2026 IPL ஏலத்திற்கு முன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி விடுவிக்க வாய்ப்புள்ள 4 பிளேயர்கள்

IPL 2026: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2025 சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணி நான்கு தொடர் வெற்றிகளுடன் சிறப்பாகத் தொடங்கியது. ஆனால், அந்த வெற்றி வேகத்தைத் தக்கவைக்க முடியாமல், பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறத் தவறிவிட்டது. 2025 IPL சீசனில் 15 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் முடித்த டெல்லி கேப்பிடல்ஸ் அடுத்த சீசனுக்கு முன் சில முக்கிய மாற்றங்களைச் செய்ய திட்டமிட்டுள்ளது. 2026 IPL ஏலத்திற்கு முன் சில மோசமாகச் செயல்பட்ட வீரர்களை விடுவித்து, புதிய … Read more

21-ந்தேதி இந்திய குத்துச்சண்டை சம்மேளன நிர்வாகிகள் தேர்தல்

புதுடெல்லி, இந்திய குத்துச்சண்டை சம்மேளன நிர்வாகிகளின் பதவி காலம் கடந்த பிப்ரவரி 2-ந்தேதியுடன் முடிவடைந்தது. நிர்வாகிகள் தேர்தலை நடத்துவதில் சட்ட சிக்கல், பல்வேறு மேல்முறையீடு உள்ளிட்ட பிரச்சினைகளால் தள்ளிக்கொண்டே போனது. குத்துச்சண்டை சம்மேளனத்தின் அன்றாட பணிகளை இடைக்கால கமிட்டி கவனித்து வருகிறது. இந்த நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு இந்திய குத்துச்சண்டை சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் வருகிற 21-ந்தேதி டெல்லியில் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் குத்துச்சண்டை சம்மேளனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இதில் 2025-2029-ம் ஆண்டுக்கான … Read more

துலீப் கோப்பை கிரிக்கெட்: கிழக்கு மண்டல அணிக்கு முகமது ஷமி தேர்வு

மும்பை, துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) பெங்களூருவில் வருகிற 28-ந் தேதி முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந் தேதி வரை நடக்கிறது. இதன் கால்இறுதி ஆட்டங்களில் வடக்கு- கிழக்கு, மத்திய- வடகிழக்கு மண்டல அணிகள் மோதுகின்றன. தெற்கு மற்றும் மேற்கு மண்டல அணிகள் நேரடியாக அரைஇறுதியில் விளையாடுகின்றன. இந்த போட்டிக்கான மேற்கு மண்டல அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் மும்பையை சேர்ந்த ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்குர் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். மேலும் … Read more

மக்காவ் ஓபன் பேட்மிண்டன்: லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்

மக்காவ், மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி மக்காவ் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய இளம் வீரர் லக்சயா சென் 21-14, 18-21, 21-14 என்ற செட் கணக்கில் சீனாவின் சூயான் சென் சூவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் தருண் 21-12, 13-21, 21-18 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹூ ஜீயை சாய்த்து அரையிறுதிக்குள் நுழைந்தார். ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதியில் … Read more

மாண்ட்ரியல் ஓபன் டென்னிஸ்: கோகோ காப் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

டொராண்டோ, மாண்ட்ரியல் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி கனடாவின் டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பிரெஞ்சு ஓபன் சாம்பியனான அமெரிக்காவின் கோகோ காப் 4-6, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வெரோனிகா குடெர்மித்தோவாவை (ரஷியா) வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இதே போல் தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் மிரா ஆன்ட்ரீவா (ரஷியா) 6-7 (5-7), 4-6 என்ற நேர் செட்டில் 32-ம் நிலை … Read more

பாகிஸ்தான் உள்பட 3 நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடர்: சார்ஜாவில் நடக்கிறது

துபாய், நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு சிறந்த முறையில் தயாராகும் பொருட்டு பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் கலந்து கொள்ளும் டி20 கிரிக்கெட் தொடருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமீரகத்தில் உள்ள சார்ஜாவில் வருகிற 29-ந் தேதி முதல் செப்.7-ந்தேதி … Read more

இனி அவ்வளவுதான்.. முடிவுக்கு வந்த ரஹானே, புஜாரா கரியர்! பிசிசிஐ அதிரடி

Ajinkya Rahane And Pujara: இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களில் அஜின்கியா ரஹானே மற்றும் சத்தீஸ்வர் புஜாரா உள்ளனர். இவர்கள் ஒருநாள், டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக அதிகம் விளையாடவிட்டாலும், இவர்கள் டெஸ்ட் அணியின் முக்கிய துணாக இருக்கின்றனர். குறிப்பாக புஜாரா, ஒரு காலகட்டத்தில் தவிர்க்க முடியாத டெஸ்ட் வீரராக இருந்தார். அவர் 100க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். ஆனால் கடந்த சில காலமாகவே இந்த இரண்டு வீரர்களும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய … Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைகிறாரா சாம்சன்? முதல் ரியாக்ஷன்

Sanju Samson ; ஐபிஎல் 2025 சீசன் முடிந்ததில் இருந்து, சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறுவது குறித்து பல யூகங்கள் எழுந்தன. இந்த டிரேடிங் தொடர்பான வதந்திகளுக்கு சாம்சன் தனது பதிலில் எந்தவொரு தெளிவான மறுப்பையும் தெரிவிக்கவில்லை. இதனால், அவர் ராஜஸ்தானை விட்டு வெளியேறுவது உறுதி என்பதை பலரும் நம்பத் தொடங்கினர். ஏனென்றால், அப்படி எந்த திட்டமும் இல்லையென்றால், இந்த வதந்திகளை சஞ்சு சாம்சன் மறுத்திருப்பார். ஆனால், சாம்சன் … Read more

மீண்டும் டெஸ்ட் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், சர்ஃபராஸ் கான்? லேட்டஸ்ட் அப்டேட்!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தங்களது இடத்தை மீண்டும் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், நட்சத்திர பேட்ஸ்மேன்களான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சர்ஃபராஸ் கான் ஆகியோர் வரவிருக்கும் துலீப் டிராபி தொடரில் விளையாட உள்ளனர். இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த முடிவு, இந்திய உள்நாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளதுடன், அணி தேர்வில் ஒரு புதிய போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடங்கவுள்ள துலீப் டிராபி … Read more

பாத்ரூமில் கதறி அழுத விராட் கோலி.. 2019ல் நடந்தது என்ன?

Virat Kohli: நடந்து முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்று 18 ஆண்டு கனவை நிறைவு செய்துக்கொண்டது. பிரபல ஐபிஎல் அணியில் கோப்பையை வெல்லாத அணியாக ஆர்சிபி அணி இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டு வென்று ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற அணியில் ஒன்றாக மாறியது. இது ரசிகர்கள் இடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  விராட் கோலி ஆனந்த கண்ணீர் அந்த அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் … Read more