வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்; பாகிஸ்தானின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் விலகல்

கராச்சி, வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. தொடரின் இரண்டு போட்டிகளும் ராவல்பிண்டியில் நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் அமீர் ஜமால் தொடரில் இருந்து … Read more

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்; ஜன்னிக் சின்னெர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

சின்சினாட்டி, சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரர்களான இத்தாலியின் ஜன்னிக் சின்னெர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 7-6 (11-9) என்ற புள்ளிக்கணக்கில் ஜன்னிக் சின்னெரும், 2வது செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரெவும் கைப்பற்றினர். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் அனல் பறந்தது. இரு வீரர்களும் … Read more

திருமண மோதிரத்தைக் கூட தொலைத்திருக்கிறார் ரோகித் சர்மா – டிரஸ்ஸிங் ரூம் ரகசியங்களை சொன்ன பயிற்சியாளர்

Rohit Sharma : ரோகித் சர்மாவைப் பற்றி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் பேட்டியளித்துள்ளார். அதில் ரோகித் சர்மாவின் டிரெஸ்ஸிங் ரூம் ரகசியங்களை எல்லாம் கூறியுள்ளார். ரோகித் சர்மா டிரெஸ்ஸிங் ரூமில் திருமண மோதிரங்களைக் கூட மறந்துவிட்டு சென்றிருக்கிறார் என்றும், ஆனால் மேட்சுக்கான வியூகங்களை ஒருபோதும் மறந்ததே இல்லை என பெருமிதமாக தெரிவித்துள்ளார். ரோகித் சர்மா வழக்கமாக ஐபேட், ஹெட்போன்களை எல்லாம் பலமுறை மறந்துவிட்டு சென்றிருக்கிறார். ஆனால் கேப்டனாக தான் செய்ய … Read more

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்! இந்த வீரர் இடம் பெற மாட்டார்!

Mohammed Shami: இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்ததை தொடர்ந்து தற்போது இந்திய அணி வீரர்கள் ஓய்வில் உள்ளனர். இலங்கை அணிக்கு எதிராக டி20 தொடரை இந்திய அணியும், ஒருநாள் தொடரை இலங்கையும் வென்று இருந்தது. இந்த சுற்றுப்பயணம் முடிந்ததைத் தொடர்ந்து அடுத்தபடியாக இந்திய அணி வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 19ம் தேதி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் … Read more

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்! முக்கிய முடிவு எடுத்த பாட் கம்மின்ஸ்!

Border-Gavaskar series: பார்டர் கவாஸ்கர் டிராபி 2024-25 போட்டிகள் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இரண்டு அணிகளின் ரசிகர்களும் இந்த தொடருக்காக காத்து கொண்டுள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் 2 மாதம் ஓய்வு எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்தியாவிற்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாட இந்த ஓய்வு தேவை என்று குறிப்பிட்டுள்ளார். 1992க்குப் பிறகு முதல் முறையாக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா இந்தியாவை எதிர்கொள்கிறது. இதனால் தன்னை … Read more

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்; ஜெசிகா பெகுலா அரையிறுதிக்கு முன்னேற்றம்

சின்சினாட்டி, சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, கனடாவின் லேலா பெர்னாண்டஸ் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெசிகா பெகுலா 7-5, 6-7 (1-7), 7-6 (7-3) என்ற செட் கணக்கில் கனடாவின் லேலா பெர்னாண்டஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் … Read more

19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை – அட்டவணையை வெளியிட்ட ஐ.சி.சி

துபாய், 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 2023ம் ஆண்டு அறிமுகம் ஆனது. தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் பதிப்பில் இந்திய அணி கோப்பையை வென்றது. இந்நிலையில் 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான டி20 உலகக்கோப்பை தொடரின் 2வது பதிப்பு மலேசியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, மலேசியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை (குரூப்-ஏ), இங்கிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா (குரூப்-பி), தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, சமோவா, தகுதி சுற்று அணி (ஆப்பிரிக்கா … Read more

கோலி, ரோகித் அல்ல… அந்த வீரர் எங்கள் பவுலர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார் – நாதன் லயன்

மெல்போர்ன், இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர் கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. கடைசியாக நடைபெற்ற 4 பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தி உள்ளது. அதில் 2 முறை ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்தி … Read more

தென் ஆப்பிரிக்கா வெற்றி – டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் அணிகளின் தற்போதைய நிலை என்ன..?

துபாய், தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இந்த தொடரின் முதல் ஆட்டம் டிரா ஆனது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது போட்டி கயானாவில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 40 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா … Read more

பார்டர் கவாஸ்கர் கோப்பைக்காக தீவிரமாக தயாராகும் பேட் கம்மின்ஸ்

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான (2024/25) டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்திய அணி 2018/19 மற்றும் 2020/21 பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியாவுக்கு சென்று விளையாடியது. அந்த இரண்டு தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. மேலும் இந்தியா கடந்த 4 பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபியை தொடர்ச்சியாக வென்று அசத்தி உள்ளது. அந்த வரிசையில் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் … Read more