ஐபிஎல் 2025 போட்டிகள் அதிரடியாக நிறுத்தம்! மீண்டும் தொடங்கும் தேதி என்ன?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் பொது மக்களின் மீது தாக்குதல் நடத்திய நிலையில் இந்தியா நேற்று பதில் தாக்குதல் நடத்தியது. அதில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தான் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த தொடங்கியது, அதனை இந்திய ராணுவம் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தடுத்து நிறுத்தி உள்ளது. தற்போது இந்தியாவின் … Read more

பாதியில் நின்ற ஐபிஎல் போட்டி… வெளியேறும் பார்வையாளர்கள்… போர் பதற்றம் காரணமா?

IPL 2025: ஐபிஎல் தொடரில் ஹிமாச்சல் மாநிலம் தரம்சாலா மைதானத்தில் தற்போது நடைபெற்ற பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், போட்டி நிறுத்தப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி.. ஐபிஎல் போட்டியில் மாற்றம் செய்த பிசிசிஐ!

ஐம்மு காஷ்மீரின் பகல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்தியா பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக சிந்து நதி நீருக்கு தடை, வர்த்தக நிறுத்தம் உள்ளிட்டவைகளை நிறுத்தியது.  இச்சூழலில் நேற்று (மே 07) இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அதிரடியாக தாக்குதல் நடத்தி ஏராளமான தீவிரவாதிகளை கொன்று குவித்தது. இந்த ராணுவ … Read more

ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் அவசர அவசரமாக ஓய்வை அறிவித்தது ஏன்? பின்னணி

Rohit Sharma Test retirement :இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா புதன்கிழமை (மே 7) மாலை திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது முடிவு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஐபிஎல் 2025 தொடர் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ரோகித் சர்மா வெளியிட்ட ஓய்வு முடிவை யாரும் எதிர்பார்க்கவில்லை. தான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதை ரோகித் சர்மா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். இதன் பிறகு கிரிக்கெட் வட்டாரத்தில் … Read more

விக்கெட் கீப்பிங்கில் புதிய சாதனை படைத்த தோனி

கொல்கத்தா, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்றிரவு நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை – கொல்கத்தால் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக, இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் விக்கெட் கீப்பர் தோனி, சுனில் நரினை ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். இதே போல் ரகுவன்ஷி (1 ரன்) அடித்த பந்தையும் கேட்ச் செய்தார். இதையும் சேர்த்து விக்கெட் கீப்பிங்கில் 153 கேட்ச், 47 … Read more

CSK: மாற்றத்தால் கிடைத்த வெற்றி.. இத முன்னாடியே பண்ணிருக்கலாம்?

2025 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக விளையாடி எலிமினேட் ஆகி உள்ளது. 12 போட்டிகளில் 9 தோல்விகளை பெற்றுள்ளது. இதுவரையில் எந்த ஒரு சீசனிலும் இவ்வளவு மோசமாக சென்னை அணி செயல்பட்டது இல்லை.  தொடரின் தொடக்கத்தில் தோல்விகளை பெற்றபோதே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் எதற்கு செவி … Read more

ஓய்வு குறித்து சென்னை கேப்டன் தோனி கூறிய தகவல்

கொல்கத்தா, நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை 19.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தாவை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் … Read more

ரோகித் சர்மா ஓய்வு.. அடுத்த டெஸ்ட் அணியின் கேப்டன் யார்?

ஐபிஎல் தொடர் வரும் மே 25ஆம் தேதி முடிவடைகிறது. இத்தொடர் முடிவடைந்த உடன் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு இங்கிலாந்து அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இத்தொடர் ஜூன் 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  இத்தொடருக்கான அணியை தேர்வு செய்வதில் பிசிசிஐ மும்மரம் காட்டி வரும் நிலையில், ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். 38 வயதான அவர், … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப் – டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை

தர்மசாலா, இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 58-வது ஐ.பி.எல். லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் அணி 11 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை என 15 புள்ளிகளுடன் 3-வது இடம் வகிக்கிறது. அந்த அணி எஞ்சிய 3 ஆட்டங்களில் இரண்டில் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) அடியெடுத்து வைத்து விடலாம். … Read more

உர்வில், பிரேவிஸ் அதிரடி; கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை அபார வெற்றி

கொல்கத்தா, நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற 57வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ரஹானே 48 ரன்களும், ரசல் 38 ரன்களும், மணீஷ் பாண்டே 36 ரன்களும் குவித்தனர். சென்னை … Read more