Rewind 2024: இந்திய அணி சந்தித்த மெகா தோல்விகளும்… பெரிய பின்னடைவுகளும்…

India Nationa Cricket Team Defeats, Rewind 2024: இந்திய ஆடவர் சீனியர் கிரிக்கெட் அணிக்கு இந்தாண்டு ஏற்ற இறக்கமான ஆண்டாக அமைந்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் ஐசிசி உலகக் கோப்பை இறுதிப்போட்டி இரண்டையும் தவறிவிட்ட இந்திய அணி ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்றது இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.  2024ஆம் ஆண்டில் இந்திய அணி பல மாற்றங்களை சந்தித்துள்ளது. டி20 உலகக் கோப்பையை வென்ற பின்னர் இந்திய … Read more

IND vs AUS: 4வது டெஸ்டில் தோல்விக்கு பிறகு ரோஹித் சர்மா சொன்ன முக்கிய விஷயம்!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்று போட்டிக்கு பிந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். நான்காவது இன்னிங்ஸில் இந்திய அணி போராடத் தவறியது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். ஐந்து போட்டியில் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தற்போது 1-2 என்ற கணக்கில் உள்ளது. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் வரும் ஜனவரி 3ஆம் தேதி நடைபெற உள்ளது. … Read more

பாக்சிங் டே டெஸ்ட்: இந்தியா வெற்றிபெற 340 ரன்கள் இலக்கு

மொல்போர்ன், இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் 4வது டெஸ்ட் போட்டி கடந்த 26ம் தேதி தொடங்கியது. பாக்சிங் டே என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, 105 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 234 ரன்களுக்கு ஆல் அவுட் … Read more

ஆக்கி இந்தியா லீக்: தமிழக அணி தோல்வி

ரூர்கேலா, 8 அணிகள் இடையிலான 6-வது ஆக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசாவில் உள்ள ரூர்கேலாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் நேற்றிரவு நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் சூர்மா ஆக்கி கிளப்- தமிழ்நாடு டிராகன்ஸ் அணிகள் மல்லுக்கட்டின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேரத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. இதையடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க ஷூட்-அவுட் விதி கடைப்பிடிக்கப்பட்டது. இதில் சூர்மா கிளப் 4-1 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு டிராகன்ஸ் … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை சிட்டி – நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இன்று மோதல்

மும்பை, 13 அணிகளுக்கு இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மும்பை சிட்டி – நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன. இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை சிட்டி 5 வெற்றி, 5 டிரா, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. அதேபோல 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள நார்த் ஈஸ்ட் யுனைடெட் … Read more

ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; கேரளா பிளாஸ்டர்ஸை வீழ்த்திய ஜாம்ஷெட்பூர் எப்.சி

ஜார்க்கண்ட், 13 அணிகளுக்கு இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஜார்க்கண்டில் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி – கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி முடிந்தது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி ஒரு … Read more

'உங்கள் சேவைக்கு நன்றி' – ரோஹித் ஷர்மாவின் ஓய்வு தேதி இதுதான்!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். பேட்டிங் மற்றும் கேப்டன்சி என மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் அதிக அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளார். ரோஹித் சர்மா கடைசியாக விளையாடிய 8 டெஸ்ட் இன்னிங்ஸில் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ரோஹித் சர்மா ரன்கள் அடிக்க சிரமப்பட்டு வருகிறார். மேலும் அதன் பிறகு நடைபெற்ற நியூஸிலாந்துக்கு … Read more

புரோ கபடி லீக்; பாட்னாவை வீழ்த்தி சாம்பியனான அரியானா ஸ்டீலர்ஸ்

புனே, 12 அணிகள் பங்கேற்ற 11-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த அக்டோபர் மாதம் 18-ந் தேதி தொடங்கியது. இந்த கபடி திருவிழாவில் லீக், நாக்-அவுட் சுற்று, அரையிறுதி ஆட்டங்களின் முடிவில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியும், பாட்னா பைரேட்ஸ் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி புனேவில் இன்று நடைபெற்றது. தொடக்கம் முதலே இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன. முதல் … Read more

இந்தியாவுக்கு பெரிய ஆப்பு… WTC இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா – பாவம் பாகிஸ்தான்!

Latest Cricket News: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றியை பெற்று ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. இது இந்திய அணிக்கு எவ்வளவு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது என்பதை இங்கு காணலாம். கிரிக்கெட் உலகமே தற்போது பரபரப்பாக கட்டத்தில் இருக்கிறது எனலாம். கடந்த நான்கு நாள்களாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கேட்டால் காலை 4.30 மணியில் இருந்து மதியம் 12.30 மணிவரை ஆஸ்திரேலியா – இந்தியா மோதும் பாக்ஸிங் டே … Read more

மெல்போர்ன் டெஸ்ட் : இந்திய அணி வெற்றி பெறுமா? இதுவரை அதிகபட்ச சேஸ் இதுதான்..!

India vs Australia 4th Test | இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் தொடரின் பாக்சிங் டே டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நான்கு நாட்கள் ஆட்டம் முடிவடைந்திருக்கும் நிலையில் இன்னும் ஒருநாள் ஆட்டம், அதாவது 5வது நாள் ஆட்டம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. நாளை  நடைபெறும் 5வது நாள் ஆட்டத்தில் இரு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்திய அணியின் பேட்டிங் மட்டும் சிறப்பாக இருந்துவிட்டால் … Read more