IND vs NZ Test | 2004 மாயாஜாலம் நாளை பெங்களூரில் நடக்குமா? எதிர்பார்க்கும் இந்திய அணி

IND vs NZ Test Latest Updates Tamil : இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 107 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. நான்கு நாள் ஆட்டம் முடிவடைந்திருக்கும் நிலையில், இன்னும் ஒருநாள் ஆட்டம் எஞ்சியிருக்கிறது. நாளை நடைபெறும் கடைசி மற்றும் 5வது நாள் ஆட்டத்தில் இந்திய அணிக்கு ஏதேனும் மாயாஜாலம் நடந்தால் மட்டுமே … Read more

'நீங்க வந்தா மட்டும் போதும்…' பிசிசிஐக்கு புது ஐடியாவை கொடுத்த பாகிஸ்தான் – திட்டம் கைக்கொடுக்குமா?

India National Cricket Team: இந்தியா – பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட்டில் மோதிக்கொள்வது எப்போதும் பரபரப்பான ஒன்றுதான். ஆனால் தற்போது இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகளை பார்க்க ரசிகர்கள் தவம் கிடக்க வேண்டியதாகிவிட்டது. 2008ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின், இந்தியா பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை நிறுத்திவிட்டது. ஐபிஎல் போட்டிகளிலும் அதன்பின்னர் பாகிஸ்தான் வீரர்கள் கலந்துகொள்ளவில்லை. 2012-13 காலகட்டங்களில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணி (Team Pakistan) சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதன்பின் பாகிஸ்தான் அணியும் … Read more

டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 ஆயிரம் ரன்கள்…4-வது இந்திய வீரராக சாதனை படைத்த விராட் கோலி

பெங்களூரு, இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மழை காரணமான முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்ட நிலையில், நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் … Read more

சர்பராஸ்-கோலி அபார ஆட்டம்; 3ம் நாள் முடிவில் இந்தியா 231/3

பெங்களூரு, இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மழை காரணமான முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்ட நிலையில், நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் … Read more

ரஞ்சி டிராபி; சாய் சுதர்சன் இரட்டை சதம்… முதல் நாள் முடிவில் தமிழகம் 379 ரன்கள் குவிப்பு

டெல்லி, நடப்பு சீசனுக்கான (2024-25) ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் குரூப் டி பிரிவில் டெல்லியில் இன்று தொடங்கிய லீக் ஆட்டத்தில் தமிழகம் – டெல்லி அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற டெல்லி அணி முதலில் பீல்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாய் சுதர்சன் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் நிதானமாக இன்னிங்சை … Read more

பெங்களூரு டெஸ்டில் இந்திய அணிக்கு சகுணமே சரியில்லை, 2 விக்கெட் இப்படியா விழும்

India New Zealand Test Cricket News Tamil : இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான விளையாடும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் பெங்களூருவில் நடக்கிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி படுமோசமாக பேட்டிங் ஆடி 46 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அட்டகாசமாக பந்துவீசிய நியூசிலாந்து அணியில் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், வில்லியம் 4 விக்கெட்டுகளையும் அள்ளினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸ் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி அற்புதமாக பேட்டிங்கும் செய்தது. அந்த அணியில் டாப் ஆர்டர் … Read more

கேமரூன் க்ரீன் இல்லாதது ஆஸ்திரேலியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா..? – ஸ்டார்க் பதில்

மெல்போர்ன், இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. ஏற்கனவே கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை கைப்பற்றும் முனைப்புடன் காத்திருக்கிறது. அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய … Read more

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடர்; இலங்கை அணி அறிவிப்பு

கொழும்பு, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் வரும் 20ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் தொடரின் போட்டிகள் அனைத்தும் பல்லகலேவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சரித் … Read more

இந்திய அணியை தூக்கிச் சாப்பிட்ட வில் ஓ ரூர்க்… ஐபிஎல் ஏலத்தில் இந்த 3 அணிகள் கொக்கி போடும்!

IPL Mega Auction 2025: ஐபிஎல் மெகா ஏலம் குறித்த விதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டது. அக். 31ஆம் தேதிக்குள் 10 அணிகளும் தாங்கள் யாரை மெகா ஏலத்திற்கு முன் தக்கவைக்கிறோம் என்ற பட்டியலை அறிவிக்க வேண்டும். அதில், யார் யாரை எந்தெந்த தொகையில் அணிகள் தக்கவைக்கிறது என்பதை அறியவும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இன்னும் 13 நாள்களே உள்ளது என்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பும் உச்சத்தை நெருங்கி வருகிறது.  ஐபிஎல் தக்கவைப்பு ஒருபுறம் இருக்க ஐபிஎல் மெகா ஏலம் … Read more

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனை படைத்த இந்தியா

பெங்களூரு, இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி நடந்து வருகிறது. மழை காரணமான முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்ட நிலையில், இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார் அதன்படி இந்திய அணி முதலில் … Read more