இந்த மூன்று பிளேயர்கள் மட்டும் ஏலத்துக்கு வந்தால் ஐபிஎல் 2025ல் மெகா ஜாக்பாட் தான்..!

IPL 2025 Mega Auction Updates : ஐபிஎல் 2025க்கு முன் மெகா ஏலம் நடக்கவுள்ளது, இதில் வீரர்களுக்கு கோடிக்கணக்கில் ரூபாய் மழை பொழியப்போகிறது. அதில் நம்முடைய கணிப்பின்படி இடம்பிடித்துள்ள மூன்று பிளேயர்கள் பட்டியலை பார்க்கலாம். அவர்கள் இப்போது இருக்கும் அணியை விட்டு வெளியேறினாலோ அல்லது அந்த அணியே அவர்களை விடுவித்தாலோ அந்த மூன்று பிளேயர்களுக்கு பெரிய ஜாக்பாட் தான். கடந்த ஐபிஎல் போட்டியில் அதிக தொகைக்கு சென்ற மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் ஆகியோரின் விலைகளை … Read more

ரிஷப் பந்த் இடத்தை இந்திய அணியில் பிடிக்கப்போகும் 3 விக்கெட் கீப்பர்கள்…!

Rishabh Pant News Tamil : ரிஷப் பந்தின் இடம் இந்திய அணியில் கேள்விக்குறியாகியுள்ளது. தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றதும் முதல் வேளையாக கே.எல்.ராகுலுக்கு இந்திய அணியில் இடம் கொடுத்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான தொடரில் ராகுல், ரிஷப் பந்த் இருவருமே இடம்பிடித்திருந்தாலும் கம்பீர், கே.எல் ராகுலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது முதல் ஒருநாள் போட்டியிலேயே தெரிந்தது. ரிஷப் பந்த் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை. இந்த சூழலில் அவர் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் … Read more

வாசிம் அக்ரம், வார்னேவுக்கு அடுத்து இந்திய வீரர்தான் அந்த திறமையை கொண்டுள்ளார் – ரவி சாஸ்திரி புகழாரம்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஜஸ்பிரித் பும்ரா தற்சமயத்தில் உலகின் நம்பர் 1 பவுலராக திகழ்வதாக பல முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். வித்தியாசமான ஆக்சனை பின்பற்றி பந்து வீசும் அவர் உலகின் அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் சவாலை கொடுத்து வருகிறார். குறிப்பாக அழுத்தமான சூழ்நிலையில் துல்லியமான யார்கர் பந்தை வீசும் அவர் தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டை எடுத்துக் கொடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்து வருகிறார். டி20 உலகக்கோப்பையில் மொத்தமாக 15 விக்கெட்டுகளை … Read more

அவரை 8-வது வரிசையில் களமிறக்கியது சரியான முடிவல்ல – ஆகாஷ் சோப்ரா அதிருப்தி

மும்பை, இலங்கை – இந்தியா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி கொழும்புவில் நேற்று நடைபெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்களில் 230 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வெல்லலகே 67, நிசாங்கா 56 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 231 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 58 … Read more

இந்தியா வர விரும்பவில்லை என்றால் பரவாயில்லை… அது ஒரு பொருட்டல்ல – பாக். முன்னாள் வீரர் அதிரடி கருத்து

லாகூர், 2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 8 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. ஆனால் இந்த தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இரு நாட்டு அணிகளும் ஆசிய மற்றும் ஐ.சி.சி தொடர்களில் மட்டுமே நேருக்கு நேர் மோதி வருகின்றன. மேலும் 2023 ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெற்றது. ஆனால் அப்போது … Read more

டி.என்.பி.எல்.: சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார்..? திண்டுக்கல் – கோவை அணிகள் நாளை பலப்பரீட்சை

சென்னை, 8 அணிகள் பங்கேற்றிருந்த 8-வது டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது. இதில் முதலாவது தகுதி சுற்றில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸ் அணியும், நேற்று நடைபெற்ற 2-வது தகுதி சுற்றில் வெற்றி பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.15 மணிக்கு நடைபெற உள்ளது. A big final awaits at Chepauk! Who do you … Read more

இந்தியாவுக்கு எதிராக என்னுடைய திட்டம் இதுதான் – ஆட்டநாயகன் வெல்லலகே பேட்டி

கொழும்பு, இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடர் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி கொழும்புவில் நேற்று நடைபெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்களில் 230 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வெல்லலகே 67, நிசாங்கா 56 ரன்கள் … Read more

இந்தியா vs பாகிஸ்தான் மேட்ச் புது அப்டேட் – சாம்பியன்ஸ் டிராபியில் 2 முறை மோதல்..!

India vs Pakistan Cricket News Tamil : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் இருக்கும் டாப் 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் நிலையில், இந்தியாவைத் தவிர மற்ற அணிகள் அனைத்தும் பாகிஸ்தான் சென்று விளையாட ஒப்புக்கொண்டுள்ளன. இந்தியா மட்டும் மவுனம் காத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியாவின் நிலைப்பாட்டை சீக்கிரம் தெரிவிக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் கேட்டுக் கொண்டிருந்தது. அத்துடன் … Read more

தோனி, விராட் வாய்ப்பு கொடுக்காததால் ஓய்வு பெற்ற 4 இந்திய கிரிக்கெட் வீரர்கள்

இந்திய கிரிக்கெட் அணி எம்எஸ் தோனி தலைமையில் சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு கோப்பைகளை வென்று அசத்தியது. அவருக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பு விராட் கோலிக்கு சென்றது. ஐசிசி கோப்பைகளை இவரது தலைமையில் இந்திய அணி வெல்லவில்லை என்றாலும் டெஸ்ட் மற்றும் ஒருநாள், டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்தது. அதேநேரத்தில் இவர்களது கேப்டன்சியில் இளம் வீரர்கள் பலரும் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றனர். அதனால் சில பிளேயர்களுக்கு போதுமான வாய்ப்பு கிடைக்காததால் … Read more

ஐபிஎல் 2025ல் தோனி இல்லை என்றால் சிஎஸ்கே குறிவைக்கும் விக்கெட் கீப்பர் இவர் தான்!

இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. கடந்த ஆண்டு கோப்பையை வென்றிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப்க்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளது, இதற்காக ஒவ்வொரு அணிகளும் தயார் நிலையில் உள்ளனர். சமீபத்தில் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் உரிமையாளர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது, அதில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை … Read more