விராட் கோலி 1 ரன்னை அடிச்சதும்… என்ன செய்தார் தெரியுமா? வீடியோவை பாருங்க!

India vs Australia, Virat Kohli Celebration: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (அக். 25) நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா 0-2 என்ற கணக்கில் தொடரை வென்ற நிலையில், மூன்றாவது போட்டி சம்பிரதாயமாக நடைபெறுகிறது. Add Zee News as a Preferred Source India vs Australia: இந்திய அணியில் பெரிய மாற்றம் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு … Read more

ஆட்டம் காட்டிய ரோஹித்… முடித்து வைத்த விராட் கோலி – இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி

India vs Australia 3rd ODI Highlights: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஓடிஐ போட்டி இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணியில் நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு பதில் குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் விளையாடினர். ஆஸ்திரேலிய அணியில் சேவியர் பார்ட்லட்டுக்கு பதில் நேதன் எல்லிஸ் விளையாடினார். Add Zee News as a Preferred Source India vs Australia: 237 … Read more

ஓய்வு பெறுகிறார்களா விராட் மற்றும் ரோஹித்? போட்டி முடிந்த பின்பு சொன்ன தகவல்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை பெற்று தந்தனர். இருப்பினும் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்ததால், தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இந்த வெற்றியை காட்டிலும், போட்டிக்கு பிறகு இந்திய கிரிக்கெட்டின் இரண்டு மாபெரும் தூண்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு ஆற்றிய உணர்ச்சிப்பூர்வமான … Read more

அதிர்ச்சி சம்பவம்! இந்தியாவில் ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை?

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக வந்துள்ள ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த இரண்டு வீராங்கனைகளுக்கு, மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம், நாட்டிற்கு பெரும் அதிர்ச்சியையும், அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து, குற்றவாளியை கைது செய்துள்ளது.  Add Zee News as a Preferred Source நடந்தது என்ன? ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடருக்காக, ஆஸ்திரேலிய மகளிர் … Read more

IND vs SA: சுப்மன் கில் இல்லை! இந்திய அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர்?

தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவில் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில், அடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முக்கிய தொடருக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய A மற்றும் தென்னாப்பிரிக்கா A அணிகளுக்கு இடையேயான தொடரை ஏற்பாடு செய்துள்ளது. இந்த அதிகாரப்பூர்வமற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், அனைவரின் கவனமும் தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அணி தேர்வின் மீது திரும்பியுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் … Read more

கபடியில் கில்லி! தங்கம் வென்ற கார்த்திகா… யார் இந்த கண்ணகி நகர் 'பைசன்'?

Kannagi Nagar Karthika: 3வது ஆசிய இளைஞர் விளையாட்டு போட்டிகள் (Asian Youth Games 2025) பஹ்ரைன் நாட்டின் மனமா நகரில் நடைபெற்று வருகிறது. இதற்கு முன் 2013ஆம் ஆண்டில் சீனாவின் நான்ஜிங் நகரில் நடைபெற்றிருந்தது. அதன்பின் சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய இளைஞர் விளையாட்டு தொடர் நடைபெறுகிறது. Add Zee News as a Preferred Source Kannagi Nagar Karthika: ஆசிய இளைஞர் விளையாட்டு  போட்டிகள்  அதிகராப்பூர்வமாக அக்டோபர் 22ஆம் தேதி தொடங்கிய … Read more

ரோகித் சர்மாவுக்கு மும்பை அணி வைக்கும் அடுத்த செக்! ஐபிஎல் ஓய்வு விரைவில்

Rohit Sharma : இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசனுக்கான மினி ஏலத்திற்கு (Mini-Auction) இன்னும் ஒரு மாதம் கூட இல்லை. இந்த நிலையில், ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் (MI) அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தில் (SRH) இருக்கும் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷனை மீண்டும் அணிக்குக் கொண்டு வரத் தீவிரமாக முயற்சித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது 38 வயதை நெருங்கும் ரோஹித் ஷர்மாவின் ஐபிஎல் கிரிக்கெட் … Read more

ஆசிய இளையோர் கபடியில் தங்கம் வென்ற தமிழ்நாடு வீரர்கள் -உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் போட்டியில் , இந்திய கபடி அணி ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தங்கப் பதக்கங்களை வென்றது அறிந்து மகிழ்ந்தோம். பெண்கள் அணியில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த தங்கை கார்த்திகாவும், ஆண்கள் அணியில் தம்பி அபினேஷ் மோகன்தாஸும் இடம்பெற்றிருந்தது நமக்கெல்லாம் பெருமை. தம்பி அபினேஷ் தேனியில் உள்ள நமது SDAT விடுதியில் தங்கி பயிற்சி எடுத்தவர் என்பதும், தங்கை … Read more

தமிழ்நாட்டில் ஜூனியர் ஆக்கி உலகக் கோப்பை: பாகிஸ்தான் விலகியது

சென்னை, இந்த ஆண்டு நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை சென்னை மற்றும் மதுரையில் ஆண்கள் ஜூனியர் உலகக்கோப்பை ஆக்கி தொடர் நடைபெற உள்ளதுஇந்த நிலையில் இந்தியாவின் தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் ஜூனியர் உலகக் கோப்பையில் இருந்து பாகிஸ்தான் விலகியுள்ளது . பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமடைந்துள்ளது. பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாட மறுத்தது. … Read more

மகளிர் உலகக்கோப்பை: இலங்கை – பாகிஸ்தான் ஆட்டம் 34 ஓவர்களாக குறைப்பு

கொழும்பு, 13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அதன்படி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன. இந்நிலையில், லீக் சுற்று இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று நடைபெறும் 25வது லீக் ஆட்டத்தில் இலங்கை – … Read more