ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்; இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் தோல்வி

டோக்கியோ, ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் யோகோஹமாவில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 32 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், ஜப்பானின் கண்டா சுனேயாமா உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் 19-21, 14-21 என்ற புள்ளிக்கணக்கில் ஜப்பானின் கண்டா சுனேயாமாவிடம் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார். … Read more

புதிதாக யூடியூப் சேனல் தொடங்கிய ரொனால்டோ: 1 மணிநேரத்தில் 1 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள்

உலகளவில் புகழ்பெற்ற கால்பந்து சூப்பர்ஸ்டாரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, யூடியூப் துறையில் தனது “யு.ஆர்கிறிஸ்டியானோ” என்ற சேனலை அறிமுகப்படுத்தி உள்ளார். 39 வயதான ரொனால்டோ, எல்லா காலத்திலும் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக பாராட்டப்பட்டவர். புதிதாக யூடியூப் சேனலை அறிமுகம் செய்ததன் மூலம் அவரது புகழ் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. புதிய யூடியூப் சேனல் தொடர்பான அறிவிப்பு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டார். அந்த வீடியோவில், “நான் யுஆர் கிறிஸ்டியானோ என்ற பெயரில் யூட்யூப் சேனல் … Read more

முதல் டெஸ்ட்; சரிவில் இருந்து மீண்ட பாகிஸ்தான்… முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 158/4

ராவல்பிண்டி, வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ராவல்பிண்டியில் இன்று தொடங்கியது. மழை காரணமாக ஆட்டம் தொடங்க சிறிது காலதாமதமானது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வங்காளதேசம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக அப்துல்லா ஷபீக் மற்றும் சைம் அயூப் ஆகியோர் களம் இறங்கினர். இதில் அப்துல்லா ஷபீக் 2 ரன்னிலும், … Read more

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; தரவரிசையில் முன்னேற்றம் கண்ட ஸ்மிருதி மந்தனா

துபாய், மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. இதில் முதல் இடத்தில் இங்கிலாந்தின் நடாலி ஸ்கிவர்-பிரண்ட்டும் (783 புள்ளி), 2வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட்டும் (756 புள்ளி) உள்ளனர். இந்திய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஒரு இடம் ஏற்றம் கண்டு (738 புள்ளி) 3வது இடத்திற்கு வந்துள்ளார். இலங்கை கேப்டன் சமாரி அத்தபத்து (727 புள்ளி) ஒரு இடம் சரிந்து 4வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் பெத் மூனி (704 … Read more

CSK: சிஎஸ்கேவுக்கு ரிஷப் பண்ட் வருவது உறுதி? – அவரே சொன்ன அந்த வார்த்தை… பலமாகும் மஞ்சள் படை

IPL 2025 Latest News In Tamil: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் லீக்கில் ஒரு தன்னிகரற்ற அணியாக விளங்குகிறது. 2008ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை தோனி தலைமையில் 5 முறை ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே தட்டித்தூக்கி உள்ளது. 2 முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் தோனி தலைமையில் சிஎஸ்கே வென்றுள்ளது. ஐபிஎல் தொடரில் 13 முறை பிளே ஆப் வந்த சிஎஸ்கே அணி மொத்தம் 10 முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. … Read more

இளம் வயதில் ஐசிசி சேர்மானாகும் ஜெய்ஷா – இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைக்கப்போகும் கோடி லாபம்

Jay Shah : இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருக்கும் ஜெய்ஷா விரைவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தலைவராக வாய்ப்புள்ளது. ஏனென்றால் தற்போதைய ஐசிசி சேர்மேனாக இருக்கும் கிரெக் பார்கலே தன்னை மூன்றாவது முறையாக இந்தப் பதவிக்கு நியமனம் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். அவரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ஐசிசி தலைவர் பதவிக்கான தேர்வு நடைபெற இருக்கிறது. ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்குள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும். பிசிசிஐ செயலாளர் ஜெய் … Read more

சாம்பியன்ஸ் டிராபி 2025: ரோகித்துடன் இவர்தான் தொடக்க வீரராக களம் இறங்குவார் – தினேஷ் கார்த்திக்

புதுடெல்லி, நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக 2025 சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல இந்திய அணியினர் தீவிரமாக தயாராகி வருகின்றர். 2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா? என்பதில் இன்னும் முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோகித்துடன் தொடக்க வீரராக கில் அல்லது ஜெய்ஸ்வால் ஆகியோரில் யார் களம் … Read more

அவருடன் இணைந்து வேலை செய்ய மோர்னே மோர்கல் மிகவும் விரும்புவார் – அல்பி மோர்கல் கருத்து

கேப்டவுன், இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பயிற்சியாளராக செயல்பட உள்ளார். இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீரின் பரிந்துரைப்படி மோர்னே மோர்கல் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மோர்னே மோர்கல் வெளிநாடுகளில் பெரிய அனுபவத்தை கொண்டுள்ளார். எனவே வருன் ஆஸ்திரேலியா தொடரில் அவர் இந்திய பவுலர்களுக்கு மிகப்பெரிய உதவியாக … Read more

யுவராஜ் சிங் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது? – விரைவில் படப்பிடிப்பு

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங். ஆல் ரவுண்டரான இவர் இந்திய அணிக்காக கடந்த 2000-ம் ஆண்டில் அறிமுகம் ஆனார். இந்திய அணிக்காக மூன்றுவித கிரிக்கெட்டிலும் ஆடி உள்ளார். இந்திய அணி 2007 டி20 உலகக்கோப்பையை வென்றதிலும், 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை வென்றதிலும் இவர் முக்கிய பங்காற்றியவர். இந்த சூழலில், அவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. … Read more

Impact Player விதி வேண்டுமா, வேண்டாமா? அஸ்வின் – Pdogg காரசார விவாதம் – ரிசல்ட் என்ன?

Latest Cricket News Updates: ஐபிஎல் 2025 தொடரில் பெரிய பெரிய மாற்றங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஒவ்வொரு அணிகளில் இருந்தும் முக்கிய வீரர்கள் சிதறுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. பலமிக்க அணியாக பார்க்கப்படும் பல அணிகள் பலமிழக்கலாம் அல்லது மேலும் பலமாகலாம், பலமற்ற அணிகள் வீழ்த்த முடியாத அணியாக உருவெடுக்கலாம். இந்த அத்தனைக்குமான விடை அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில்தான் தெரியும் என்றாலும் அதற்கான தொடக்க புள்ளி என்பது கூடிய விரைவில் நடைபெற இருக்கும் மெகா ஏலத்தில்தான்… … Read more