உலகக் கோப்பைக்கு ரெடியானது ஆஸ்திரேலியா… இந்தியா தோற்றது எந்த இடத்தில் தெரியுமா?

IND vs AUS 3rd ODI: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. ஏற்கெனவே, இந்த தொடரின் முதலிரண்டு போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியிருந்தாலும், ரோஹித் சர்மா, விராட் கோலி, குல்தீப் யாதவ், பும்ரா ஆகியோரின் வருகையால் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. மேலும், இந்த தொடரை இந்தியா வைட்வாஷ் செய்யமா எனவும் எதிர்பார்க்கப்பட்டது.  அந்த வகையில், போட்டியின் டாஸை வென்ற … Read more

’ஹிட்மேன்’ சிக்சரில் மெகா சாதனை படைத்த ரோகித் சர்மா..!

ஆஸ்திரேலியா இமாலய இலக்கு இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வெற்றி பெற்ற அந்த அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்மித் மற்றும் லாபுசேன் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 352 ரன்கள் குவித்தது. மார்ஷ் ஆடிக் கொண்டிருந்தபோது, ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 500 ரன்களையும் கடக்க வாய்ப்பிருந்தது. ஆனால், அதன்பிறகு விக்கெட்டுகள் சீரான … Read more

ஆஸ்திரேலியா செட் செய்த இமாலய இலக்கு – இந்தியா இதை செய்தால் வைட்வாஷ் செய்யலாம்

IND vs AUS 3rd ODI: இந்தியா – ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிர கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. வார்னர் – மிட்செல் மார்ஷ் ஆகியோர் ஓப்பனர்களாக களமிறங்கினர். பும்ரா – சிராஜ் ஆகியோரின் பந்துவீச்சை இந்த ஜோடி அதிரடியாக தாக்கியது. குறிப்பாக, இந்த தொடரில் மூன்றாவது அரைசதத்தை இன்று பதிவு செய்தார். 8.1 ஓவர்களில் … Read more

எந்த பக்கம் திரும்பினாலும் அடி… பும்ராவை ஓடவிட்ட ஆஸ்திரேலியா – நொந்துபோன இந்தியா

இந்தியா – ஆஸ்திரேலியா மோதல் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி இந்த தொடரையும் ஏற்கனவே கைப்பற்றியுள்ளது. இருப்பினும் மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் அந்த அணியை தோற்கடித்து ஓயிட்வாஷ் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் தான் இந்திய அணி களமிறங்கியுள்ளது. பிளேயிங் லெவனை பொறுத்தவரை சுப்மான் கில்லுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி, பும்ரா … Read more

Asian Games 2023: வெண்கலம் வென்றார் தமிழர்… யார் இந்த விஷ்ணு சரவணன்?

Asian Games 2023: ஆசிய விளையாட்டு தொடரில், பாய்மர படுகுப்போட்டி பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த விஷ்ணு சரவணன் வெண்கலம் பதக்கத்தை வென்றார். இவர் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் பிறந்தவர் ஆவார்.

16 ஆண்டுகள் யுவராஜ் கட்டிகாத்த சாதனை… ஒரே நாளில் ஊதித்தள்ளிய நேபாள் – எத்தனை ரெகார்டு பாருங்க!

Nepal T20 Records: ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகின்றன. பல்வேறு வகையிலான போட்டிகள் நடைபெற்றாலும், இந்தியர்களின் முழு கவனமும் கிரிக்கெட்டின் மீது தான் அதிக இருக்கிறது. ஏனென்றால், முதல்முறையாக ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ளது. அதுமட்டுமின்றி இந்திய மகளிர் அணி கிரிக்கெட்டில் தங்கம் வென்று சாதனை படைத்த நிலையில், இந்திய ஆடவர் அணி மீதும் தற்போது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒரே நாளில் உச்சம் பெற்ற நேபாளம் … Read more

உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியா வந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு உற்சாக வரவேற்பு

புதுடெல்லி, 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் துவங்க இருக்கிறது. இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க ஒவ்வொரு அணியும் சிறப்பான முறையில் தயாராகி வருகிறது. இந்த நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்வதற்காக ஆப்கானிஸ்தான் அணி இந்தியா வந்தடைந்தது. இந்தியா வந்த ஆப்கானிஸ்தான் அணியினருக்கு பட்டாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் எக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளன. ஆப்கானிஸ்கான் அணி … Read more

படகு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்

பெய்ஜிங், படகு போட்டி RS:X ஆடவர் பிரிவில் இந்தியாவின் எபாத் அலி வெண்கல பதக்கம் வென்றார். படகு போட்டியில் பெண்கள் Dinghy ILCA4 பிரிவில் இந்தியாவின் நேஹா தாகூர் வெள்ளிப்பதக்கம் வென்ற நிலையில், தற்போது ஆடவர் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. தினத்தந்தி Related Tags : படகு போட்டி  வெண்கல பதக்கம்  ஆசிய விளையாட்டுப் போட்டி  இந்தியா 

குதிரையேற்ற போட்டியில் 41 ஆண்டுக்கு பிறகு தங்கம்.. உலகை திரும்பி பார்க்க வைத்த இந்திய அணி..!

1982ம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில், குதிரையேற்ற பிரிவில் இந்தியா தங்கப் பதக்கங்களை வென்றது. இந்தியா முதல் முறையாக பங்கேற்றபோதும், சர்வதேச அரங்கில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. ரகுபீர் சிங், குலாம் முகமது கான், பிரஹலாத் சிங் போன்ற வீரர்கள் தனிநபர் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றனர். அணிக்கான போட்டியில் ரகுபீர் மற்றும் முகமது ஆகியோர் தங்கம் வென்றனர். இந்த போட்டிக்கு பிறகு குதிரையேற்ற பிரிவில் இந்தியா தங்கம் வென்றதில்லை. அந்த கனவு 41 … Read more

ஆசிய விளையாட்டு: படகு போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்

பெய்ஜிங், ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடைபெற்ற படகு போட்டியில் மகளிர் Dinghy ILCA4 பிரிவில் இந்தியாவின் நேஹா தாகூர் வெள்ளிப்பதக்கம் வென்றார். 11 ரேஸ்களில் 27 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கத்தை இந்தியா வென்றது. தாய்லாந்தின் நெப்போஸ்ர்ன் தங்க பதக்கமும், சிங்கப்பூர் வெண்கல பதக்கமும் வென்றது. ஆசிய விளையாட்டு தொடரில் இன்று இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுவாகும். Many congratulations to Neha Thakur on winning the #SilverMedal in the ILCA4 … Read more