் 2025 தொடரில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. இதற்கு ஏலத்தில் சரியான அணி அமையாததும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான அணியை தயார்படுத்தி வருகின்றனர். சீனியர் வீரர்கள் இல்லாத ஒரு முற்றிலும் இளம் வீரர்கள் அடங்கிய அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மாறி வருகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு யார் கேப்டனாக இருப்பார்கள் என்ற … Read more

கவாஸ்கரின் சாதனையை தகர்க்கும் வாய்ப்பை தவற விட்ட கில்

லண்டன், இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 2-வது இன்னிங்சில் 11 ரன்னில் ஆட்டமிழந்த இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இந்த தொடரில் மொத்தம் 754 ரன்கள் எடுத்துள்ளார். இதனால் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன் குவித்த கேப்டன்கள் பட்டியலில் இங்கிலாந்தின் கிரகாம் கூச்சை (752 ரன்கள், 1990-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான தொடரில்) பின்னுக்கு தள்ளி 2-வது … Read more

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை

லண்டன், இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்களில் சுருண்டது.இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 247 ரன்கள் எடுத்தது. இது இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 23 ரன்கள் கூடுதலாகும். 23 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா, இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் … Read more

ஆசிய கோப்பை போட்டி இடம் அறிவிப்பு: துபாயில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்

துபாய், நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி ஆட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்தாலும் போட்டி அரங்கேறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த போட்டித் தொடர் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறும் என்று நேற்று … Read more

கடந்த கால இந்திய அணியாக இருந்திருந்தால்.. பும்ரா குறித்து அஸ்வின் கருத்து!

Ind vs Eng 5th Test: இந்தியா டெஸ்ட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட அண்டர்சன் – டெண்டுல்கர் தொடர் விளையாடி வருகிறது. இதுவரை 4 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது 5வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வரும் நிலையில், இப்போட்டியை வென்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் விளையாடி வருகிறது. அதே சமயம், இந்திய அணி இப்போட்டியை … Read more

2011ஆம் ஆண்டுக்கு பின் இவர்தான்.. ஆகாஷ் தீப் சாதனை படைப்பு!

Ind vs Eng 5th Test: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட அண்டர்சன் – டெண்டுல்கர் தொடரை விளையாடி வருகின்றனர். இதுவரை இத்தொடரில் 4 டெஸ்ட் போட்டி முடிவடைந்துள்ளது. அதில் இங்கிலாந்து அணி முதல் மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி இரண்டாவது போட்டியிலும் வென்றுள்ளது. மான்செஸ்டரில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்த நிலையில், இத்தொடரின் 5வது போட்டி ஜூலை 31ஆம் தேதி … Read more

இது லிஸ்ட்லயே இல்லையே.. சிஎஸ்கே அணிக்கு வரும் யார்க்கர் கிங்?

T Natarajan at super kings academy: யார்க்கர் கிங் என ரசிகர்களால் அழைப்படுபவர் டி. நடராஜன். இவர் தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருக்கிறார். அதேபோல் TNPL-லில் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில், டி. நடராஜன் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சூப்பர் கிங்ஸ் அகாடமியில் பயிற்சி செய்து வருகிறார். இது ரசிகர்கள் மத்தியில் புதிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருக்கும் நடராஜன் எதற்காக சென்னை சேப்பாக்கத்தைல் பயிற்சி … Read more

பும்ராவை விட அதிக சம்பளம் வாங்கும் சிராஜ்! எப்படி தெரியுமா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் 247 ரன்கள் அடித்துள்ளது. இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா நான்கு விக்கெட்களை எடுத்துள்ளனர். இரண்டாவது இன்னிங்ஸில் தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லாத … Read more

ஆசிய கோப்பையில் இருந்து முக்கிய வீரர் விலகல்? இந்தியாவிற்கு பின்னடைவு!

அனைவரும் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆசிய கோப்பை தொடர் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. செப்டம்பர் 9ம் தேதி தொடங்கும் இந்த போட்டிகள் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியாவில் நடைபெற வேண்டிய ஆசிய கோப்பை தொடர் UAE நாட்டில் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அனைவரும் எதிர்பார்த்தபடி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குரூப் Aல் இடம் பெற்றுள்ளன. இந்த இரண்டு நாடுகளும் செப்டம்பர் 14ஆம் தேதி மோத … Read more