சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைகிறாரா சாம்சன்? முதல் ரியாக்ஷன்

Sanju Samson ; ஐபிஎல் 2025 சீசன் முடிந்ததில் இருந்து, சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறுவது குறித்து பல யூகங்கள் எழுந்தன. இந்த டிரேடிங் தொடர்பான வதந்திகளுக்கு சாம்சன் தனது பதிலில் எந்தவொரு தெளிவான மறுப்பையும் தெரிவிக்கவில்லை. இதனால், அவர் ராஜஸ்தானை விட்டு வெளியேறுவது உறுதி என்பதை பலரும் நம்பத் தொடங்கினர். ஏனென்றால், அப்படி எந்த திட்டமும் இல்லையென்றால், இந்த வதந்திகளை சஞ்சு சாம்சன் மறுத்திருப்பார். ஆனால், சாம்சன் … Read more

மீண்டும் டெஸ்ட் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், சர்ஃபராஸ் கான்? லேட்டஸ்ட் அப்டேட்!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தங்களது இடத்தை மீண்டும் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், நட்சத்திர பேட்ஸ்மேன்களான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சர்ஃபராஸ் கான் ஆகியோர் வரவிருக்கும் துலீப் டிராபி தொடரில் விளையாட உள்ளனர். இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த முடிவு, இந்திய உள்நாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளதுடன், அணி தேர்வில் ஒரு புதிய போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடங்கவுள்ள துலீப் டிராபி … Read more

பாத்ரூமில் கதறி அழுத விராட் கோலி.. 2019ல் நடந்தது என்ன?

Virat Kohli: நடந்து முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்று 18 ஆண்டு கனவை நிறைவு செய்துக்கொண்டது. பிரபல ஐபிஎல் அணியில் கோப்பையை வெல்லாத அணியாக ஆர்சிபி அணி இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டு வென்று ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற அணியில் ஒன்றாக மாறியது. இது ரசிகர்கள் இடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  விராட் கோலி ஆனந்த கண்ணீர் அந்த அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் … Read more

இனி பும்ரா டெஸ்ட்டில் விளையாடா மாட்டாரா? பிசிசிஐ முடிவால் வந்த சிக்கல்!

தற்போதுள்ள இந்திய அணியில் மிகவும் முக்கியமான வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. இவரது பங்களிப்பு என்பது இந்திய அணிக்கு முக்கியமானதாக இருக்கிறது. ஆனால் பும்ராவால் டெஸ்ட் போன்ற பெரிய தொடரில் தொடர்ந்து விளையாட முடியாத சூழல் உள்ளது. அதாவது பும்ராவின் பந்து வீச்சு திறனுக்கு அவரது உடல் ஒத்துழைப்பதில்லை. இதன் காரணமாக அவரால் ஒரு டெஸ்ட் போட்டி விளையாட முடிந்தால், அடுத்த போட்டி விளையாட முடியவில்லை. அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது.  முன்பை போல் பும்ராவால் செயல்பட முடியவில்லை … Read more

இந்த 3 வீரர்களின் வாய்ப்பை தட்டிப்பறித்த கவுதம் கம்பீர்! இனி அணியில் இடம் பெறுவார்களா?

England vs India: இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணியும், ஒரு போட்டியில் இந்திய அணியும் வென்றுள்ள நிலையில் ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது. இதனால் கடைசி டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் … Read more

மக்காவ் ஓபன் பேட்மிண்டன்: லக்ஷயா சென் காலிறுதிக்கு முன்னேற்றம்

மக்காவ், மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி மக்காவ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்திய இளம் வீரர்லக்சயா சென் 21-14, 14-21, 21-17 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் சிகோ அவுரா வார்டோயோவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 47-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் தருண் சரிவில் இருந்து மீண்டு 19-21, 21-14, 22-20 என்ற செட் கணக்கில் 15-ம் நிலை … Read more

புரோ கபடி லீக் அட்டவணை அறிவிப்பு

மும்பை, நடப்பு சாம்பியன் அரியானா ஸ்டீலர்ஸ், தபாங் டெல்லி, உ.பி.யோத்யாஸ், பாட்னா பைரட்ஸ், யு மும்பா, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு புல்ஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்கும் 12-வது புரோ கபடி லீக் போட்டிக்கான அட்டவணை நேற்று அறிவிக்கப்பட்டது. இதன்படி இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா இரு முறை … Read more

தொடர்ச்சியாக 15 போட்டிகளில் டாசில் தோல்வியடைந்த இந்திய அணி

லண்டன், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ‘ஆண்டர்சன் – தெண்டுல்கர்’ கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முடிவடைந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் (4-வது போட்டி டிரா) முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆலி போப் பந்துவீச்சை … Read more

தேசிய மாஸ்டர்ஸ் ஸ்குவாஷ் போட்டி: சென்னையில் நாளை தொடக்கம்

சென்னை, மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) சார்பில் அல்டிஸ் நிறுவனம் ஆதரவுடன் தேசிய மாஸ்டர்ஸ் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.சி.சி. மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) முதல் 6-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆண்கள் பிரிவில் 35, 40, 45, 50, 55, 60, 65, 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், பெண்கள் பிரிவில் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் என 9 வகையான வயது பிரிவினருக்கு தனித்தனியாக போட்டி நடத்தப்படுகிறது. தமிழ்நாடு, மராட்டியம், டெல்லி, … Read more

மாண்ட்ரியல் ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

டொராண்டோ, மாண்ட்ரியல் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி கனடாவின் டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் அடியெடுத்து வைத்த விம்பிள்டன் சாம்பியனான இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-3, 6-1 என்ற நேர் செட்டில் குவ் ஹன்யூவை (ஸ்பெயின்) வெளியேற்றி 3-வது சுற்றை அடைந்தார். இதே போல் தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் அமன்டா அனிசிமோவா 6-4, 7-6 (7-5) என்ற நேர் செட்டில் லுலு சன்னை (நியூசிலாந்து) … Read more