10 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய ஆக்கி போட்டி; சென்னையில் 19-ந்தேதி தொடக்கம்

சென்னை, எம்.சி.சி.- முருகப்பா தங்கக் கோப்பைக்கான 95-வது அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதா கிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 19-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் 10 அணிகள் களம் காணுகின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியன் ரெயில்வே, இந்திய ராணுவம் (ரெட்), பாரத் பெட்ரோலியம், மராட்டியம், தமிழ்நாடு ஆக்கி யூனிட் ஆகிய அணிகளும் பி பிரிவில் ஆக்கி கர்நாடகா, இந்தியன் … Read more

ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி; தொடர் நாயகன் விருதை வென்ற ஹர்மன்பிரீத் சிங்

ஹூலுன்பியர் , 6 அணிகள் இடையிலான 8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்தது. இந்தியா, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இதில் இந்திய அணி, 4-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை சாய்த்து 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. மற்றொரு அரையிறுதியில் பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 2-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி சீனா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் இன்று மாலை 3.30 … Read more

IND vs BAN: 'கேஎல் ராகுலிடம் நாங்கள் சொன்னது இதுதான்…' ரோஹித் சர்மா ஓபன் டாக்!

India National Cricket Team: இந்தியா – வங்கதேசம் (India vs Bangladesh) அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் செப். 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் போட்டி (Chennai Test Match) நடைபெறுகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நீண்ட ஓய்வுக்கு பின் சர்வதேச போட்டிகளுக்கு திரும்பியுள்ள நிலையில், பாகிஸ்தானை வீழ்த்திய பலத்துடன் வங்கதேசம் அணி வருகை தந்துள்ளது.  2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற உள்ள … Read more

விராட் கோலியிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது இதுதான் – இந்திய இளம் வீரர்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரமான சர்பராஸ் கான் நீண்ட போராட்டத்திற்கு பின் கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக அறிமுகமானார். ரஞ்சிக் கோப்பையில் சமீபத்திய வருடங்களாக தொடர்ந்து பெரிய ரன்கள் குவித்த அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது புஜாரா சீனியர்களை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு சர்பாரஸ் கான், துருவ் ஜுரேல் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. அந்த வாய்ப்பில் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகம் ஆன முதல் டெஸ்ட் தொடரிலேயே 3 … Read more

சச்சின் 194 ரன்களில் இருந்தபோது டிராவிட் டிக்ளேர் செய்தது ஏன்..? – பின்னணியை பகிர்ந்த ஆகாஷ் சோப்ரா

மும்பை, பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 2004-ம் ஆண்டு முல்தானில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அட்டகாசமாக பேட்டிங் செய்த வீரேந்திர சேவாக் முச்சதம் அடித்து சாதனை படைத்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய சச்சின் டெண்டுல்கர் 336 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 194 ரன்களை தொட்டு இரட்டை சதத்தை நெருங்கினார். ஆனால் 5 விக்கெட்டுகளை இழந்து 675 ரன்கள் அடித்திருந்தபோது அப்போட்டியில் தற்காலிக கேப்டனாக செயல்பட்ட ராகுல் டிராவிட் இந்தியாவின் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானை … Read more

ஆப்கானிஸ்தானில் அனைத்து வகை கிரிக்கெட்டுக்கு தடை விதிக்கும் தலிபான்கள்?

இன்றைய கிரிக்கெட் உலகில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு நாடாக ஆப்கானிஸ்தான் அணி இருந்து வருகிறது. பெரிய பெரிய அணிகள் கூட இவர்களை பார்த்து பயப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டிகளில் யாரும் எதிர்பார்க்காத விதமாக நியூசிலாந்து போன்ற பெரிய அணியை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த வெற்றியை ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மிகவும் ஆரவாரத்துடன் கொண்டாடினர். சமீபத்தில் பல இன்னல்களை சந்தித்த ஆப்கானிஸ்தான் … Read more

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: குரூப் 1 சுற்றில் இந்தியா தோல்வி

ஸ்டாக்ஹோம், டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப் 1 சுற்றில் இந்திய அணி சுவீடனை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்விகளைத் தழுவியது. ஸ்டாக்ஹோமில் நடந்த இப்போட்டியின் ஒற்றையர் ஆட்டங்களில் ஸ்ரீராம் பாலாஜி 4-6, 2-6 என நேர் செட்டில் ஸ்வீடனின் ஒய்மர் இலியாஸிடமும், ராம்குமார் ராமநாதன் 3-6, 4-6 என்ற நேர் செட்டில் போர்க் லியோவிடமும் தோற்றதை அடுத்து இந்தியா 0-2 என பின்தங்கியது. இதனால் இரட்டையர் ஆட்டத்தில் … Read more

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா செல்லவில்லையெனில் பாகிஸ்தானுக்குத்தான் நஷ்டம் – ஆகாஷ் சோப்ரா

மும்பை, 2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 8 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. ஆனால் இந்த தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இரு நாட்டு அணிகளும் ஆசிய மற்றும் ஐ.சி.சி தொடர்களில் மட்டுமே நேருக்கு நேர் மோதி வருகின்றன. மேலும் 2023 ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெற்றது. ஆனால் அப்போது … Read more

அந்த சமயத்தில் ரவி சாஸ்திரி பாட்டு பாடி எங்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்தார் – அஸ்வின்

சென்னை, இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. ஏற்கனவே கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை கைப்பற்றும் முனைப்புடன் காத்திருக்கிறது. அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய … Read more

சிராஜ் கிடையாது… இந்த பாஸ்ட் பௌலருக்குதான் வாய்ப்பு – வங்கதேசத்தை போட்டுத்தாக்க திட்டம்

IND vs BAN, Team India Playing XI: வங்கதேச அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் வரும் செப். 19ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.  இந்திய அணி கடைசியாக கடந்த மார்ச் மாதத்தில் டெஸ்ட் போட்டியை விளையாடியது. … Read more