வின்ஸ்டன்-சலேம் ஓபன் டென்னிஸ்; முதல் சுற்றில் தோல்வி கண்ட சுமித் நாகல்

வின்ஸ்டன் சலேம், அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சுமித் நாகல், குரோஷியாவின் போர்னா கோரிக் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய போர்னா கோரிக் 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் சுமித் நாகலை வீழ்த்தினார். இந்த தோல்வியின் மூலம் சுமித் நாகல் முதல் … Read more

என்னை இந்திய அணியில் எடுங்கள் – தேர்வாளர்களுக்கு சவால் விட்ட தமிழக வீரர்!

இந்திய கிரிக்கெட் அணி தற்போது முக்கிய போட்டிகளுக்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கு பிறகு இந்திய வீரர்கள் நீண்ட நாட்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வில் உள்ளனர். தற்போது துலீப் டிராபியில் விளையாட உள்ளனர். இது வரக்கூடிய டெஸ்ட் போட்டிகளுக்கு பெரிதும் உதவும். இந்நிலையில் காயத்தில் இருந்து மீண்டும் வரும் தமிழக வீரர் மற்றும் ஆல்-ரவுண்டர் சாய் கிஷோர் தான் சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். சாய் கிஷோர் 2023 … Read more

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இந்த இரு வீரர்களை அதிக அளவில் பயன்படுத்துவோம் – கம்மின்ஸ்

சிட்னி, இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவில் வைத்து அந்த அணியை தொடர்ந்து மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரில் இந்தியா வீழ்த்துமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். இந்திய அணி 2018/19 மற்றும் 2020/21 பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியாவுக்கு சென்று விளையாடியது. … Read more

கொல்கத்தா அணி என்னை வெளியேற்றினால் இந்த அணிக்காக விளையாட விரும்புகிறேன் – ரிங்கு சிங்

புதுடெல்லி, நடந்து முடிந்த ஐ.பி.எல் (2024) தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த சில ஐ.பி.எல் தொடர்களில் கொல்கத்தா அணிக்காக அதிரடி ஆல்ரவுண்டர் ரிங்கு சிங் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக அவர் இந்திய அணியிலும் இடம் பிடித்து விளையாடி வருகிறார். இந்நிலையில் 2025-ம் ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்னர் கொல்கத்தா அணி எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும்? எந்தெந்த வீரர்களை வெளியேற்றும்? என்பது குறித்த … Read more

இனி இந்த கீப்பருக்கு ஐபிஎல் மட்டும்தான்… இந்திய அணியில் இடமே இல்லை – ஏன் தெரியுமா?

India National Cricket Team: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நிறைவடைந்ததை அடுத்து, 2025ஆம் ஆண்டில் இரண்டு ஐசிசி கோப்பைக்கான போட்டிகள் நடைபெற இருக்கின்றன. 2025 பிப்ரவரியில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரும் (ICC Champions Trophy 2025), ஜூனில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியும் (ICC World Test Championship Final 2025) நடைபெற இருக்கிறது. தற்போது டி20 உலகக் கோப்பைக்கு பின் இந்த இரண்டு கோப்பைகளையும்தான் இந்தியா குறிவைத்திருக்கிறது.  அந்த வகையில், … Read more

வங்காளதேசத்தில் மகளிர் டி20 உலகக்கோப்பையை விளையாடுவது தவறான செயலாகும் – ஆஸ்திரேலிய வீராங்கனை

மெல்போர்ன், மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வங்காளதேசத்தில் அக்டோபர் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அறிவித்திருந்தது. ஆனால், தற்போது வங்காளதேசத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரை வேறு இடத்திற்கு மாற்ற ஐ.சி.சி திட்டமிட்டுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரை இந்தியாவில் நடத்த பி.சி.சி.ஐ மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்நிலையில், யு.ஏ.இ, இலங்கை, ஜிம்பாப்வே ஆகிய 3 இடங்களில் ஏதாவது ஒன்றில் … Read more

வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்; பாகிஸ்தானின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் விலகல்

கராச்சி, வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. தொடரின் இரண்டு போட்டிகளும் ராவல்பிண்டியில் நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் அமீர் ஜமால் தொடரில் இருந்து … Read more

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்; ஜன்னிக் சின்னெர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

சின்சினாட்டி, சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரர்களான இத்தாலியின் ஜன்னிக் சின்னெர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 7-6 (11-9) என்ற புள்ளிக்கணக்கில் ஜன்னிக் சின்னெரும், 2வது செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரெவும் கைப்பற்றினர். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் அனல் பறந்தது. இரு வீரர்களும் … Read more

திருமண மோதிரத்தைக் கூட தொலைத்திருக்கிறார் ரோகித் சர்மா – டிரஸ்ஸிங் ரூம் ரகசியங்களை சொன்ன பயிற்சியாளர்

Rohit Sharma : ரோகித் சர்மாவைப் பற்றி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் பேட்டியளித்துள்ளார். அதில் ரோகித் சர்மாவின் டிரெஸ்ஸிங் ரூம் ரகசியங்களை எல்லாம் கூறியுள்ளார். ரோகித் சர்மா டிரெஸ்ஸிங் ரூமில் திருமண மோதிரங்களைக் கூட மறந்துவிட்டு சென்றிருக்கிறார் என்றும், ஆனால் மேட்சுக்கான வியூகங்களை ஒருபோதும் மறந்ததே இல்லை என பெருமிதமாக தெரிவித்துள்ளார். ரோகித் சர்மா வழக்கமாக ஐபேட், ஹெட்போன்களை எல்லாம் பலமுறை மறந்துவிட்டு சென்றிருக்கிறார். ஆனால் கேப்டனாக தான் செய்ய … Read more

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்! இந்த வீரர் இடம் பெற மாட்டார்!

Mohammed Shami: இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்ததை தொடர்ந்து தற்போது இந்திய அணி வீரர்கள் ஓய்வில் உள்ளனர். இலங்கை அணிக்கு எதிராக டி20 தொடரை இந்திய அணியும், ஒருநாள் தொடரை இலங்கையும் வென்று இருந்தது. இந்த சுற்றுப்பயணம் முடிந்ததைத் தொடர்ந்து அடுத்தபடியாக இந்திய அணி வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 19ம் தேதி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் … Read more