இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: கேஸ்பர் ரூட்டை வீழ்த்தி டாமி பால் அரைஇறுதிக்கு முன்னேற்றம்

இண்டியன்வெல்ஸ், இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற கால்இறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீரர் டாமி பால், நார்வே வீரர் கேஸ்பர் ரூட்டுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் டாமி பால், 6-2, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் கேஸ்பர் ரூட்டை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். தினத்தந்தி Related Tags : Indian Wells Tennis  Tommy Ball  Casper Rudd  … Read more

பெண்கள் பிரிமீயர் லீக்: வெளியேற்றுதல் சுற்று – மும்பை – பெங்களூரு அணிகள் இன்று மோதல்

புதுடெல்லி, 2-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. கடைசி இரு இடத்துக்கு தள்ளப்பட்ட உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் வெளியேறின. 2-வது, 3-வது இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் வெளியேற்றுதல் சுற்றில் இன்று (வெள்ளிக்கிழமை) மோதுகின்றன. இதில் வெற்றி … Read more

சூப்பர் டிவிசன் ஆக்கி: ஸ்டேட் வங்கி, தமிழ்நாடு போலீஸ் அணிகள் வெற்றி

சென்னை, சென்னை ஆக்கி சங்கம் சார்பில் 59-வது சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஸ்டேட் வங்கி அணி 4-1 என்ற கோல் கணக்கில் சென்னை மாநகர போலீசை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் 8-1 என்ற கோல் கணக்கில் அடையார் யுனைடெட் கிளப்பை துவம்சம் செய்தது. இன்று நடைபெறும் ஆட்டங்களில் ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரி … Read more

Yuvraj Singh: ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன்ஸி கொடுத்தது தவறு – யுவராஜ் சிங் தடலாடி

Yuvraj Singh About Mumbai Indians Captaincy: ஐபிஎல் என பொதுவாக அழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. தற்போது முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் மீதம் உள்ள போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகும் என தெரிகிறது.  முதற்கட்ட போட்டிகள் … Read more

ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணியின் டாப் 5 பேட்ஸ்மேன்கள்..!

Mumbai Indians Batting line-up: ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த ஆண்டு ஐபிஎல் 2023 தொடரில் நான்காவது இடத்தைப் பிடித்தது. இந்தமுறை மிகப்பெரிய மாற்றமாக அந்த அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டு இந்த முறை ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் விளையாட இருக்கிறார். ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக இம்முறை களமிறங்க இருக்கிறார். இதனால் அந்த அணியில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் … Read more

டெல்லி குடும்பத்தினருடன் இணைந்து ரசிகர்கள் முன் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன் – ரிஷப் பண்ட்

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கி படுகாயத்துடன் உயிர் தப்பினார். காயத்தில் இருந்து குணமடைந்து பயிற்சியை தொடங்கிய அவர் முழு உடல்தகுதியை எட்டி விட்டதாக இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று முன்தினம் அறிவித்தது. இதனால் அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக மறுபிரவேசம் செய்கிறார். உடல்தகுதியை எட்டிய பிறகு ரிஷப் பண்ட் அளித்த பேட்டியில் கூறியதாவது:- இது போன்ற … Read more

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: அலெக்சாண்டர் ஸ்வெரேவ், ஜானிக் சின்னர் கால்இறுதிக்கு முன்னேற்றம்

இண்டியன்வெல்ஸ், இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், 3-ம் நிலை வீரருமான ஜானிக் சின்னர் (இத்தாலி), பென் ஷெல்டனுடன் (அமெரிக்கா) மோதினார். இந்த போட்டியில் ஜானிக் சின்னர் 7-6 (7-4), 6-1 என்ற செட் கணக்கில் பென் ஷெல்டனை போராடி வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார். 22 வயதான சின்னர் தொடர்ச்சியாக பெற்ற 18-வது … Read more

என்னை குணப்படுத்தும் பயணத்தின் அடுத்த கட்டத்தை எதிர்நோக்கி உள்ளேன் – உடல்தகுதி குறித்து ஷமி பதிவு

பெங்களூரு, இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 33 வயதான முகமது ஷமி கடைசியாக கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடி 24 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த தொடரின் போது அவருக்கு இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதன் பின்னர் அவர் எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. அவருக்கு கடந்த மாதம் இறுதியில் லண்டனில் வெற்றிகரமாக ஆபரேஷன் நடந்தது. இந்த நிலையில் காயத்தன்மை குறித்து அவர் நேற்று எக்ஸ் பக்கத்தில், ‘எனது உடல்நலம் … Read more

சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: தபால் துறை அணியை வீழ்த்தி ஏ.ஜி.அலுவலக அணி வெற்றி

சென்னை, 59-வது சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் ஏ.ஜி. அலுவலகம் – தமிழ்நாடு தபால் துறை அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி கோல் மழை பொழிந்த ஏ.ஜி. அலுவலக அணி 7-0 என்ற கோல் கணக்கில் தபால் துறை அணியை தோற்கடித்தது. ஏ.ஜி.அலுவலக அணியில் மகேந்திரன் 2 கோலும், வினோத் குமார், தங்கராஜ், அப்ரோன், … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி மோகன் பகான் வெற்றி

கொச்சி, 12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கொச்சியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் – மோகன் பகான் அணிகள் மோதின. இந்த போட்டியில் மோகன் பகான் அணி சார்பில் அர்மாண்டோ சாதிகு ஆட்டத்தின் 4 மற்றும் 60-வது நிமிடத்தில் என இரண்டு கோல்கள் அடித்தார். மேலும், தீபக் டாங்ரி ஆட்டத்தின் 68-வது நிமிடத்திலும் ஜேசன் கம்மிங்ஸ் 90+7 வது … Read more