பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் ஹர்மன்பிரீத் கவுர் முன்னேற்றம்

துபாய், பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்டர்ஸ் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹீலி முதலிடத்தில் நீடிக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஆட்டம் இழக்காமல் 143 ரன்கள் குவித்த இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 4 இடம் முன்னேற்றம் கண்டு 5-வது இடத்தை பிடித்துள்ளார். மற்ற இந்தியர்களான மந்தனா ஒரு இடம் அதிகரித்து 6-வது இடத்தையும், … Read more

இங்கிலாந்து வீராங்கனையை 'மன்கட்' முறையில் ரன்-அவுட் செய்தது ஏன்? – தீப்தி ஷர்மா விளக்கம்

கொல்கத்தா, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த சனிக்கிழமை நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. கடைசி 40 பந்துகளில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் அணியை கரைசேர்க்க போராடிய இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீன் (47 ரன்கள்) ரன்-அவுட் செய்யப்பட்டார். அதாவது சுழற்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மா பந்தை வீசுவதற்கு … Read more

மாநில கைப்பந்து போட்டி: டி.பி.ஜெயின் அணி 'சாம்பியன்'

சென்னை, சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. சார்பில் கல்லூரி அணிகளுக்கான மாநில கைப்பந்து போட்டி அதன் வளாகத்தில் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் 18 அணிகளும், பெண்கள் பிரிவில் 9 அணிகளும் கலந்து கொண்டன. ஆண்கள் பிரிவின் இறுதிப்போட்டியில் டி.பி.ஜெயின் அணி 25-14, 25-16, 25-20 என்ற நேர்செட்டில் லயோலாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் நசரேத் அணி 25-16, 25-15, 25-13 என்ற நேர்செட்டில் ஸ்டெல்லா மேரிஸ் அணியை தோற்கடித்து … Read more

3 நாடுகள் கால்பந்து: இந்தியா- வியட்நாம் அணிகள் இன்று மோதல்

ஹோ சி மின் சிட்டி, வியட்நாம், இந்தியா, சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகள் இடையிலான நட்புறவு சர்வதேச கால்பந்து போட்டி வியட்நாமில் உள்ள ஹோ சி மின் சிட்டியில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூருடன் டிரா கண்டது. வியட்நாம் அணி தனது முதல் ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூரை துவம்சம் செய்தது. இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெறும் கடைசி … Read more

உலக கோப்பை கால்பந்து: கோப்பையை வென்றால் ஜெர்மனி வீரர்களுக்கு தலா ரூ.3 கோடி போனஸ்

பெர்லின், 32 அணிகள் பங்கேற்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 20-ந்தேதி முதல் டிசம்பர் 18-ந்தேதி வரை கத்தாரில் நடக்கிறது. 4 முறை சாம்பியனான ஜெர்மனி அணி ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் ஜெர்மனி வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் உலக கோப்பையை வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.3 கோடியே 15 லட்சம் போனசாக வழங்கப்படும் என்று அந்த நாட்டு கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது. இறுதி ஆட்டத்தில் தோற்று 2-வது இடத்தை … Read more

20 ஓவர் கிரிக்கெட் தரவரிசை: இந்திய அணி முதலிடத்தில் நீடிப்பு

துபாய், 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகளின் புதிய தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை வென்ற இந்திய அணி (268 புள்ளிகள்) ஒரு புள்ளி அதிகரித்து முதலிடத்தில் நீடிக்கிறது. அத்துடன் 2-வது இடத்தில் உள்ள இங்கிலாந்தை (261 புள்ளி) விட 7 புள்ளிகள் முன்னிலை கண்டுள்ளது. தென்ஆப்பிரிக்கா (258 புள்ளி) 3-வது இடத்திலும், பாகிஸ்தான் (258 புள்ளி) 4-வது இடத்திலும், நியூசிலாந்து (252 … Read more

திறமையான வீரர்களை உருவாக்க செயற்கை இழை மைதானங்கள் அவசியம் – ஆக்கி இந்தியா தலைவர் திலிப் திர்கே

புதுடெல்லி, திறமையான வீரர்களை உருவாக்க செயற்கை இழை மைதானங்கள் அவசியம் என ஆக்கி இந்தியா அமைப்பின் திலிப் திர்கே தெரிவித்துள்ளார். ஆக்கி இந்தியா அமைப்பின் புதிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான திலிப் திர்கே அளித்த பேட்டியில், ‘பஞ்சாப், உத்தரபிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும், மும்பை, போபால் உள்ளிட்ட நகரங்களிலும் ஆக்கி விளையாட்டை மேலும் பிரபலப்படுத்த வேண்டும். இந்த இடங்களுக்கு சென்று ஆக்கி விளையாட்டை அடிமட்ட அளவில் இருந்து மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவேன். திறமையான இளம் வீரர், … Read more

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய 'ஏ' அணி வெற்றி

சென்னை, இந்தியா ‘ஏ’-நியூசிலாந்து ‘ஏ’ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து ‘ஏ’ 47 ஓவர்களில் 219 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை அள்ளினார். இதில் 47-வது ஓவரில் அவர் தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்ததும் அடங்கும். தொடர்ந்து ஆடிய இந்திய … Read more

துலீப் கோப்பை கிரிக்கெட்: மேற்கு மண்டல அணி 'சாம்பியன்'

கோவை, துலீப் கோப்பை கிரிக்கெட்டில் மேற்கு மண்டலம் – தென் மண்டலம் அணிகள் இடையிலான இறுதிப்போட்டி கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் கடந்த 21-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே மேற்கு மண்டலம் 270 ரன்களும், தென் மண்டலம் 327 ரன்களும் எடுத்தன. 57 ரன்கள் பின்தங்கிய மேற்கு மண்டலம் 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 585 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. ஜெய்ஸ்வால் இரட்டை சதம் (265 ரன்) அடித்தார். இதன் மூலம் … Read more

கொரியா ஓபன் டென்னிஸ்: ரஷிய வீராங்கனை அலெக்சாண்ட்ரோவா 'சாம்பியன்'

சியோல், கொரியா ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி சியோலில் நடந்து வந்தது. இதில் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 24-வது இடம் வகிக்கும் ரஷியாவின் எகதேரினா அலெக்சாண்ட்ரோவா 7-6 (7-4), 6-0 என்ற நேர் செட்டில் முன்னாள் சாம்பியன் ஜெலினா ஆஸ்டாபென்கோவை (லாத்வியா) தோற்கடித்து பட்டத்தை வசப்படுத்தினார். தனது 3-வது சர்வதேச பட்டத்தை கையில் ஏந்திய 27 வயதான அலெக்சாண்ட்ரோவாவுக்கு ரூ.27 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது. தினத்தந்தி Related Tags : கொரியா … Read more