இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்; முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 366 ரன்கள் குவிப்பு

முல்தான், இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி முல்தானில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அப்துல்லா ஷபீக் மற்றும் சைம் அயூப் ஆகியோர் … Read more

IND vs NZ: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்! இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு!

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று முதல் தொடங்குகிறது. இதற்கான பயிற்சியை கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்தியா தொடங்கியது. சமீபத்தில் நடந்து முடிந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வென்றது. இந்த வெற்றியுடன் நியூசிலாந்து தொடரை எதிர்கொள்கிறது. இந்த அணியில் யாஷ் தயாளுக்கு பதிலாக அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் முதல் … Read more

இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட்: மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்

பெங்களூரு, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் அந்த வகையில் இரு அணிக்கும் இந்த தொடர் முக்கியத்துவம் பெறுகிறது இந்த நிலையில், பெங்களுருவில் போட்டி நடைபெறும் பகுதியில் மழை பெய்து வருவதால் இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. … Read more

முகமது ஷமிக்கு மீண்டும் காயம்! இனி கிரிக்கெட் விளையாடுவது கஷ்டம்?

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதால் சர்வதேச அணிக்கு திரும்புவது இன்னும் தாமதமாகலாம் என்று சமீபத்தில் செய்திகள் வெளியானது. இதனை இந்திய கேப்டன் ரோஹித் சர்மா உறுதிப்படுத்தினார். முகமது ஷமி கடைசியாக 2023 உலக கோப்பையில் விளையாடினார். அதன் பிறகு எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்கவில்லை. இந்த ஆண்டு பிப்ரவரியில் அவரது வலது குதிகால் தசைநார் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் பயிற்சியில் ஈடுபட … Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் என்னிடம் எதுவும் இதுவரை கூறவில்லை – சமீர் ரிஸ்வி

Chennai Super Kings News Tamil Latest : ஐபிஎல் 2025 தொடருக்கு முன் மொத்தம் உள்ள 10 அணிகளும் 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். ஆர்டிஎம் மூலம் 2 பிளேயர்களை ரீட்டெயின் செய்து கொள்ளவும் ஐபிஎல் நிர்வாகம், அனைத்து அணிகளுக்கும் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் விரைவில் ஒவ்வொரு ஐபிஎல் அணியிலும் தக்க வைத்த பிளேயர்கள் லிஸ்ட்டை ஐபிஎல் நிர்வாகத்திடம் ஒப்படைக்கிறது. அப்போது, எந்தெந்த பிளேயர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற விவரம் தெரியவரும். குறிப்பாக, மும்பை … Read more

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் விலகல்

பெங்களூரு, நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரின் ஆட்டங்கள் பெங்களூரு, புனே, மும்பை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையிலும், நியூசிலாந்து அணி டாம் லதாம் … Read more

பெண்கள் டி20 உலகக்கோப்பை; இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்

துபாய், 9-வது பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.’ஏ’ பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறும் கடைசி லீக் போட்டியில் ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி, … Read more

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம்

ஒடென்ஸ், டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்ஸ் நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய இளம் நட்சத்திர வீரர் லக்ஷயா சென், சீனாவின் லூ குயாங் சூவை சந்திக்கிறார். பெண்கள் ஒற்றையர் பிரிவில், ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரான இந்திய முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து தனது முதலாவது ஆட்டத்தில் சீன தைபேயின் பாய் யு போவை எதிர்கொள்கிறார். மாளவிகா பன்சோத், ஆகர்ஷி காஷ்யப், உன்னதி ஹூடா … Read more

CSK: பலமான அணியை உருவாக்க… ஏலத்தில் இந்த 3 ஆஸ்திரேலிய வீரர்களை சிஎஸ்கே எடுக்கும்!

IPL 2025 Mega Auction: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) ஐபிஎல் தொடரிலேயே வெற்றிகரமான அணிகளுள் ஒன்றாகும். சிஎஸ்கே அணியும் மும்பை அணியும்தான் தலா 5 முறை சாம்பியனாக கோப்பையை கைப்பற்றி உள்ளன. மொத்தம் 17 சீசன்களில் இந்த அணிகளே 10 முறை கோப்பையை வென்றுவிட்டன. இதில் சிஎஸ்கே அணி 2010, 2011ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றது. அதன் பின்னர் சுமார் 6 ஆண்டுகள் கழித்து 2018ஆம் ஆண்டில் கோப்பையை வென்றது.  … Read more

இங்கிலாந்து-பாகிஸ்தான் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

முல்தான், பாகிஸ்தானுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முல்தானில் நடந்த தொடக்க டெஸ்டில் இங்கிலாந்து 823 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்ததுடன் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அதே முல்தானில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. அதுவும் முதல் டெஸ்டுக்குரிய அதே ஆடுகளமே இந்த டெஸ்டுக்கும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தசைப்பிடிப்பால் கடந்த டெஸ்டில் ஆடாத … Read more