புரோ கபடி: பெங்களூரு அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி

நொய்டா, 11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்தில் நடந்து முடிந்தன. இதையடுத்து தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், இந்த தொடரில் இன்று இரவு 9 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் தபாங் டெல்லி – பெங்களுரு புல்ஸ் அணிகள் மோதின . பரபரப்பான இந்த ஆட்டத்தில் அபாரமாக விளையாடி டெல்லி ஆதிக்கம் செலுத்தியது . இதனால் … Read more

புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி

நொய்டா, 11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்தில் நடந்து முடிந்தன. இதையடுத்து தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், இந்த தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின . பரபரப்பான இந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடியது. … Read more

2வது ஒருநாள் போட்டி: இலங்கை – நியூசிலாந்து அணிகள் நாளை மோதல்

பல்லேகலே, நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் கடந்த 13-ம் தேதி தொடங்கியது . முதலாவது ஒருநாள் போட்டி தம்புல்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் 45 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது … Read more

வீரர்கள் இல்லை.. இந்திய அணிக்கு இப்போது அவர்தான் பிரச்சினை – ஆஸி. முன்னாள் கேப்டன்

சிட்னி, இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங், இந்திய நட்சத்திர வீரரான விராட் கோலியின் பார்ம் கவலையளிக்கும் விதமாக உள்ளதாகவும், டெஸ்ட் போட்டிகளில் 5 வருடத்தில் 3 சதங்கள் என்பது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வீரருக்கு உகந்ததாக … Read more

தேசிய சீனியர் ஆக்கி – வெற்றி பெற்ற ஒடிசா அணிக்கு கோப்பையை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

சென்னை, 14-வது ஆக்கி இந்தியா தேசிய சீனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. 30 மாநில அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ஒடிசா – அரியானா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில் ஒடிசா – அரியானா அணிகள் மோதிய இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஒடிசா அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது . இந்த நிலையில், வெற்றி … Read more

ருதுராஜ் வேண்டாம்! இந்த தமிழக வீரரை ஆஸ்திரேலியாவில் இருக்க சொன்ன பிசிசிஐ!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் வரும் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் போட்டி தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்கிறது.  கேப்டன் ரோஹித் சர்மா தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் போட்டியில் இருந்து விலகி உள்ளார். இதனால் அவருக்கு மாற்று வீரரை தேடி வருகிறது … Read more

ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டன் விராட் இல்லை, ஆஸி பிளேயர் வரப்போகிறார்..!

RCB New Captain | அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான எதிர்பார்ப்பு இப்போதே தொடங்கிவிட்டது. ஐபிஎல் 2025 தொடருக்கான ஏலம் வரும் நவம்பர் 24, 25 ஆம் தேதிகளில் மிகப் பிரம்மாண்டமாக நடக்கிறது. 10 அணிகளும் ஸ்டார் பிளேயர்களை தூக்குவதற்கு அதிரடி பிளான்களை போட்டு ரெடியாகிவிட்டனர். இன்னும் ஒருமுறை கூட ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (Royal Challengers Bangalore) அணி இம்முறை சரியான பிளேயர்களை ஏலத்தில் … Read more

கடைசி டி20 போட்டி: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்திய அணி

ஜோகன்னஸ்பர்க், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 4-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்ரர்ஸ் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் … Read more

திலக், சாம்சன் அதிரடி சதம்.. தென் ஆப்பிரிக்காவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா

ஜோகன்னஸ்பர்க், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 4-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்ரர்ஸ் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் … Read more

சக போட்டியாளரை தாக்கிய மைக் டைசன்; வைரல் வீடியோ

டெக்ஸாஸ், அமெரிக்காவில் 1980-ம் ஆண்டின் பிற்பகுதியில் பிரபல குத்து சண்டை வீரராக இருந்தவர் மைக் டைசன் . 1987-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரை உலக ஹெவிவெயிட் சாம்பியனாக வலம் வந்தவர் மைக் டைசன். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. குத்துச்சண்டை போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற டைசன், குத்துச்சண்டையில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். 20 வயதில் ஹெவிவெயிட் சாம்பியனாகி, உலக சாதனை படைத்தார். களத்தில் … Read more