KKR அணி இந்த 3 வீரர்களை கழட்டிவிட்டால் – ஏலத்தில் பல கோடிகள் கையில் இருக்கும்!

Kolkata Knight Riders: ஐபிஎல் 2025 தொடரில் இன்னும் நான்கு போட்டிகள் மட்டுமே உள்ளன. இன்றைய குவாலிபயர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகின்றன. நாளைய எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. குவாலிபயர் 1 போட்டியில் வெல்லும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். எலிமினேட்டர் போட்டியில் தோற்கும் அணி அப்படியே தொடரை விட்டு நாக்அவுட்டாகும். எலிமினேட்டரில் வெற்றிபெறும் அணி குவாலிபயர் 1 போட்டியில் … Read more

தோனியுடன் முதல் சந்திப்பு.. என்ன நடந்தது? சம்பவத்தை பகிர்ந்த ஜடேஜா!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய விரர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வினின் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து இருக்கிறார். அப்போது தோனியுடனான முதல் சந்திப்பு குறித்து அவர் பகிர்ந்துள்ளார்.  “சென்னையில் 2005 ஆம் ஆண்டு நடந்த சேலஞ்சர்ஸ் டிராபியின் போதுதான் நான் முதன்முதலில் தோனியை சந்தித்தேன். நான் மும்பையிலிருந்து வந்து கொண்டிருந்தேன், அவரும் அங்கிருந்து அதே விமானத்தில் வந்திருப்பார் என்று நினைக்கிறேன். நான் எகானமி வகுப்பில் அமர்ந்திருந்தேன், அவர் பிசினஸ் கிளாஸ் வகுப்பில் அமர்ந்திருந்தார்.  … Read more

இந்தியா ஏ vs இங்கிலாந்து லயன்ஸ்: நாளை முதல் போட்டி… நேரலையை எப்படி பார்ப்பது?

India A vs England Lions Live Telecast: இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஜூன் – ஆகஸ்ட் மாதங்களில் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. எப்போதும் இந்திய அணி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் முன் அங்கு இந்திய ஏ அணியும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சில போட்டிகளில் விளையாடும்.  India A vs England Lions: 2 போட்டிகளில் விளையாடும் இந்தியா ஏ அணி அந்த வகையில், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான … Read more

Qualifier 1 PBKS vs RCB: இன்று இந்த அணிதான் வெல்லும்.. அஸ்வின் கணிப்பு!

Ravichandran Ashwin Predicts: நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் 1 இன்று (மே 29) இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் வெல்லும் அணி இறுதி போட்டிக்கு முன்னேறும் என்பதால், இப்போட்டி மீது எகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் உள்ளன.  இந்த நிலையில், இப்போட்டியில் வெல்லப்போவது யார் என ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அஸ்வின், … Read more

ரிஷப் பந்தை திட்டி தீர்த்த அஸ்வின்! என்ன நடந்தது? முழு விவரம்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டி நடந்து முடிந்துள்ளது. இதில் திக்வேஸ் ரதி மன்கட் முறையில் ஜிதேஷ் சர்மாவை அவுட் செய்தது ஐபிஎல்லில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் பந்த் இந்த முடிவை திரும்ப பெறுவதாக நடுவர்களிடம் தெரிவித்தார். இது குறித்து அஸ்வின் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். கேப்டன் ரிஷப் பந்த் செய்தது தவறு என்றும், அப்படி செய்தால் பவுலரின் தன்னம்பிக்கை போய்விடும் என்றும் தெரிவித்துள்ளார். … Read more

Qualifier 1 PBKS vs RCB: மழை பெய்தால் எந்த அணிக்கு பாதிப்பு? முழு விவரம்!

RCB vs PBKS: நடப்பாண்டி ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுகள் இன்று முதல் தொடங்க உள்ளது. பிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டியான குவாலிஃபையர் 1ல் ரஜத் பட்டிதர் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.  இப்போட்டியில் வெல்லும் அணி இறுதி போட்டிக்கு முன்னேறும், அதுவே தோற்கும் அணி எலிமினேட்டரில் வெற்றி அடையும் அணியுடன் மோத குவாலிஃபையர் 2க்கு செல்லும். எனவே இப்போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் … Read more

ஐபிஎல் 2026ல் சிஎஸ்கே தக்க வைத்துக் கொள்ளும் வீரர்கள்! இவர்கள் கழட்டி விடப்படுவார்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2026ல் தங்களது பயணத்தை முடித்துள்ளது. கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக இமாலய வெற்றி பதிவு செய்தது. இந்த சீசன் முழுவதும் மிகவும் மோசமாக விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் வெறும் நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளனர். ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் பத்தாவது இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறை. மேலும் தொடர்ந்து இரண்டு … Read more

இங்கிலாந்தில் ஆரம்பப் போட்டிகளில் சும்மான் கில் இல்லை? கேப்டன்சி பொறுப்பு யாருக்கு?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில் சுப்மான் கில் புதிய டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வரும் ஜூன் 6-ம் தேதி பயிற்சி போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டன் சுப்மான் கில் … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; அல்காரஸ் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

பாரீஸ், ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், ஹங்கேரி வீரர் பேபியன் மரோஸ்ஸான் ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய அல்காரஸ் 6-1,4-6, 6-1,6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 1 More update தினத்தந்தி Related Tags : பிரெஞ்சு … Read more

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம்

குமி, 26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவின் குமி நகரில் நேற்று தொடங்கியது. 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடரில் இந்தியா சார்பில் 59 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள் கிடைத்துள்ளது. மும்முறை தாண்டுதல் விளையாட்டில் தமிழகத்தை சேர்ந்த பிரவின் சித்ரவேல் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 16.09 மீ. தூரம் தாண்டி … Read more