WCL 2025: பாகிஸ்தான் போட்டியை புறக்கணிக்கும்… இந்த 3 இந்திய வீரர்கள் – என்ன காரணம்?

India Champions vs Pakistan Champions: World Championship of Legends தொடர் இங்கிலாந்தில் கடந்த ஜூலை 18ஆம் தேதி தொடங்கியது. இத்தொடரில் ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ், இங்கிலாந்து சாம்பியன்ஸ், இந்தியா சாம்பியன்ஸ், பாகிஸ்தான் சாம்பியன்ஸ், தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ், மேற்கு இந்திய தீவுகள் சாம்பியன்ஸ் என ஆறு அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணிகளின் ஓய்வுபெற்ற நட்சத்திர மூத்த வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர். WCL 2025: 15 லீக் போட்டிகள், 3 நாக்அவுட்கள் ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா … Read more

உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் லீக்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு

பர்மிங்காம், ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் டி20 லீக் தொடர் நேற்று தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இந்த சீசன் இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காம், நார்தாம்டன், லெய்செஸ்டர் மற்றும் லீட்ஸ் ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளது. ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் ரவுண்ட்-ராபின் வடிவத்தில் நடைபெறும். இதன் முடிவில் … Read more

4-வது டெஸ்ட்: பும்ரா இல்லாமலேயே இந்திய அணி வெற்றி பெறலாம் – ஆஸி.முன்னாள் வீரர்

சிட்னி, இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 4-வது போட்டி வரும் 23-ம் தேதி மான்செஸ்டரில் தொடங்க உள்ளது. தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க இந்த 4-வது டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்குள் இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. … Read more

வாஷிங்டன் வேண்டாம்… குல்தீப் யாதவ் விளையாட 3 முக்கிய காரணம் – இந்தியாவுக்கு வெற்றி உறுதி!

India vs England: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 23ஆம் தேதி தொடங்குகிறது. மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் (Old Trafford Test) நடைபெறும் இந்த போட்டி இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டி எனலாம்.  சுப்மான் கில் தலைமையில் இந்திய அணி (Team India) சிறப்பாக விளையாடி வந்தாலும் கூட பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. … Read more

ருதுராஜ் எடுத்த அதிரடி முடிவு! அணியில் இருந்து விலகல்! யார் காரணம்?

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீரர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், இங்கிலாந்து கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் யார்க்ஷயர் அணிக்காக இந்த ஆண்டு விளையாட இருந்தார். ஆனால் திடீரென்று அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளார். இது யார்க்ஷயர் கிளப்புக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 28 ருதுராஜ் ஜூலை 22 ஆம் தேதி தொடங்கும் சர்ரே அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகி, மீதமுள்ள ஐந்து போட்டிகளில் விளையாட திட்டமிட்டிருந்தார். ஆனால், தனிப்பட்ட … Read more

வைபவ் சூர்யவன்ஷி – ஒரு போட்டிக்கு இவ்வளவு சம்பளமா? மொத்த சொத்து மதிப்பு!

இந்திய கிரிக்கெட் உலகில் புதிய திறமைகளின் வருகை எப்போதும் உற்சாகத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஐபிஎல் 2025 ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 1.10 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட இவர், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய யு-19 அணியில் பங்கேற்று, தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். பேட்டிங் மட்டுமின்றி, பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் இவர், போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் கணிசமான சம்பளத்தையும் பெறுகிறார். இந்த சுற்றுப்பயணத்தில் … Read more

இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி: 4வது டெஸ்டிற்கு முன் முக்கிய வீரர் காயம்!

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியின் போது காயமடைந்துள்ளார். இது இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் வரும் ஜூலை 23 முதல் 27 வரை 4வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்த தொடரை சமன் செய்ய இந்தியாவுக்கு கட்டாய வெற்றி தேவைப்படும் நிலையில், இந்த காயம் பெரும் சவாலாக அமைந்துள்ளது. இந்திய … Read more

4வது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் ஆட வேண்டும் – ஆஸி. முன்னாள் கேப்டன்

கான்பெர்ரா, இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 4-வது போட்டி வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது. தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க இந்த 4-வது டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்குள் இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. இதனால் … Read more

கான்வே அரைசதம்…. ஜிம்பாப்வேயை வீழ்த்திய நியூசிலாந்து

ஹராரே, ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இதில் இன்று நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே – நியூசிலாந்து அணிகள் ஆடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் … Read more

சுவிஸ் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் தோல்வி கண்ட கேஸ்பர் ரூட்

சுவிஸ், சுவிட்சர்லாந்தில் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பலர் கலந்து கொண்டு ஆடி வருகின்றனர். இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் நார்வேயின் கேஸ்பர் ரூட், அர்ஜெண்டினாவின் ஜுவான் மானுவல் செருந்தோலோ உடன் மோதினார். இந்த போட்டியில் எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட கேஸ்பர் ரூட், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 2-6, 6-1, 3-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி … Read more