ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: சென்னையை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற நார்த் ஈஸ்ட் யுனைடெட்

சென்னை , 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று சென்னையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. – நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின. இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி முதல் பாதியிலேயே 3 கோல்கள் (7, 26, 38-வது நிமிடம்) அடித்து அசத்தியது. இதன் காரணமாக முதல் … Read more

சாம்பியன்ஸ் டிராபி; அரையிறுதி ஆட்டங்களுக்கான நடுவர்கள் விவரங்களை வெளியிட்ட ஐ.சி.சி

துபாய், 8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. லீக் சுற்று முடிவில் ஏ பிரிவில் இருந்து இந்தியா , நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் இருந்து தென் … Read more

ரவீந்திர ஜடேஜாவை திட்டி தீர்த்த நியூசிலாந்து வீரர் – அப்படி என்ன செய்துவிட்டார்?

Ravindra Jadeja News : நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி கடைசி லீக் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் குரூப் ஏ பிரிவில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, முதலிடத்தைப் பிடித்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்த சூழலில் நியூசிலாந்து அணியின் முன்னாள் … Read more

மகளிர் பிரீமியர் லீக்: டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் பந்துவீச்சு தேர்வு

லக்னோ, 5 அணிகள் பங்கேற்கும் மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 14-ம் தேதி குஜராத் மாநிலம் வதோதராவில் தொடங்கியது. இதன் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் வதோதராவிலும், 2-ம் கட்ட போட்டிகள் பெங்களூருவிலும் நடந்தன. இந்நிலையில், இந்த தொடரில் நேற்று ஓய்வு நாளாகும். இதையடுத்து, இந்த தொடரின் 3வது கட்ட லீக் ஆட்டங்கள் இன்று முதல் லக்னோவில் ஆரம்பமாகின்றன. இன்று லக்னோவில் நடைபெறும் 15-வது லீக் போட்டியில் உ.பி. வாரியர்ஸ் – … Read more

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 முதல் அரையிறுதி: இந்தியா vs ஆஸ்திரேலியா நேருக்கு நேர் வெற்றி நிலவரம்

India vs Australia Head to Head Records: ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நாளை (மார்ச் 4, செவ்வாய்க்கிழமை) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியின் முதல் அரையிறுதியில் ஸ்டீவ் ஸ்மித்தின் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ளவுள்ளது. மறுபுறம் அதேபோல நாளை மறுநாள் (மார்ச் 5,புதன்கிழமை) பாகிஸ்தானின் லாகூரில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்ளும். அரையிறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு செல்லும். சாம்பியன்ஸ் … Read more

ICC Champion Trophy, India vs Australia | ஆஸ்திரேலியாவை வெற்றி பெற இந்திய அணி செய்யவே கூடாத தவறுகள்..!

ICC Champion Trophy, India vs Australia | ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் அரையிறுதிப் போட்டி நாளை துபாய் மைதானத்தில் நடக்கிறது. இதில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் சில தவறுகளை செய்யவே கூடாது. ஏனென்றால் ஒருநாள் உலகக்கோப்பை போட்டியின் இறுதிப் போட்டியில் செய்த அந்த தவறுகளால் தான் இந்திய அணி தோற்க நேரிட்டது. அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை கனவும் தகர்ந்து போனது. எனவே, … Read more

Champions Trophy 2025: இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டியை எப்போது, ​​எங்கு பார்க்கலாம்!

India vs Australia Match Date, Time and Venue Details: துபாய் சர்வதேச மைதானத்தில் நாளை (மார்ச் 3, செவ்வாய்க்கிழமை) நடைபெறும் ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் முதல் அரையிறுதிப் போட்டியை விளையாட இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தயாராகி வருவதால், இது 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் தொடர்ச்சியாக இருக்கும். எட்டு அணிகள் பங்கேற்ற சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இதுவரை விளையாடிய லீக் போட்டிகளில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தோல்வியடையவில்லை.  இந்தியா … Read more

IND vs AUS: பிளேயிங் லெவனில் வரப்போகும் மாற்றம்… ஆடுகளம் யாருக்கு சாதகம்?

IND vs AUS: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மீண்டும் ஒரு ஐசிசி நாக்-அவுட் சுற்றில் மோத உள்ளன. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் மோதுகின்றன. IND vs AUS: இந்திய அணியின் சுழல் பலம் இந்த சாம்பியன்ஸ் டிராபியில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற அணி இந்திய அணிதான் (Team … Read more

டிராவிஸ் ஹெட்டை அவுட்டாக்க இந்தியா செய்ய வேண்டியது என்ன? பழிவாங்க நல்ல வாய்ப்பு!

India vs Australia, Semi Finals: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் (ICC Champions Trophy 2025) அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. நேற்றோடு குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைந்துவிட்டன. ஏற்கெனவே, இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தாலும், எந்தெந்த அணிகள் அரையிறுதியில் மோதும் என்பது உறுதியாகாமல் இருந்தது. IND vs AUS: முதல் அரையிறுதியில் இந்தியா vs ஆஸ்திரேலியா அந்த வகையில், நேற்றைய கடைசி குரூப் சுற்று போட்டியில் நியூசிலாந்து அணியை வென்றதன் … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: ஈஸ்ட் பெங்கால் – பெங்களூரு ஆட்டம் 'டிரா'

கொல்கத்தா , 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் எப்.சி. – பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் ஈஸ்ட் பெங்கால் அணி ஒரு கோல் அடித்து 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் … Read more