இலங்கைக்கு எதிரான ஆப்கானிஸ்தான் வெற்றியை நடனமாடி கொண்டாடிய இந்திய முன்னாள் வீரர்கள்…!

புனே, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கையும், ஆப்கானிஸ்தானும் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி ஆப்கானிஸ்தானின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இலங்கை 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 241 ரன்களே எடுத்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக நிசாங்கா 46 ரன்கள் அடித்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் பரூக்கி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 242 ரன் எடுத்தால் வெற்றி … Read more

சுப்மான் கில்லுக்கு மீண்டும் ஓய்வு? ஓப்பனிங்கில் அதிரடி வீரர்… அசூர பலம் பெறும் இந்தியா

India National Cricket Team: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா (Rohit Sharma) அந்த அணி சார்பில் நடப்பு உலகக் கோப்பையில் அதிக ரன்களை குவித்தவராக உள்ளார். ஓப்பனிங்கில் ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டம் இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது எனலாம். அவர் ஆரம்பத்தில் செட் செய்து கொடுக்கும் ஸ்கோரை விராட் கோலி, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் இலக்கு வரை எடுத்துச் சென்று வெற்றியை பெற்றுத் தருகின்றனர். … Read more

உலகக் கோப்பையில் சீன்கள் மாறுது… அரையிறுதியில் காலடி வைக்கப்போவது யார் யார்?

ICC World Cup 2023: நடப்பு உலகக் கோப்பை தொடரில் இதுவரை (ஆப்கானிஸ்தான் – இலங்கை போட்டி வரை) அனைத்து அணிகளும் தலா 6 போட்டிகளில் விளையாடிவிட்டன. இதில் இந்தியா அணி (Team India) மட்டுமே தோல்வியடையாமல் உள்ளது. தென்னாப்பிரிக்க அணி ஒருமுறை தோல்வியை தழுவி உள்ளது. நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் தலா 2 தோல்விகளுடன் முறையே 3ஆவது, 4ஆவது இடத்தில் உள்ளனர்.  இந்த உலகக் கோப்பையின் சுவாரஸ்யமே ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகளின் எழுச்சிதான். ஆப்கானிஸ்தான் அணி … Read more

ஹர்திக் பாண்டியா உள்ளே வந்தால்… இவரை வெளியே வையுங்க… இந்தியாவின் வெற்றிநடை தொடரும்!

Indian Cricket Team: நடப்பு ஐசிசி உலகக் கோப்பை தொடர் (ICC World Cup 2023) தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது எனலாம். அரையிறுதிக்கு தகுதிபெறுவதற்கு பல அணிகள் முட்டிமோதி வருகின்றனர். நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் இந்த அரையிறுதி ரேஸில் தற்போது முன்னிலையில் இருந்தாலும் அவர்களின் அடுத்தடுத்த போட்டி மிக முக்கியமானதாகும்.  ஆனால், இந்திய அணிக்கு (Team India) அரையிறுதி குறித்த கவலை என ஏதும் இல்லை. நல்ல ரன்ரேட்டுடன் விளையாடிய 6 போட்டிகளிலும் … Read more

உலகக்கோப்பை கிரிக்கெட்: இலங்கைக்கு எதிராக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு

புனே, ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் -இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இரு நாட்டு அணி வீரர்கள் விவரம்: ஆப்கானிஸ்தான்; ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கே), அஸ்மத்துல்லா உமர்சாய், இக்ரம் அலிகில் … Read more

உலகக் கோப்பை கிரிக்கெட்: இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்

புனே, 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று புனேயில் நடக்கும் 30-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் தலா 2 வெற்றி, 3 தோல்வி என்று 4 புள்ளிகளுடன் உள்ள நிலையில் எஞ்சிய ஆட்டங்களில் வென்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். இன்றைய ஆட்டத்தின் முடிவு முக்கியம் என்பதால் இரு அணியினரும் களத்தில் வரிந்து கட்டி நிற்பார்கள். முதல் 3 ஆட்டங்களில் தோற்ற இலங்கை … Read more

அரையிறுதியை நோக்கி ஆப்கானிஸ்தான்… வெளியேறுகிறதா இலங்கை அணி!

SL vs AFG Match Score Update: உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 241 ரன்களுக்கு ஆல்அவுட்டாகி உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம்… இந்திய அணியின் சிறந்த பீல்டராக ராகுல் தேர்வு…!

லக்னோ, உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 87 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 49 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 34.5 … Read more

என்னைவிட சிறந்த பௌலர் இந்த இந்திய வீரர்தான்… பாகிஸ்தான் வேகப்புயல் வாசிம் அக்ரம் புகழாரம்!

Indian Cricket Team: நடப்பு ஐசிசி உலகக் கோப்பை தொடரின் (ICC World Cup 2023) லீக் சுற்று போட்டிகள் தற்போது இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளன. அனைத்து அணிகளும் 6 போட்டிகளில் விளையாடிவிட்டன. இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் தற்போது தங்களின் 6ஆவது லீக் போட்டியில் விளையாடி வருகின்றன. எனவே அனைத்து அணிகளுக்கும் இன்னும் மூன்று போட்டிகள் மட்டுமே உள்ளன.  தற்போது அனைத்து அணிகளையும் விட இந்திய அணி (Team India) சிறப்பான நிலையில் உள்ளது எனலாம். … Read more

டக்-அவுட்டில் தெண்டுல்கரை சமன் செய்த விராட் கோலி..!!

லக்னோ, இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி லக்னோவில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர் சுப்மன் கில் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். கவர் டிரைவ் மற்றும் ஆப் சைடு திசைகளில் கோலி பவுண்டரி அடிக்க முயன்றபோது, இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக பீல்டிங் செய்து தடுத்தனர். ரன் கணக்கை தொடங்க சிரமப்பட்ட கோலி, டேவிட் வில்லே வீசிய … Read more