ஐபிஎல்: 2 டிக்கெட் வாங்கினால் ஜெர்சி இலவசம்..வெளியான அறிவிப்பு

ஐதராபாத், இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான அட்டவணை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. . இதில் பங்கேற்கும் 10 அணிகளும் அதற்கான பயிற்சியை தொடங்கி வருகின்றன. … Read more

மகளிர் பிரீமியர் லீக்: குஜராத் – டெல்லி அணிகள் இன்று மோதல்

லக்னோ, 5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்றிரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடக்கும் 17-வது லீக் ஆட்டத்தில் குஜராத் – டெல்லி அணிகள் மோத உள்ளன. 7 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 6 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி 3வது இடத்தில் உள்ளது . தினத்தந்தி Related Tags : மகளிர் பிரீமியர் லீக்  குஜராத்  Delhi 

ரோகித்தை கேப்டன் பதவில் இருந்து தூக்க திட்டமா.. பிசிசிஐ-யின் முடிவு என்ன?

சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தோல்வியை தழுவியது. இதையடுத்து இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டனை தேர்வு செய்வது குறித்து தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் பிசிசிஐ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.  இருப்பினும் ரோகித் சர்மா கேப்டன்சியில் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, ஒருநாள் உலக கோப்பை … Read more

ரூ.7 கோடி செக் மோசடி.. முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர சேவாக்கின் சகோதரர் கைது!

Virender Sehwag Brother Arrested: இந்திய அணியின் அதிரடி தொடர்க்க வீரர் வீரேந்தர சேவாக். 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் முக்கிய வீரர் இவர். 251 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இவர் 8273 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8586 ரன்கள் குவித்துள்ளார். மொத்தமாக இவர் 38 சர்வதேச சதங்களையும், 70 சர்வதேச அரை சதங்களையும் விளாசி இருக்கிறார்.   இவர் 2013ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து தனது … Read more

நியூஸிலாந்து அணியில் முக்கிய வீரர் காயம்! பைனலில் விளையாடுவது சந்தேகம்!

வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் சாம்பியன்ஸ் டிராபி பைனல் போட்டியில் விளையாட உள்ளனர். இந்நிலையில் நியூசிலாந்தின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் மாட் ஹென்றி இந்தியாவுக்கு எதிரான பைனல் போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான அரை இறுதி போட்டியில் பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது மாட் ஹென்றிக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. வேகமாக வந்த பந்தை பிடிக்க முயன்ற போது, பந்து அவரது தோள்பட்டையில் பட்டது. உடனடியாக அவர் வலி தாங்க … Read more

இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. டிரா ஆனால் முடிவு என்ன? ஐசிசியின் விதி இதுதான்!

மினி உலகக் கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இத்தொடரின் இறுதி போட்டி நாளை மறுநாள் (மார்ச் 09) துபாயில் நடைபெறுகிறது. இரு அணிகளும் பலமான அணி என்பதால் கடைசி வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதில் சந்தேகம் இல்லை. மேலும், வெற்றி பெற போவது யார்? என்பதில் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.  டிரா ஆனால் என்ன ஆகும்?  இந்த நிலையில், ஒருவேளை போட்டி டிரா … Read more

ரோகித் சர்மா, கவுதம் கம்பீர் இருவருக்கும் சவுக்கடி கொடுத்த சுனில் கவாஸ்கர்..!

Sunil Gavaskar Slams Rohit Sharma : இந்திய அணியின் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. வரும் 9 ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக துபாய் மைதானத்தில் சாம்பியன்ஸ் கோப்பைக்காக விளையாட உள்ளது. இந்த போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோருக்கு முக்கியமான அறிவுரையை இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் வழங்கியுள்ளார். ரோகித்சர்மா பேட்டிங் ஒழுங்காக விளையாடவில்லை, அவருடைய மோசமான பார்ம் … Read more

இந்திய அணிக்கு பெரிய அடி! பைனலில் ஹர்திக் பாண்டியா இல்லை?

கடந்த மாதம் தொடங்கிய சாம்பியன்ஸ் டிராபி தொடர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளன. பாகிஸ்தான் 29 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு ஐசிசி தொடரை நடத்தினாலும் அரை இறுதிக்கு தகுதி பெறவில்லை. வரும் ஞாயிற்றுக்கிழமை துபாயில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே பைனல் போட்டி நடைபெறுகிறது. அரையிறுதியில் இந்தியா ஆஸ்திரேலியா அணியையும், நியூசிலாந்து தென்னாபிரிக்கா அணியையும் வெளியேற்றியது. இரண்டு அணிகளும் … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணியை வீழ்த்தி பஞ்சாப் எப்.சி. வெற்றி

ஐதராபாத், 3 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த தொடரில் ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி. – பஞ்சாப் எப்.சி. அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், பஞ்சாப் எப்.சி. அணி சார்பில் அலெக்ஸ் சாஜி ஆட்டத்தின் 41-வது நிமிடத்திலும், லூகா 56-வது நிமிடத்திலும், ஷாமி 86-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். ஐதராபாத் எப்.சி. அணி சார்பில் ராம்லுஞ்சுங்கா … Read more

மகளிர் பிரீமியர் லீக்: உ.பி.வாரியர்ஸ் அணிக்கு எதிராக மும்பை பந்துவீச்சு தேர்வு

லக்னோ, 5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்றிரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடக்கும் 16-வது லீக் ஆட்டத்தில் தீப்தி ஷர்மா தலைமையிலான உ.பி. வாரியர்ஸ் அணி, ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்சுடன் மோதுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி உ.பி. வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் … Read more