மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; அயர்லாந்துக்கு எதிராக இந்தியா பேட்டிங் தேர்வு

ராஜ்கோட், அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இந்த ஆட்டங்கள் ராஜ்கோட்டில் நடக்கிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இந்தியா – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் … Read more

ஓய்வு பெறுகிறேன்… புதிய கேப்டனை சீக்கிரம் பாருங்க – பிசிசிஐ கிட்ட சொன்ன ரோகித் சர்மா

Rohit Sharma retirement | இந்திய கிரிக்கெட் அணியின் முழுநேர கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோருட் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) மும்பையில் ஆலோசனை நடத்தியது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் தோற்றது குறித்து விரிவாக பேசப்பட்டது. அனைத்து விதமான சூழல்களும் இந்தக் கூட்டத்தில் பிசிசிஐ விவாதித்தது. அதில் குறிப்பாக இந்திய அணிக்கு புதிய கேப்டன் தேர்வு … Read more

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த வங்காளதேச முன்னணி வீரர்

டாக்கா, வங்காளதேச அணியின் அதிரடி தொடக்க வீரரும், முன்னாள் கேப்டனுமான தமிம் இக்பால் (வயது 35) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் வங்காளதேச அணிக்காக 70 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 5134 ரன்னும், 243 ஒருநாள் போட்டிகளில் ஆடி 8357 ரன்னும், 78 டி20 போட்டிகளில் ஆடி 1758 ரன்னும் அடித்துள்ளார். இவர் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதமே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால், அப்போதைய வங்காளதேச … Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்! இந்த மூன்று வீரர்களை கழட்டிவிடும் பிசிசிஐ!

ஐசிசி சாம்பியன் ட்ராபி 2025 போட்டிகள் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்க உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாம்பியன் டிராபிக்கான இந்திய அணியை பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் அறிவிக்கவில்லை. ஐசிசி-யிடம் கால அவகாசத்தை பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜனவரி 12ஆம் தேதி அணியை அறிவித்திருக்க வேண்டும். இதற்கிடையில் இந்திய … Read more

சாம்பியன்ஸ் டிராபி; அணியை அறிவிக்க கூடுதல் அவகாசம் கேட்கும் பி.சி.சி.ஐ

புதுடெல்லி, 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் பிப்ரவரி 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது. இதில் … Read more

இனி ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பில்லை… கேப்டனை மாற்றுமா சிஎஸ்கே?

India National Cricket Team: இந்திய அணிக்கு அடுத்த 2 மாதங்கள் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. கடந்தாண்டு டி20 உலகக் கோப்பை வென்றிருந்தாலும், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறாமல் போனது, இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. எனவே, பிப்ரவரியில் தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை எப்படியாவது வெல்ல வேண்டிய கட்டாயத்தில் ரோஹித் சர்மா – கம்பீர் கூட்டணி உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அனைத்து போட்டிகளும் துபாயில் நடைபெறுகிறது. சாம்பியன்ஸ் … Read more

தென் ஆப்பிரிக்க அணிக்கு தற்போது ஒரு ரத்தினம் கிடைத்துள்ளது – இளம் வீரரை பாராட்டிய தினேஷ் கார்த்திக்

கேப்டவுன், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றியது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி உள்ளது. தென் ஆப்பிரிக்க அணி சமீப காலமாகவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி வரை முன்னேறி அசத்தியது. தென் ஆப்பிரிக்க அணியில் தற்போது இளம் வீரரான க்வானா மகாபா தனது பந்துவீச்சால் அசத்தி வருகிறார். … Read more

IND vs ENG: சுப்மன் கில் சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனை செய்ய கோல்டன் சான்ஸ்..!

Shubman Gill | இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சுப்மன் கில் சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனை செய்ய ஒரு கோல்டன் சான்ஸ் இருக்கிறது. அதாவது, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 2500 ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்ற சாதனை இவர் வசம் வர வாய்ப்புள்ளது.   சுப்மன் கில் இதுவரை சுப்மன் … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு – முகமதின் அணிகள் இன்று மோதல்

பெங்களூரு , 13 அணிகளுக்கு இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. அதன்படி, பெங்களூருவில் மாலை 5.00 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் பெங்களூரு – முகமதின் அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு அசாமில் நடைபெற உள்ள ஆட்டத்தில் மோகன் பகான் – ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதுகின்றன. தினத்தந்தி Related Tags … Read more

Neeraj Chopra: 2024-ன் உலகின் சிறந்த ஈட்டி எறிதல் வீரராக நீரஜ் சோப்ரா தேர்வு

Neeraj Chopra: ‘Track and Field News’ என்ற அமெரிக்க பத்திரிக்கையில் 2024ஆம் ஆண்டின் உலகின் சிறந்த ஆண் ஈட்டி எறிதல் வீரராக இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் அவர் தனது வாழ்க்கையில் புதிய மைல்கல்லை அடைந்துள்ளார்.  27 வயதான இவர் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றது உட்பட பல்வேறு சிறப்புச் செயல்திறனுக்குப் பின் அவர் இந்த இடத்தை பிடித்துள்ளார். இந்த Track and Feild News பத்திரிக்கையில் நீரஜ் … Read more