இத்தாலி ஓபன் டென்னிஸ்: லோரென்சோ முசெட்டி அரையிறுதிக்கு தகுதி

ரோம், பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் லோரென்சோ முசெட்டி (இத்தாலி), அலெக்சாண்டர் சுவரெவ் (ஜெர்மனி) உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டமுசெட்டி 7-6 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இவர் அரையிறுதியில் கார்லஸ் அல்காரஸ் உடன் மோத … Read more

பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய அவமானம், ஐபிஎல் தொடரில் இணைந்த வெளிநாட்டு பிளேயர்

IPL 2025 Latest News : பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இப்போது சர்வதேச அளவில் மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டுள்ளது. அந்த நாடு நடத்தி வரும் பிஎஸ்எல் கிரிக்கெட் லீக் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த மிட்செல் ஓவன், இப்போது அந்த தொடரில் இருந்து விலகி இந்தியாவில் IPL தொடரில் விளையாட வந்துள்ளார். அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி எஞ்சிய போட்டிகளில் விளையாட ஒப்பந்தம் செய்துள்ளது. ஏற்கனவே நியூசிலாந்து பிளேயர் கிளென் பிலிப்ஸ் இனி பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட தன் வாழ்நாளில் … Read more

'சிஎஸ்கே கூப்பிடும் தயாராக இரு' ஆயுஷ் மாத்ரேவுக்கு சூர்யகுமார் கொடுத்த சிக்னல்

சென்னை, இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. அன்றைய தினம் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இன்னும் 13 லீக் உள்பட 17 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. இதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறி விட்டது. இருப்பினும் வருங்காலத்திற்கான … Read more

ஆர்சிபிக்கு குட் நியூஸ்.. அணிக்கு திரும்பிய முக்கிய வீரர்!

2025 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்கிடையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் இருந்ததன் காரணமாக ஐபிஎல் தொடர் மே 8ஆம் தேதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இச்சூழலில் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தப்பட்ட நிலையில், ஐபிஎல் தொடர் வரும் மே 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது.  தொடர் நிறுத்தப்பட்ட நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிநாட்டு வீரர்கள் அவர்களது சொந்த நாட்டுக்கு திரும்புவதாகவும் அவர்கள் … Read more

ரூட், ரோகித் இல்லை.. சச்சினுக்குப்பின் அவர்தான் சிறந்த பேட்ஸ்மேன் – இங்கிலாந்து முன்னாள் வீரர்

லண்டன், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். இந்திய அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர் 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார். அத்துடன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவ் சுமித் மற்றும் விராட் கோலி ஆகியோர் நவீன கிரிக்கெட்டின் பேப் 4 பேட்ஸ்மேன்கள் என்று பல முன்னாள் வீரர்கள் பாராட்டுவது … Read more

விராட் கோலி ஓய்வுக்கு காரணமே பிசிசிஐ தான் – முகமது கைப் பரபரப்பு குற்றச்சாட்டு

Virat Kohli Retirement : விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து திடீரென ஓய்வு பெற்றதற்கு மிக முக்கிய காரணம் இந்திய கிரிக்கெட் வாரியம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பிளேயர் முகமது கைப் குற்றம்சாடிடயுள்ளார். விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து விளையாடவே விரும்பினார், ஆனால் தேர்வுக்குழு அவரிடம் சில கேள்விகளையும், பிளேயிங் லெவனில் வாய்ப்பு குறைவு என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கலாம், அதனால் விராட் கோலி அவசரமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து … Read more

ஐ.பி.எல்.: மீண்டும் அணிக்கு திரும்பும் முன்னணி வீரர்.. ஆர்சிபி ரசிகர்களுக்கு நற்செய்தி

பெங்களூரு, இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. அன்றைய தினம் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இன்னும் 13 லீக் உள்பட 17 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. போர் பதற்றத்தால் நாட்டில் நிலவிய அசாதாரணமான சூழலால் பதற்றத்திற்கு உள்ளான வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக தாயகம் திரும்பினர். தற்போது ஐ.பி.எல். போட்டி தொடங்கினாலும் முந்தைய போட்டி அட்டவணையுடன் … Read more

ஐபிஎல்லின் புதிய விதி! ஆயுஷ், ப்ரீவிஸ் அடுத்த ஆண்டு சிஎஸ்கேவில் விளையாட முடியுமா?

மார்ச் மாதம் தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ள நிலையில் மீதமுள்ள அணிகள் போட்டி போட்டு வந்தனர். இன்னும் இந்த தொடர் முடிய சில போட்டிகளே இருந்தாலும் இதுவரை எந்த ஒரு அணியும் பிளே ஆப் வாய்ப்பை எட்டவில்லை. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் பிளே … Read more

அவர்கள் 50 வயது வரை விளையாடியிருக்க வேண்டும் – யோக்ராஜ் சிங்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) 20-ந் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு உட்பட்ட இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இதற்கிடையே 38 வயதான கேப்டன் ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து கடந்த வாரம் விடைபெற்றார். இதைத்தொடர்ந்து 36 வயது நட்சத்திர பேட்ஸ்மேன் விராட்கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் … Read more

கடைசி வரை விராட் கோலியால் இந்த ஒரு சாதனையை பூர்த்தி செய்ய முடியவில்லை!

இந்திய அணியின் இரண்டு ஜாம்பவான்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. விராட் கோலி கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்தது இருந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட் அவருக்கு அவ்வளவு சிறப்பாக இருந்தது இல்லை. ஒரு வீரரின் முழு திறமை டெஸ்ட் போட்டியில் தான் தெரிய வரும். சச்சின் டெண்டுல்கர், ட்ராவிட் உட்பட பல வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்துள்ளனர். … Read more