விராட் கோலி குறித்து அமித் மிஸ்ரா கூறியது உண்மையல்ல… பியூஷ் சாவ்லா பதிலடி

புதுடெல்லி, இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி நவீன கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். கடந்த 2008-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்று கொடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடிக்கும் அளவுக்கு இந்தியாவின் மேட்ச் வின்னராக அவதரித்தார். அப்போதிலிருந்து உலகின் அனைத்து எதிரணிகளையும் பந்தாடி வரும் அவர் 26000+ ரன்களையும் 80 சதங்களையும் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி … Read more

அந்த வீரர் இல்லாமல் இந்தியா வெல்வது கடினம் – ஆஸி.முன்னாள் வீரர் எச்சரிக்கை

சிட்னி, இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. காலம் காலமாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இந்தியா 2018/19-ம் ஆண்டு முதல் முறையாக விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றது. அதே போல 2020/21 தொடரில் ரகானே தலைமையில் இந்தியா 2 – 1 என்ற கணக்கில் … Read more

சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஜெர்மனி முன்னணி வீரர் ஓய்வு அறிவிப்பு

பெர்லின், ஜெர்மனி அணியின் முன்னணி கோல் கீப்பர் வீரரான மானுவல் நியூயர் (38 வயது) சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் ஜெர்மனி அணிக்கு 61 போட்டிகளில் கேப்டனாகவும் இருந்துள்ளார். 2009-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் கால்பதித்த நியூயர், 2014-ம் ஆண்டு ஜெர்மனி அணி உலகக் கோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்தார். அந்த உலகக் கோப்பையின் சிறந்த கோல் கீப்பராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த மாதம் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் காலிறுதி … Read more

IND vs BAN: இந்திய அணி ரெடி… அந்த ஒரு இடம் மட்டும் பிரச்னை – யாருக்கு கிடைக்கும் வாய்ப்பு?

India vs Bangladesh Test Series: டி20 உலகக் கோப்பையை வென்ற பின்னர் இந்திய அணி இரண்டு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டது. ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 4-1 என்ற டி20 தொடரை வென்ற இந்திய அணி (Team India) அடுத்த இலங்கைக்கு சென்றது. அங்கு டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கெத்தாக வென்றாலும், ஓடிஐ தொடரை 0-2 என்ற கணக்கில் மோசமாக தோற்று ஏமாற்றம் அளித்தது.  அதன்பின் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு இந்திய தேசிய கிரிக்கெட் அணிக்கு … Read more

உங்கள் சுயசரிதை படத்தில் எந்த நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும்? ராகுல் டிராவிட் பதில்

மும்பை, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய அணிக்காக மிகச் சிறப்பான பணியை இவர் செய்து வந்துள்ளார். டிராவிட் தலைமையில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு ஐ.சி.சி. தொடர்களில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தாலும் கோப்பைகளை வெல்ல முடியவில்லை என்ற குறை நீடித்து வந்தது. அந்த குறையையும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவுக்கு வந்தது. வெற்றிகரமாக பயிற்சியாளராக தனது பயணத்தை … Read more

பேட்டிங் பலவீனம் இதுதான்… சுட்டிகாட்டிய பயிற்சியாளர் – சரிசெய்யுமா இந்திய அணி?

India National Cricket Team: இந்திய அணி ஐசிசி டி20 உலகக் கோப்பையை கடந்த ஜூனில் கைப்பற்றியது. அதற்கு முன் கடந்தாண்டு நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும், ஐசிசி உலகக் கோப்பை தொடரிலும் இரண்டாம் இடத்தையும் பிடித்து மூன்று பார்மட்களிலும் வெறித்தனமான அணியாக வலம் வருகிறது. இருப்பினும், இந்திய அணியின் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சிற்சில பிரச்னைகள் நிலவுகின்றன எனலாம்.  ராகுல் டிராவிட்டுக்கு பின் கௌதம் கம்பீர் (Gautam Gambhir) இந்த பிரச்னைகளுக்கு தீர்வு … Read more

விராட் கோலி வாழ்த்தியும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் ஓய்வு பெற்ற வீரர்

Virat Kohli, Kedar Jadhav : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பிளேயராக இருக்கும் விராட் கோலி கேப்டன்சியில், விளையாடிய ஒரு பிளேயர் இப்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிக்களில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெற்றிருக்கிறார். இத்தனைக்கும் விராட் கோலியால் பெரிதும் பாரட்டப்பட்டு, மேட்ச் வின்னர் என்ற அங்கீகாரம் எல்லாம் கிடைத்தும், அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். இனி சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு இல்லை என்று தெரிந்ததும் கிரிக்கெட்டில் இருந்து முற்றிலும் ஓய்வு … Read more

டெஸ்ட் கிரிக்கெட்; ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் ஏற்றம் கண்ட ஜேசன் ஹோல்டர்

துபாய், தென் ஆப்பிரிக்கா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இதையடுத்து ஆடவருக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இங்கிலாந்தின் ஜோ ரூட் (872 புள்ளி) முதலிடத்திலும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் (859 புள்ளி) 2ம் இடத்திலும், பாகிஸ்தானின் பாபர் அசாம் (768 புள்ளி) 3வது இடத்திலும் உள்ளனர். இந்தியா … Read more

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்; இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் தோல்வி

டோக்கியோ, ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் யோகோஹமாவில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 32 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், ஜப்பானின் கண்டா சுனேயாமா உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் 19-21, 14-21 என்ற புள்ளிக்கணக்கில் ஜப்பானின் கண்டா சுனேயாமாவிடம் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார். … Read more

புதிதாக யூடியூப் சேனல் தொடங்கிய ரொனால்டோ: 1 மணிநேரத்தில் 1 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள்

உலகளவில் புகழ்பெற்ற கால்பந்து சூப்பர்ஸ்டாரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, யூடியூப் துறையில் தனது “யு.ஆர்கிறிஸ்டியானோ” என்ற சேனலை அறிமுகப்படுத்தி உள்ளார். 39 வயதான ரொனால்டோ, எல்லா காலத்திலும் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக பாராட்டப்பட்டவர். புதிதாக யூடியூப் சேனலை அறிமுகம் செய்ததன் மூலம் அவரது புகழ் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. புதிய யூடியூப் சேனல் தொடர்பான அறிவிப்பு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டார். அந்த வீடியோவில், “நான் யுஆர் கிறிஸ்டியானோ என்ற பெயரில் யூட்யூப் சேனல் … Read more