தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதில் சிக்கல்…?

புதுடெல்லி, இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் நிலவி வந்ததன் காரணமாக 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும், தர்மசாலாவில் நடந்த பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான ஆட்டமும் பாதியில் கைவிடப்பட்டது. இந்த நிலையில் போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து அணி நிர்வாகிகள், ஒளிபரப்புதாரர்கள், பாதுகாப்பு முகமைகள் உள்ளிட்ட சம்பந்தபட்டவர்களிடம் ஆலோசனை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என நேற்றிரவு … Read more

தோனியை பின்பற்றி சீனியர்களை வெளியேற்றிய கௌதம் கம்பீர்? என்ன நடந்தது?

இந்திய அணியின் ஜாம்பவான்களாக இருந்து வந்த விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வையை அறிவித்துள்ளனர். கடந்த வாரம் ரோகித் சர்மா ஓய்வை அறிவித்துள்ள நிலையில் நேற்று விராட் கோலியும் தன்னுடைய 36-வது வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்திய டெஸ்ட் தொடர்களில் இந்த இரண்டு வீரர்களின் தோல்வி அதிகமாக பேசப்பட்ட நிலையில் இருவரும் தற்போது ஓய்வை அறிவித்துள்ளனர். நியூசிலாந்துக்கு … Read more

சென்னை, ஹைதராபாத்தில் போட்டி இல்லை! ஐபிஎல் மீண்டும் தொடங்கும் தேதி!

IPL 2025: இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக கடந்த வாரம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டு ஒவ்வொரு வீரர்களும் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டனர். மீண்டும் போட்டிகள் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் தொடங்கும் என்று முதலில் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்பியுள்ளதால் வரும் மே 17ஆம் தேதி முதல் மீண்டும் ஐபிஎல் போட்டிகள் தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ள நிலையில், பல மாற்றங்களுடன் … Read more

ஐபிஎல்க்கு பிறகு ஒட்டுமொத்தமாக மாறும் இந்திய அணி! இவர்களுக்கு வாய்ப்பு இல்லை!

ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இந்திய அணி இங்கிலாந்துக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ஜூன் 20ஆம் தேதி இந்த தொடர் தொடங்குகிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த தொடர் இந்திய அணிக்கு பெரும் சவாலாக அமைய உள்ளது. காரணம் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். “டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் முதன்முதலில் விளையாடி … Read more

விராட் கோலி ஓய்வு.. சச்சின் டெண்டுல்கர் உருக்கம்! என்ன சொன்னார்?

ஐபில் போட்டிகளுக்கு பிறகு இந்திய அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த சுற்று பயனத்தில் 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இச்சூழலில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இவரை தொடர்ந்து தற்போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் மற்றும் அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலியும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது அவர்களின் ரசிகர்களின் மத்தியில் … Read more

'டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம் முடிகிறது' – வைரலாகும் பி.சி.சி.ஐ பதிவு

புதுடெல்லி, இந்திய அணியின் சீனியர் வீரர் விராட் கோலி (வயது 36). இவர் இந்திய அணிக்காக 123 டெஸ்ட், 302 ஒருநாள் மற்றும் 125 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். கடந்த டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த விராட், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என அறிவித்தார். இதனிடையே இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு … Read more

விராட் கோலியின் ஓய்வுக்கு கம்பீர் தான் காரணமா? என்ன செய்தார்?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. கிரிக்கெட் வரலாற்றில் இவர் பல அசாத்திய சாதனைகளை படைத்துள்ளார். இந்த நிலையில், இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருப்பது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஏற்கனவே இவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தார். இன்னும் ஒருநாள் போட்டியில் மட்டும் ஓய்வை அறிவிக்காமல் உள்ளார். விராட் கோலி நல்ல ஃபிட்னஸுடன் இருக்கும் நிலையில், அவர் இன்னும் 2,3 ஆண்டுகள் … Read more

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் விராட் கோலி

லண்டன், கடந்த ஆண்டு இறுதியில் சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதல்முறையாக இந்தியா 0-3 என்ற கணக்கில் இழந்தது. இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா 1-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை கோட்டைவிட்டது. இந்த தோல்வியினால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இந்த தொடர்களில் முன்னணி வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் பேட்டிங் மோசமாக … Read more

விராட் கோலியின் இடம் யாருக்கு…? போட்டிப்போடும் 5 வீரர்கள்!

Virat Kohli Retirement: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி வரும் ஜூன் மாதத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட உள்ளனர். இத்தொடர் ஜூன் 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணி இம்மாதம் இறுதியில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.  குறிப்பாக … Read more

வெளிநாட்டு வீரர்களை வற்புறுத்தி அழைக்கும் எண்ணம் இல்லை: ஐ.பி.எல். நிர்வாகம்

புதுடெல்லி, இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றத்தால் நாட்டில் அசாதாரணமான சூழல் நிலவியது. இதனால், 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒரு வாரம் நிறுத்தப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதையடுத்து பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்பினர். இன்னும் 12 லீக் மற்றும் இறுதிப்போட்டி உள்பட 4 பிளே-ஆப் சுற்று என மொத்தம் 16 ஆட்டங்களை நடத்த வேண்டி உள்ளது. சில தினங்களுக்கு முன்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டன. … Read more