டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன்! விராட் கோலி எடுத்த முக்கிய முடிவு?

ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான அணி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து புதிய கேப்டனை நியமிக்க பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. இதற்கிடையில் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. … Read more

பாகிஸ்தானுக்கு மற்றொரு அடி.. PSL நடத்த ஐக்கிய அரபு அமீரகம் மறுப்பு.. என்ன காரணம்?

ஜம்மு காஷ்மீரின் பகல்காம் சுற்றுலா தளத்தில் ஏப்ரல் 22 ஆம் தேதி பாகிஸ்தானின் ஆதரவு பயங்கரவாதிகள் திடீரென கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 அப்பாபி பொதுமக்கள் உயிரிழந்தனர். இதையடுத்து இந்தியா பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என மறைமுகமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இச்சூழலில் நேரடியான தாக்குதலை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக தொடங்கி பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் 9 பயங்கரவாத குழுக்கலை தரைமட்டமாக்கியது.  பாகிஸ்தானும் இந்தியாவை தாக்க வேண்டும் என … Read more

IPL 2025 : ஐபிஎல் போட்டிகள் ரத்து, எஞ்சிய போட்டிகள் நடக்கும் தேதிகள் இதுதான்..!

IPL cancellation : இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சக்கட்டத்தில் இருப்பதால் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரை ரத்து செய்ய பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. எஞ்சிய போட்டிகளை தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கையில் நடத்துவது குறித்தும் ஆலோசனை நடக்கிறது. அதேநேரத்தில் அக்டோபர் மாதத்தில் இந்தியாவிலேயே ஐபிஎல் போட்டிகளை நடத்தலாமா? என்ற ஆலோசனையும் தீவிரமாக பரிசீலிக்கப்படுகிறது. ஐபிஎல் 2025 தொடர் பாதியில் ரத்து செய்யப்படுவதால் அதனால் ஏற்படும் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் … Read more

என்னை வடிவமைப்பதில் சி.எஸ்.கே முக்கிய பங்காற்றியது – தமிழக வீரர் பேட்டி

புதுடெல்லி, 10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 58 லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. மீதமுள்ள 7 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற போட்டியிட்டு வருகின்றன. இந்த தொடரில் குஜராத் அணியில் தமிழக வீரர்களான சாய் கிஷோர், … Read more

IPL 2025: ஐபிஎல் அதிகாரப்பூர்வமாக ஒத்திவைப்பு… பிசிசிஐ வைத்த ட்விஸ்டை பாருங்க!

IPL 2025, India Pakistan War: நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் மீதமுள்ளவை ஒரு வார காலத்திற்கு உடனடியாக நிறுத்திவைக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. பெரும்பாலான அணி உரிமையாளர்கள், தங்கள் வீரர்களின் நலன் மற்றும் உணர்வுகளையும், ஒளிபரப்பாளர், ஸ்பான்சர்கள், ரசிகர்களின் கருத்துக்களையும் தெரிவித்ததைத் தொடர்ந்து, அனைத்து முக்கிய நபர்களுடனும் உரிய ஆலோசனை மேற்கொண்ட பிறகு ஐபிஎல் நிர்வாகக் குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்திய ஆயுதப் படைகளின் வலிமை மற்றும் தயார்நிலையில் பிசிசிஐ முழு நம்பிக்கை … Read more

ஐ.பி.எல். தொடரை தொடர்ந்து நடத்துவது குறித்து பி.சி.சி.ஐ இன்று ஆலோசனை

புதுடெல்லி, 10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 58 லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. மீதமுள்ள 7 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற போட்டியிட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் … Read more

இந்தியா பாகிஸ்தான் போர்! இனி ஆசியக் கோப்பை போட்டிகள் இருக்காது?

சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எப்போதும் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்த ஒரு இரு தரப்பு தொடரிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடியது இல்லை. ஐசிசி போட்டிகளில் மட்டுமே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதனால் எப்போதுமே இந்தியா மற்றும் பாகிஸ்தான அணிகள் கிரிக்கெட் விளையாடினால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். கடைசியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான அணிகள் சாம்பியன்ஸ் … Read more

போட்டி ரத்து… தர்மசாலாவில் இருந்து வீரர்களை அழைத்து வர சிறப்பு வந்தே பாரத் ரெயில்

தர்மசாலா, இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. தர்மசாலாவில் மழை பெய்ததால் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதும் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார் . அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. பஞ்சாப் அணி 10.1 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் … Read more

IPL Suspended: பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல்! கோப்பை யாருக்கு வழங்கப்படும்?

இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. இன்னும் இந்த சீசனில் 16 போட்டிகள் மீதம் உள்ள நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தின் காரணமாக தற்காலிகமாக ஐபிஎல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இது குறித்து பிசிசிஐ மத்திய அரசிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. தரம்சாலாவில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு … Read more

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் யு.ஏ.இ-க்கு மாற்றம்

கராச்சி, 6 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி ராவல்பிண்டி, கராச்சி, முல்தான், லாகூர் ஆகிய 4 நகரங்களில் நடந்து வருகிறது. வருகிற 18-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடக்க இருந்த 27-வது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ்-பெஷாவர் ஜால்மி அணிகள் மோத இருந்தன. … Read more