இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா நியமனம் – ரசிகர்கள் மகிழ்ச்சி

கொழும்பு, டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஹசரங்கா தலைமையிலான இலங்கை அணி ஒரு வெற்றி, இரு தோல்வி, ஒரு முடிவில்லை என 3 புள்ளிகள் மட்டுமே பெற்று லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த தோல்வி எதிரொலியாக இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கிறிஸ் சில்வர்வுட் (இங்கிலாந்து) தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் முதல் இலங்கை அணியின் பயிற்சியாளராக இருந்த சில்வர்வுட் திடீரென பதவியை ராஜினாமா செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது … Read more

கோபா அமெரிக்க கால்பந்து: பனாமாவை பந்தாடி அரையிறுதிக்கு முன்னேறிய கொலம்பியா

லாஸ்வேகஸ், 48-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் நேற்று காலை லாஸ்வேகசில் கால்இறுதியின் கடைசி ஆட்டத்தில் கொலம்பியா – பனாமா அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கொலம்பியா 5-0 என்ற கோல் கணக்கில் பனாமாவை பந்தாடி அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் உருகுவே அணி, கொலம்பியாவை சந்திக்கிறது. மற்றொரு அரையிறுதியில் அர்ஜென்டினா, கனடாவுடன் மோத உள்ளது. தினத்தந்தி Related Tags : கால்பந்து  கொலம்பியா  Copa America  football  … Read more

நாங்கள் செய்த தவறுகள்தான் தோல்விக்கு காரணம் – ஜிம்பாப்வே கேப்டன் பேட்டி

ஹராரே, சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 234 … Read more

விம்பிள்டன் டென்னிஸ்: கோகோ காப் அதிர்ச்சி தோல்வி

லண்டன், ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காப், சக நாட்டவரான எம்மா நவரோவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட கோகோ காப் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 4-6, 3-6 என்ற புள்ளிக்கணக்கில் எம்மா நவரோவிடம் அதிர்ச்சி … Read more

ஒருபோட்டியில் கூட விளையாடாமல் கோடி கணக்கில் சம்பாதித்த ரிங்கு சிங்! எப்படி தெரியுமா?

2024 டி20 உலக கோப்பையை இந்திய அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு  வென்றுள்ளது. டி20 உலக கோப்பையின் முதல் பதிப்பில் 2007ம் ஆண்டு தோனி தலைமையில் இந்திய அணி வென்றது. அதன் பிறகு தற்போது ரோஹித் சர்மா தலைமையில் வெற்றி பெற்றுள்ளது. இந்த உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது. ஆரம்பத்தில் ரோஹித் சர்மா கேப்டனா? அல்லது ஹர்திக் பாண்டியா கேப்டனா என்ற குழப்பம் இருந்து … Read more

இந்த பிரபல பாலிவுட் நடிகையை திருமணம் செய்ய இருக்கும் குல்தீப் யாதவ்?

கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி 17 வருடங்களுக்கு பிறகு கோப்பையை வென்றது. இந்திய வீரர்களுக்கு பல தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தது. பிறகு கோப்பையுடன் தனி விமானம் மூலம் இந்திய அணி வீரர்கள் டெல்லி வந்தடைந்தனர். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதன் பிறகு, … Read more

125 கோடி ரூபாய் பரிசு… அதில் ரோஹித், விராட் பங்கு எவ்வளவு தெரியுமா? இவர்களுக்கும் உண்டு

India National Cricket Team: நடந்து முடிந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 (ICC T20 World Cup 2024) தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. சுமார் 17 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது. அதுமட்டுமின்றி கடந்த 11 ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை இல்லாமல் தவித்து வந்த இந்திய ரசிகர்களுக்கு ரோஹித் சர்மா விடியலை தந்தார் எனலாம். கபில் தேவ், தோனிக்கு பிறகு ஐசிசி கோப்பையை ரோஹித் … Read more

வந்தாச்சு இந்த 3 பேர்… இந்திய அணி பிளேயிங் லெவனில் மாற்றம் உறுதி – யாருக்கு பதில் யாருக்கு வாய்ப்பு?

IND vs ZIM Playing XI Changes: சுப்மன் கில் தலைமையிலான இந்திய இளம் அணி தற்போது ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்நாட்டின் தலைநகர் ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஜிம்பாவ்வே – இந்தியா மோதி வருகின்றன. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் நடைபெற்ற முதலிரண்டு டி20 போட்டிகளில் முறையே ஜிம்பாப்வே, இந்தியா வெற்றி பெற்று, தொடர் 1-1 என்ற நிலையில் உள்ளது.  இந்த … Read more

இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் – கவாஸ்கர் கோரிக்கை

மும்பை, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடருடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றனர். அதே போல பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் வெற்றியுடன் விடைபெற்றார். ஒரு வீரராக இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ராகுல் டிராவிட் ஓய்வுக்குப் பின் அண்டர்-19 மற்றும் இந்தியா ஏ அணிகளின் பயிற்சியாளராகவும் என்.சி.ஏ. … Read more

தமிழக பள்ளி அணிகளுக்கான லீக் ஆக்கி போட்டி 38 மாவட்டங்களில் நேற்று தொடங்கியது

சென்னை, தமிழ்நாடு ஆக்கி அமைப்பு சார்பில் பள்ளி அணிகளுக்கான லீக் போட்டி நடத்தப்படுகிறது. ஆக்கி விளையாட்டை வளர்க்கும் பொருட்டு முதல்முறையாக நடத்தப்படும் இந்த போட்டி சென்னை உள்பட 38 மாவட்டங்களில் நேற்று தொடங்கியது. சென்னையில் நடைபெறும் போட்டியில் 10 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறும் அணிகள் மண்டல போட்டிக்கு முன்னேறும். மண்டல போட்டி சென்னை, வேலூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் வருகிற 20, 21 ஆகிய … Read more