ஆசிய துப்பாக்கி சுடுதல்: இரட்டை தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை

ஷிம்கென்ட், 16-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) போட்டியில் 41 வீராங்கனைகள் பங்கேற்றனர். தகுதி சுற்று முடிவில், உலக சாதனையாளரான இந்தியாவின் சிப்ட் கவுர் சம்ரா, ஸ்ரீயங்கா (தலா 589 புள்ளி) ஆகியோர் முதலிடம் பிடித்தனர். ஸ்ரீயங்கா ரேங்கிங் புள்ளிக்கான பந்தயத்தில் மட்டும் கலந்து கொண்டதால் பதக்க சுற்றில் களம் காண முடியாது. சிப்ட் … Read more

ஒட்டுமொத்த ஐபிஎல்லில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன் – அஸ்வின் திடீர் அறிவிப்பு!

கடந்த ஆண்டு நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் தொடரின் போது அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் பாதியில் அவர் ஓய்வை அறிவித்தது பல்வேறு விதமான சர்ச்சைகளை எழுப்பியது. முதல் இரண்டு போட்டிகளில் பிளேயிங் லெவனில் இடம்பெறாத அஸ்வின் மூன்றாவது போட்டியின் நடுவில் ஓய்வைஅறிவித்து இருந்தார். அதன் பிறகு ஐபிஎல் மெகா ஏலத்தில் அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார். அதன் … Read more

பிசிசிஐ தோனிக்கு எவ்வளவு ஓய்வூதியம் கொடுக்கிறது தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலக அரங்களில் மிக வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவருமான மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து 2020 ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்தார். தற்போது ஐபிஎல்லில் மட்டுமே விளையாடி வரும் தோனி, உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக உள்ளார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒவ்வொரு மாதமும் தோனிக்கு ஓய்வூதியம் வழங்கி வருகிறது. தோனி மாதம் மாதம் எவ்வளவு ஓய்வூதியம் பெறுகிறார் என்று தெரிந்து கொள்ளுங்கள். தோனிக்கு வழங்கப்படும் … Read more

இந்த 4 வீரர்களை கழட்டிவிடும் பஞ்சாப் அணி? குறி வைத்து காத்திருக்கும் சிஎஸ்கே!

ஐபிஎல் 2025 தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி சிறப்பாக செயல்பட்டது. டாப் ஆர்டர், மிடில் மற்றும் பவுலிங் என அனைத்தும் அவர்களுக்கு கை கொடுத்தது. இதனால் 11 ஆண்டுகளுக்கு பிறகு இறுதி போட்டி வரை முன்னேறியது பஞ்சாப் கிங்ஸ் அணி. இருப்பினும் இறுதி போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இறுதி போட்டியில் தோல்வி அடைந்தாலும், இந்த சீசனில் பஞ்சாப் அணியின் ஆட்டம் அனைவரின் பாராட்டையும் பெற்றது.  … Read more

யுவராஜ் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிருக்க வேண்டும்.. அவரது கரியர் சரிய இதுதான் காரணம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் 2000ஆம் ஆண்டில் இந்திய அணியில் அறிமுகமாக, தனது திறமை மற்றும் பல்துறை ஆட்டத்தால் இந்திய கிரிக்கெட்டுக்கு மறக்க முடியாத சேவைகளை செய்துள்ளார். இதுவரை அவர் 40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 டி20 போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்துள்ளார். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 2008 முதல் 2019 வரை ஐபிஎல் விளையாடி வெளிப்படும் பல அபாரம் பிரதிபலித்துள்ளார். சிறந்த சாதனைகள் மற்றும் பதக்கம்   … Read more

Asia Cup 2025: இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை, கவுதம் கம்பீர் குறித்து பேசிய துருவ் ஜூரெல்!

Cricket News In Tamil: கடந்த ஆகஸ்ட் 19 அன்று ஆசிய கோப்பை 2025 தொடருக்கான இந்திய வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்தநிலையில்,  ஆசிய கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்படாத வளர்ந்து வரும் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் குறித்து பேசியுள்ளார். தற்போது அது வைரலாகி வருகிறது. ஆசிய கோப்பை 2025 vs இந்திய அணி அறிவிப்பு: சமீபத்தில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய … Read more

சின்கியுபீல்ட் கோப்பை செஸ்: 6-வது சுற்றிலும் பிரக்ஞானந்தா ‘டிரா’

செயின்ட் லூயிஸ், கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமான சின்கியுபீல்ட் கோப்பை செஸ் போட்டி அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த 6-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, போலந்தின் டுடா ஜன் கிர்சிஸ்டோப்பை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 32-வது நகர்த்தலில் டிரா கண்டார். முதல் சுற்றில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா அதன் பிறகு தொடர்ச்சியாக சந்தித்த 5-வது டிரா … Read more

தோனி அவருக்கு பிடித்த வீரர்களை அணியில் வைத்துக்கொள்வார்.. மனோஜ் திவாரி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி, முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் தோனியின் தலைமையிலான இந்திய அணியில் அறிமுகமான திவாரி, மொத்தமாக 12 ஒருநாள் மற்றும் 3 டி20 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். திறமையான வீரராக அறியப்பட்டாலும், இந்திய அணியில் திவாரிக்கு பெரிதும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறி மனோஜ் திவாரி தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.  “நான் ஏன் அதிக போட்டிகளில் விளையாடவில்லை … Read more

டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரர்…சாதனை படைத்த ஷகிப் அல் ஹசன்

டாக்கா, வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் ஒரு மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை அவர் எட்டியுள்ளார். வெஸ்ட் இண்டீசில் நடந்து வரும் கரீபியன் பிரீமியர் லீக்கில் (சிபிஎல்) ஆன்டிகுவா மற்றும் பார்புடா பால்கன்ஸ் அணியில் விளையாடும் ஷகிப், கடந்த 24-ம் தேதி நடந்த ஆட்டத்தில் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வானை அவுட்டாக்கினார். இதன் மூலம் டி20 போட்டிகளில் 500 விக்கெட்டுகள் … Read more

இவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையா? சிங்கிள் ஆக சுற்றும் வீரர்கள்!

இந்திய கிரிக்கெட் அணியில், பல வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தால் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களைகவர்ந்துள்ளனர். இவர்களில் பலர் தங்களது வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுத்து, திருமண பந்தத்தில் இணைந்துள்ள நிலையில், இன்னும் சில வீரர்கள் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர்களாக வலம் வருகின்றனர். இந்திய அணியின் அதிரடி வீரர் ரிங்கு சிங், எம்.பி. பிரியா சரோஜ் என்பவரை இந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்ய உள்ள நிலையில், சில காரணங்களால் அந்த திருமணம் தள்ளி போயுள்ளது. ரிங்கு சிங்கின் … Read more