யாஷ் தயாள் குறித்து வர்ணனையாளர் முரளி கார்த்திக்கின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

பெங்களூரு, ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 6-வது லீக் போட்டியில் பஞ்சாப்-பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த பஞ்சாப் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணி 19.2 ஓவரில் 178 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெங்களூரு அணிக்காக விளையாடிய யாஷ் தயாள் 4 ஓவரில் 23 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தியிருந்தார். … Read more

ஐ.பி.எல்; சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு

சென்னை, 17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த 22-ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று சென்னையில் நடைபெறும் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோத உள்ளன. இரு அணிகளும் தங்களது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. இதையடுத்து இரு அணிகளும் தங்களது 2வது வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இந்த போட்டியில் … Read more

CSK vs GT: முஸ்தாபிசுர்க்கு பதில் பதிரானா? சென்னை அணி எடுத்த முக்கிய முடிவு!

Chennai Super Kings vs Gujarat Titans: இந்தியன் பிரீமியர் லீக் 2024ன் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகிறது.  இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.  இந்த இரண்டு அணிகளும் கடைசியாக ஐபிஎல் 2023 பைனலில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் விளையாடியது. கடைசி பந்துவரை இருந்த பரபரப்புக்கு மத்தியில் ஜடேஜா சென்னை அணிக்கு 5வது கோப்பையை வெற்றி பெற்று கொடுத்தார். அதற்கு பலி தீர்க்கும் விதமாக சென்னையில் … Read more

RCB vs PBKS: விராட் கோலி கொடுத்த மாஸ் ஸ்பீச்! என்ன செய்ய போகிறது பிசிசிஐ?

பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.  இதன் மூலம் ஐபிஎல் 2024ல் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது.  இரண்டு அணிகளுக்கும் வெற்றி பெரும் வாய்ப்பு இருந்த இந்த போட்டியில் விராட் கோலி 49 பந்தில் 77 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். முதல் ஓவரில் இருந்தே அதிரடி காமித்த விராட் கோலி தான் ஒரு சிறந்த … Read more

ஐ.பி.எல். வரலாற்றில் நெஹ்ராவின் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்த டிரெண்ட் போல்ட்

ஜெய்ப்பூர், நடப்பு ஐ.பி.எல். தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் லக்னோ அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோல்வியை தழுவியது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளரான டிரெண்ட் பவுல்ட் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் ஐ.பி.எல்.ல் அவரது விக்கெட் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்தது. இதன் மூலம் ஐ.பி.எல்.வரலாற்றில் அதிக … Read more

ஐ.பி.எல்; பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சு தேர்வு

பெங்களூரு, நடப்பு ஐ.பி.எல் தொடரின் 6-வது லீக் ஆட்டத்தில் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. தினத்தந்தி Related Tags : … Read more

கடைசி 2 ஓவரில் மொத்த போட்டியை ஆர்சிபி பக்கம் மாத்திய தினேஷ் கார்த்திக்!

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 6ஆவது லீக் போட்டி நடைபெற்றது. டாஸ் வெற்றி பெற்ற ஆர்சிபி கேப்டன் டூப்ளிசிஸ் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் ஆடியது. ஓபனிங் பேட்ஸ்மேன்களாக பேரிஸ்டோவ், ஷிகர் தவான் களமிறங்கினர். பேரிஸ்டோவ் 8 ரன்களுக்கு அவுட் ஆக, ஷிகர் தவான் 45 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவருக்கு பின் களம் இறங்கிய … Read more

உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று: இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மீண்டும் நாளை மோதல்

அபா, ஆண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர், 2026ல் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடக்கவுள்ளது. இதற்கான ஆசிய பிரிவு இரண்டாவது கட்ட தகுதிச் சுற்றில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில், குவைத், கத்தார், ஆப்கானிஸ்தானுடன் இடம் பெற்றுள்ளது. இதில் இந்திய அணி, தனது முதலாவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் மோதியது. அந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதனையடுத்து இந்தியா, தனது அடுத்த ஆட்டத்தில் மீண்டும் ஆப்கானிஸ்தானுடன் நாளை மோத உள்ளது. இந்த ஆட்டம் அசாம் மாநிலத்தில் உள்ள இந்திரா … Read more

டூப்ளிகேட் தவானை பார்த்து விராட் கோலி கொடுத்த ரியாக்ஷன்! தவானே ஆச்சரியப்பட்டுட்டார்

பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 6வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற ஆர்சிபி கேப்டன் பாப் டூபிளெசிஸ் நேரடியாக பவுலிங் செய்வதாக அறிவித்தார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் அந்த அணயின் கேப்டன் ஷிகர் தவான், பேரிஸ்டோவ் ஓப்பனிங் இறங்கினர். தவான் ஒரு நிதானமாக ஆடினாலும் பேரிஸ்டோவ் இந்த போட்டியிலும் பேட்டிங்கில் சொதப்பினார். 6 பந்துகளில் 2 பவுண்டரி அடித்து 8 … Read more

அதை செய்தால் மட்டுமே பாண்ட்யா ரசிகர்களின் ஆதரவை பெற முடியும் – பிரையன் லாரா

அகமதாபாத், நடப்பு ஐ.பி.எல். தொடரின் 5-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. இதில் மும்பை அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது. முன்னதாக இந்த சீசனில் கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மாவை நீக்கிய மும்பை அணி நிர்வாகம் அவருக்கு பதிலாக குஜராத் அணியிலிருந்து ஹர்திக் பாண்ட்யாவை வாங்கி அவரை கேப்டனாக நியமித்தது ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களை ஏற்படுத்தியது. … Read more